Vijay: கள்ள உறவில் இருப்பது தான் தூய சக்தியா? விஜய்யை டாப் டூ பாட்டம் விளாசித் தள்ளிய கோடங்கி

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நடிகை த்ரிஷாவுடன் இணைந்து கொண்டு திருமண விழாவிற்கு சென்றது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதுவும் விஜய்யின் மனைவி சங்கீதா நடிகர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று குற்றம் சுமத்தி இருந்த நிலையில் விஜய் இவ்வாறு நடிகை த்ரிஷாவுடன் திருமணத்தில் கலந்து கொண்டது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக சினிமா பத்திரிகையாளர் கோடங்கி வெளிப்படுத்தி உள்ள கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் கூறுகையில், " விஜய் கள்ள உறவில் இருக்கிறார் என்று விஜய்யின் மனைவி சங்கீதா எழுப்பிய குற்றசாட்டுகள் உண்மை என்று விஜய் உலகிற்கு காட்டுகிறார். இப்படிப்பட்ட நபர் நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பது அயோக்கியத்தனத்தின் உச்சம். ஒரு கட்சித் தலைவராக உருவெடுக்குறீர்கள், தனிப்பட்ட ஒழுக்கம் இருக்க வேண்டாமா? நாட்டை ஆளவேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட ஒழுக்கம் ரொம்பவும் முக்கியம்.

Journalist Kodangi Slams Vijay attended With Trisha Between Vijay Divorce Controversy

சங்கீதா சொன்ன குற்றச்சாட்டுகளில் கொஞ்சமும் உண்மை இல்லை என்று சப்பை கட்டுகட்டு, அவரை மோசமாக விமர்சித்த விஜய்யின் ரசிகர்களின் நடவடிக்கைகளுக்கு வாய் திறக்காத விஜய், இப்போது எதை வெளிச்சம் போட்டு காடுகிறார்? பாஜக மாநிலத் தலைவர் நாயினார் நாகேந்திரன் விமர்சித்த போது நான் எல்லாம் பதில் விமர்சனம் வைத்தேன்.

ஆனால் விஜய்யின் நடவடிக்கைகளை பார்க்கும் போது, அவர் திமிரின் உச்சத்திலும் ஆணவத்தின் உச்சத்திலும் இருக்கிறாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. பொதுவாழ்க்கைக்கு வந்தால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை. தான் என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்று அவர் தனது ரசிகர்களை நினைக்கும் நிலையில் இருக்கிறார்.

லட்சணம்: சங்கீதா வழக்கு தொடுத்துள்ளார். குற்றச்சாட்டுகள் உண்மை என்று கூறுவது போல விஜய்யின் நடவடிக்கைகள் இருக்கும் போது, நீதிமன்றத்திற்குச் சென்று என்ன சொல்லுவார் விஜய்? அல்லது அவருக்கு முட்டு கொடுப்பவர்கள் என்ன சொல்வார்கள்? இதுதான் தூய சக்தி லட்சணமா? சரியான மகனாக நடந்து கொள்ளவில்லை, கணவராகவும் சரியாக இல்லை, தகப்பனாகவும் சரியாக இல்லை. இப்படி இருப்பவருக்கு நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது.

Journalist Kodangi Slams Vijay attended With Trisha Between Vijay Divorce Controversy

அரசியலே தெரியலை: விஜய்க்கு அரசியலும் தெரியவில்லை, கள அரசியலும் தெரியவில்லை. தேர்தல் முடிவுகள் வரும்போது மக்களால் அவர் விரட்டி அடிக்கப்படுவார். அப்போது அவரது தலைக்கனம் குறையும். விஜய்யை சுற்றி உள்ளவர்கள் யாரும் அவருக்கு உண்மையான நிலவரத்தை சொல்லுவது இல்லை. மாறாக ஏதோ ஒரு ஆதாயத்திற்காக அவரைச் சுற்றி இருக்கிறார்கள்.

இவர் தூயசக்தியா?: எப்போதும் ஆளும் கட்சி மீது பழி போட்டு கொண்டு தப்பிக்கப் பார்ப்பது என்பது எந்த வகையில் நியாயம்? தான் தூய சக்தி என்று எந்த அர்த்தத்தில் சொல்லுகிறார் என்று தெரியவில்லை. கள்ள உறவில் இருப்பவர் எப்படி தூய சக்தி ஆவார்? தவறான உறவு வைத்திருப்பவர் எப்படி ஒரு நல்ல மனிதனாக இருக்க முடியும்?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அவை நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X