ஹன்சிகா விவாகரத்தானவரை திருமணம் செய்ததே தப்பு.. பிரச்சனைக்கு காரணமே இதுதான்.. பிரபலம் பளீச்!

சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது காதல் கணவர் சோஹேல் கதூரியா பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. திருமணமாகி இரண்டு வருடமே ஆன நிலையில், இவர்களின் பிரிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து Realone Media யூடியூப் சேனலுக்கு சேகுவேரா பேசி உள்ளார். இதில் பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், ஹன்சிகா மோத்வானியும் அவரது கணவரும் திருமணமாகி இரண்டு மாதங்கள் மட்டும் தான் சேர்ந்து வாழ்ந்தார்கள். அதன் பிறகு ஒரே வீட்டிலேயே தனித்தனியாக வாழ்ந்து வந்தார்கள். அப்போதும் சரிப்பட்டு வரவில்லை, இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, ஹன்சிகா தனது தாயுடனும் அவரது கணவர் பெற்றோருடனும் வசித்து வருகிறார்கள். இந்த செய்தி பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, உண்மையிலேயே இருவரும் பிரிகிறார்களா... இல்லையா என பலரும் கேட்டு வருகின்றனர். இந்த செய்தி உண்மையானது தான்.

hansika motwani Divorce Cheguvera
Photo Credit:

சேகுவேரா: ஹன்சிகா அவரது தோழியின் கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்தாலும், காதலிக்கும் போது ஒரு மனநிலை இருக்கும், திருமணத்திற்கு பின் வேறு மனநிலை இருக்கும். காதலிக்கும் போது ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டதாக அவர்களே நினைத்துக்கொள்வார்கள். ஆனால், திருமணத்திற்கு பிறகு ஒருவர் மீது உரிமை கொண்டாடப்படும். அப்போது தான் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுகிறது அதுதான் ஹன்சிகாவின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. எதுவாக இருந்தாலும், ஹன்சிகா திருமணமானவரை திருமணம் செய்து கொண்டது தவறு, அவர் விவாகரத்து பெற்று இருந்தாலும் அவர் ஏற்கனவே திருமணமானவர் தான். ஒரு காகிதத்தால் அவர்களின் உறவை பிரிந்து விடமுடியாது. இரண்டாம் திருமணம் செய்து கொண்டவர்கள் எல்லாம் விதியே என்று தான் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். சும்மா பெருமைக்கு வேண்டுமானால், விவாகரத்தானவரை திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்லலாம். ஆனால், அப்படி ஒரு வாழ்க்கையை வாழவேமுடியாது என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

இரண்டு வருட வாழ்க்கை: நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு கல் ஒரு கண்ணடி, எங்கேயும் காதல், தீய வேலை செய்யனும் குமாரு, சேட்டை, வேலாயுதம், வாலு என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப்படத்திலும் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, 2022 ஆம் ஆண்டு தனது தோழியின் கணவர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் தடபுடலாக நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X