காக்கா பிடிக்க காரணம்.. துபாயில் வீடு..பிரியங்காவிற்கு கணவர் கொடுத்த கிஃப்ட்.. கண்டதை உளறிய பிரபலம்
சென்னை: இந்த மாதத்தில் மட்டும் சின்னத்திரையில் பிரபலமாக இருந்த பிரியங்காவிற்கும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காதல் வயப்பட்ட பாவனி மற்றும் அமீர் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில், சோஷியல் மீடியாவில் பிரியங்காவின் இரண்டாவது திருமணம் பற்றிய செய்தி தான் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய பிரபலம் ஒருவர் பிரியங்கா குறித்து பேசி இருக்கிறார்.
விஜய் டிவியில் மிகவும் முக்கியமான தொகுப்பாளினியாக இருந்த டிடிக்கு ஏற்பட்ட உடல்நிலை காரணமாக விஜய் தொலைக்காட்சியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இதன் காரணமாக பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக மாறி, அந்த தொலைக்காட்சியில் வரும் அனைத்து ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ, பாட்டு போட்டி, டான்ஸ் நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் அதில் தொகுப்பாளினியாக பிரியங்கா தான் இருக்கிறார். அதே போலத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சியில் தான், மணிமேகலையுடன் தேவையில்லாமல் சண்டை போட்டுள்ளார். இதனால், கடுப்பான மணிமேகலை, அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது மணிமேகலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே: இந்நிலையில் தான் பிரியங்காவிற்கு, கடந்த வாரம் வசி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். யாருக்கும் தெரியாமல் காதும் காதும் வைத்தபடி பிரியங்கா இரண்டாவது திருமணத்தை செய்துள்ளார். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் வெளியான பிறகு தான், பிரியங்காவின் கணவர் யார் என்று இணையத்தில் பலர் அலசி ஆராய்ந்து வந்தனர். பிரியங்காவின் கணவர் வசி, இலங்கை வாழ் தமிழர்களின் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்து மறைந்த இரா சம்பந்தனின் தங்கையின் மகன். இவர், இலங்கையில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் இலங்கையில் நிகழ்ச்சி அடிக்கடி செல்வது வழக்கம். அதுபோன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரியங்கா சென்றிருந்த போது தான், வசியுடன் நட்பு ஏற்பட்டு அது தற்போது காதலாக மாறி உள்ளது.
அவசர கல்யாணத்துக்கு காரணம் இதுதான்: இந்த தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், சிலர் பிரியங்காவின் திருமணம் குறித்து பேசி வருகின்றனர். எப்போதும் சர்ச்சையை பேசும் சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், சிரித்துக்கொண்ட விஷ ஊசி போடுவதில் சாணக்கியம் தனம் படைத்தவர் பிரியங்கா, அதே போல சிண்டுமுடிவதிலும் திறமையானவர். நான் பிரியங்காவை பற்றி எதுவும் தெரியாமல் பேசவில்லை இரண்டு மூன்று முறை நான் பிரியங்காவை நேரடியாக சந்தித்து இருக்கிறேன். அவர் கொஞ்சம் குசும்பான பார்ட்டி தான், அப்படி குசும்பான பார்ட்டியை எப்படி நாம் டீல் செய்ய வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும் என்றார். மேலும், அவசர அவசரமாக யாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டதற்கு காரணம், அவர் கர்ப்பமாக இருந்தார் என்று பயில்வான் ரங்கநாதன் வாய்க்கு வந்ததை பேசி இருந்தார். இதைக்கேட்டு கடுப்பான இணையவாசிகள் அவரை திட்டி தீர்த்தனர்.
துபாயில் வீடு: தற்போது, பிரியங்காவின் இரண்டாவது திருமணம் குறித்து பேசி இருக்கும் தமிழா தமிழா பாண்யன் வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார். அதில், பிரியங்கா பிடிச்சாலும் புளியங்கொம்பாகத்தான் பிடித்து இருக்கிறார். மேலும், விஜய் டிவியின் செல்லப்பிள்ளை பிரியங்கா, விஜய்டிவியின் வளர்ச்சிக்கு காரணமே பிரியங்கா தான் என, இந்த தொலைக்காட்சியின் பெரும்புள்ளிகள் நம்புகிறார்கள். இதனால், மணிமேகலை போன்ற பல தொகுப்பாளினிகளை வெளியில் விரட்டிவிட்டு தொகுப்பாளினியாக மாறிவிட்டார். பிரியங்காவின் கணவரின் அண்ணன் ஆர்யா, கனடாவில் ஒரு இசைக்குழு வைத்து இருக்கிறார். அதே போல வசி லண்டன் குடி உரிமை பெற்றவர், அதுமட்டுமில்லாமல் பிரியங்கா, வசி இருவரும் வாழ்வதற்கு துபாயில் 3 கோடி ரூபாயில் வீடு கட்டிஇருக்கிறார். ஆனால், 3 வருடத்திற்கு முன்பே பிரியங்கா துபாயில் வீடு வாங்கி விட்டார். இவர்கள் இருவரும் லண்டனில் செட்டில் அவதற்கான முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த விஷயம் எல்லாம் தெரிந்து கொண்ட பாவனி ரெட்டி, பிரியங்காவை காக்கா பிடிப்பதற்காகத்தான் தாலியை எடுத்து கொடுக்க சொன்னார். அமீருக்கும் பெரிய சொந்தம் யாரும் இல்லாததால், பிரியங்கா தாலி எடுத்துகொடுத்து அவர் பாவனி கழுத்தில் கட்டினார். இது எல்லாம் ஒரு தந்திரமான வேலை. எது எப்படியோ பாவனி, அமீர், பிரியங்கா, வசி இருவரும் நன்றாக இருந்தால் போதும் என தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் எல்லாம், தெரிந்தது போல பேசுவது தவறு என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இரண்டாம் திருமணம்: சிறு வயதிலேயே தந்தையை இழந்த பிரியங்கா, தாயின் அரவணைப்பில் வளர்ந்து, படிப்படியாக கஷ்டப்பட்டு தொகுப்பாளினியாக மாறினார். பிரியங்கா வேலைக்கு சென்று தான் அந்த குடும்பத்தையே காப்பாற்றி, தம்பியை படிக்க வைத்தார்.விஜய் டிவியில் பணியாற்றிய போது, பிரவீன் குமார் என்ற தயாரிப்பாளரை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 6 ஆண்டு காலம் வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின் அம்மா மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வந்த பிரியாங்கா தனது தம்பி குழந்தை மீது அதிக பாசம் வைத்து இருந்தார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில், எனக்கு காசு, பணம் எதுவுமே தேவையில்லை எப்போதும் என்னை அன்பாக பார்த்துக்கொள்ள ஒருவர் வந்தால் போதும், அவரை நான் சந்தோஷமாக பார்த்துக்கொள்வேன் என்றார். மேலும், குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை என அந்த பேட்டியில் கண் கலங்கி பேசி இருந்தார். தற்போது, பிரியங்கா தேஷ்பாண்டே ஆசைப்பட்டது போல அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications











