ஹன்சிகா,சிம்பு காதலை கெடுத்த பிரபலம்.. குழந்தையை தள்ளிப்போட்டதால் வந்த பிரிவு.. பிரபலம் பேட்டி!

சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது காதல் கணவர் சோஹேல் கதூரியா பிரிந்து அம்மாவுடன் வாழ்த்து வருவதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. அதாவது, திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால், அப்போதில் இருந்தே, இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஹன்சிகா தனது தாயுடனும, சோஹேல் தனது பெற்றோருடன் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் திண்டுக்கல் வெங்கடேஷன் Public Wing யூடியூப் சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் பல விஷயம் குறித்து பேசி உள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாகவே ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ஹீரோயினாக ஒரு திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமிழில் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தான் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்தார். ஆனால், எங்கேயும் காதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மாப்பிள்ளை திரைப்படம் வெளியாகி விட்டது. அழகான க்யூட்டான நடிகையாக இருந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போன முகமாகவே மாறினார் நடிகை ஹன்சிகா. இவரே சின்ன குஷ்பு என ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

hanshika motwani Divorce Simbu
Photo Credit:

நடிகை ஹன்சிகா: அதே தொடர்ந்து தான் சிம்புவுடன் வாலு திரைப்படத்தில் நடித்தார். அப்போதுதான் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்டாகி அவர்களுக்கு இடையே காதல் உருவானது. இதுபற்றி, சிம்பு ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில், எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது. அது பற்றி விரைவில் அறிவிப்பேன் என ஹன்சிகாவை மனதில் வைத்து பேசி இருந்தார். ஆனால், ஹன்சிகாவை ஒருதலையாக காதலித்த பிரபலமான நடிகர் ஒருவர். இதுகுறித்து, ஹன்சிகா அவர்களின் அம்மாவிடம் வத்திவைத்தார். நீங்கள் நினைக்கும் படி சிம்பு ஒன்றும் நல்லவன் இல்லை. அவருக்கு இந்த இன்ட்ரஸ்ட்ரியில் கெட்ட பெயர்கள் இருக்கிறது என்று பலவிதமாக கொளுத்தி போட காதலுக்கு ஹன்சிகாவின் அம்மா முட்டுக்கோட்டை போட்டு விட்டார். இதைத்தொடர்ந்து ஹன்சிகா, சிம்புவை பிரேக் அப் செய்துவிட்டார், அதன் பிறகு பல விதமான மன உளைச்சலுக்கு சிம்பு ஆளாகி. இப்போது தான் கம்பேக் கொடுத்து இருக்கிறார்.
.
தோழியின் கணவர்: அதன் பின் தான், ஹன்சிகா தனது தோழியின் கணவரான சோஹேல் கதூரியா திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவின் தோழிக்கும் அவரின் கணவர் சோஹேல் கதூரியாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட பிரச்சனையின் போது கூட ஹன்சிகா தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனால், அது சரிப்பட்டு வராததால் இருவரும் பிரிந்து விட்டனர். அதைத்தொடர்ந்து தான், சோஹேல் கதூரியா தன்னுடைய காதலை ஹன்சிகாவிடம் சொல்ல இருவருக்கும் திருமணம் நடந்தது.

பிரிய காரணம் என்ன: ஹன்சிகாவின் கணவரின் குடும்பம் மிகப்பெரிய பாரம்பரிய குடும்பம் என்பதால் திருமணத்தின்போதே சினிமாவில் நடிக்க வேண்டாம் என முட்டுக்கட்டை போட்டு இருக்கிறார்கள். ஆனால், சோஹேல், ஹன்சிகா மீது இருந்த காதலால் வாய்ப்பு வரும் வரை நடிக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமேன, குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து தான் ஹன்சிகாவும் அவரது கணவரும் தனிக்கொடுத்தனமே நடத்தி இருக்கிறார்கள். அப்போதும், தொடர்ந்து பிரச்சனையே வந்து கொண்டே இருந்ததால், ஹன்சிகா கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். அதேபோல அவருடைய கணவரும் பெற்றோருடன் வாசித்து வருகிறார் என்று அந்த பேட்டியில் திண்டுக்கல் வெங்கடேஷன் கூறியிருக்கிறார். ஆனால், இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X