ஆபரேஷனுக்கு கூட பணம் இல்லை.. கடைசி நேரத்தில் மனவேதனையில் மனோஜ்.. பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

சென்னை: பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். அவரது மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள நிலையில், பத்திரிக்கையாளர் ஒருவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பாரதி ராஜா, மனோஜ் இருவரும் பணத்திற்காக மிகவும் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கிறது. ஆனால், பணம் இல்லை என்றார்.

மனோஜ் பாரதிராஜாவிற்கு என்ன பிரச்சனை எதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், என்னை பொறுத்தவரை மனோஜ் ஒரு நல்ல மனிதர். தன்னுடைய தந்தை சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையான இயக்குநராக இருக்கும் போது, தன்னால் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை, தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற அழுத்தம் அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது. அது அவரை நாளுக்கு நாள் சங்கடத்தில் ஆழ்த்தியது.

Manoj Bharathiraja

பாரதிராஜாவிற்கு வருத்தம்: தமிழ் சினிமாவில் ராதிகா, ராதா, கார்த்தி, ரேவதி என பல நடிகர்கள் இன்று கோடீஸ்வரர்களாக இருப்பதற்கு முக்கிய காரணம் யார் என்றால் அது பாரதிராஜா தான். தன்னால் பல நடிகர்கள் வளர்ந்த போதும், தன் மகனை வளர்த்து விட முடியவில்லையே என்ற வருத்தம் பாரதிராஜாவுக்கு இருந்தது. அதேபோல, தந்தை மிகப்பெரிய இயக்குநராக இருந்த போதும், நடிகராகவும் இயக்குனராகவும் ஜெயிக்க முடியவில்லை என்ற வேதனை மனோஜுக்கும் இருந்தது.

Manoj Bharathiraja

பணக்கஷ்டம் : இன்றைய சூழ்நிலையில், பாரதிராஜாவும் மனோஜும் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தாலும் பணமாக அவர்கள் கையில் எதுவுமே இல்லை. பாரதிராஜா, தற்போது நடிக்கும் படங்களில் வரும் பணத்தை வைத்து தான் காலத்தை கழித்து வருகிறார்கள். மனோஜூக்கும் அதே நிலைமைதான் அவரிடத்திலும் பணம் இல்லை.

அவருக்கு இப்படி ஒரு நிலைமையா: மனோஜ் பாரதிராஜா பல கதைகளை கையில் வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடி பல இயக்குனர்கள் மற்றும் பெரிய நடிகர்களை சந்தித்து பேசினார். ஆனால், அவருக்கு யாருமே வாய்ப்பு கொடுக்கவில்லை. இன்று அவர் இறந்த பிறகு, இமயத்தின் மகன் என்று புகழ்ந்து பேசி அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துவதை பார்க்கும் போது நாடகமாகத்தான் தெரிகிறது. ஒருவர் உயிரோடு இருக்கும்போதே, அவருக்கு வாழ்க்கை கொடுத்து அவரை உயர்த்தி இருந்தால், இன்று அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது. வாழ்க்கை முழுவதும் போராட்டம், போராட்டம் என பல கஷ்டங்களை அவர் மனது தாங்கி தாங்கி கடைசியில் அவர் உடல்நிலை மோசமாகி விட்டது.

Manoj Bharathiraja

பைபாஸ் சர்ஜரிக்கு கூட பணம் இல்லை: அதுமட்டுமில்லாமல், பாரதிராஜா நீலாங்கரை வீட்டில் வசித்து வருகிறார். மனோஜ் சேத்துப்பட்டில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். அப்பா, மகன் இருவருக்கும் இடையே ஏதோ ஒரு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசிக் கொள்வதே இல்லை. இதனால் ஏற்பட்டால் மன அழுத்தம் காரணமாக மனோஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் ஏற்பட்ட உடல் பிரச்சனைக்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட, அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த பைபாஸ் சர்ஜரிக்கு கூட அவரிடம் பணம் இல்லை. அவருக்கு கொடுத்து உதவுவதற்கு கூட யாரும் இல்லை.

ஆறுதல் சொன்ன நண்பர்: அவர் இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக ஒரு முக்கியமான விஐபி ஒருவருடன் மிகவும் ஜாலியாக பேசிக்கொண்டு தான் இருந்தார். அப்போது கூட தந்தைக்கும் இவருக்கும் இருக்கும் பிரச்சனைகளை அழாத குறையாக அந்த முக்கிய பிரமுகரிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார். அப்பா அங்கே இருக்கிறார். நான் எங்கே இருக்கிறேன் எனக்கும் அவருக்கும் சரியான பேச்சு வார்த்தை இல்லை. இப்படியே சென்று கொண்டிருந்தால் வாழ்க்கை எங்கே போகுமோ என்று தெரியவில்லை என்று மனம் வருந்தி பேசி இருக்கிறார். அந்த நண்பரும் ஆறுதல் சொல்லிவிட்டு நான் அப்பாவிடம் பேசுவதாக கூறிவிட்டு சென்று இரண்டு மணி நேரத்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கிறார்.

ஜெயித்து காட்ட வேண்டும்: அவரின் மறைவு மிகவும் துயரமான ஒரு விஷயம் தான் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் தோல்வி வரத்தான் செய்யும். வாழ்க்கையில் தோல்வி வந்து விட்டது என்று நினைத்து வருத்தப்பட்டு மதுவிற்கு அடிமையாகி விட்டால், மேற்கொண்டு அடுத்த இடத்தை நாம் அடையவே முடியாது. அந்த விரக்தியால், நாம் பின்னோக்கி தான் சென்று கொண்டே இருப்போம். இதனால் வெற்றியை நோக்கி பயணம் செய்து ஜெயித்து காட்ட வேண்டும்.

அதேபோல மனோஜூம் பல பேட்டியில் என்னுடைய வலி என்னவென்று எனக்குத்தான் தெரியும் என்று பேசி இருக்கிறார். இயக்குனராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், அதிலும் அவரால் சோபிக்க முடியவில்லை. கதாநாயகனாக மாறினார் அதிலும் பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை. அவருக்கு தெரிந்த ஒரே தொழிலே சினிமா துறை மட்டும் தான். அதை விட்டு அவரால் வேறு எங்கும் செல்லவே முடியவில்லை. நம்மால் ஜெயிக்க முடியவில்லை என்கிற மிகப்பெரிய வேதனை மனோஜை மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிட்டது.

அவர் வீட்டில் வேலை செய்யும் கார் டிரைவர், சமையல்காரர் முதல் அனைவரும் மனோஜை உயர்வாகத்தான் பேசி வருகிறார்கள். அதற்கு காரணம் அவர் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதுதான். ஒருவர் , வாழும்போது செய்த நல்ல காரியங்கள் தான் அவர் இறந்த பின்பும் பேசப்படும் அதுதான் இப்போது மனோஜின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. மனோஜை பொறுத்தவரையில் அவர் நல்ல மனிதர், மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனம் கொண்டவர். தன் கையில் 1000 ரூபாய் இருந்தாலும், அதில் 200 ரூபாயை மற்றவர்களுக்கு கொடுத்து உதவக்கூடியவர். ஆனால், 48 வயதில் அவருடைய மரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவர் இன்னும் பல நாள் வாழ்ந்திருக்கக் கூடிய மனிதர், அவர் பல சாதனைகளை படைத்திருக்க வேண்டும். ஆனால், இயற்கை அவரை அழைத்துக் கொண்டதை நினைத்து வருத்தப்படுகிறேன் என்று பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

நீலங்கரை வீட்டில் வைக்கப்பட்டிருந்த மனோஜின் உடலுக்கு நான்கு மணி அளவில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, மயானத்தில் மனோஜின் மகள் சடங்குகளை செய்ததைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X