நைட் பார்ட்டி.. மலிந்து கிடக்கும் போதை வஸ்து.. கயல் சீரியலை புறக்கணிங்க.. பிரபலம் அதிர்ச்சி தகவல்!
சென்னை: சன் தொலைக்காட்சியில் 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல் கயர்ல. இந்த சீரியலில், சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், கோபி, அபிநவ்யா, முரளி ராஜ், அவினாஷ், பிர்லா போஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இல்லத்தரசிகளின் ஆதரவை பெற்ற இந்த சீரியலில், கயலின் அண்ணாக மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அய்யப்பன். அவரின் மனைவி பிந்தியா, தனது கணவர் அய்யப்பன் தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துவதாக கூறியிருந்தார்.
கயல் சீரியல் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அவர், கடந்த மூன்று வருடமாக என்னுடைய குழந்தையை கவனித்துக் கொள்வதில்லை என்னையும் கவனித்துக் கொள்ளவில்லை, செலவிற்கு பணமும் தருவது இல்லை. எப்போது பணம் கேட்டாலும் இல்லை என்று தான் சொல்கிறார். எந்த நேரமும், டோப் அடித்து விட்டு ஒருவிதமான மயக்கத்திலேயே இருக்கிறார். வீட்டிற்கு வந்து என்னையும் என் குழந்தையும் அடிப்பது மட்டுமில்லாமல், கெட்டக்கெட்டவார்த்தையால் திட்டுகிறார். என்னுடைய அப்பா அம்மாவிற்கு ஃபோன் செய்து, நான் உங்கள் மகளை விவாகரத்து செய்யப் போகிறேன் என்று சொல்கிறார். விவகாரத்து செய்வதற்கான காரணம் என்ன என்று கேட்டால் அதையும் அவர் சொல்வதில்லை. இதற்கு முன் அவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அப்போது எல்லாம், அவர் இப்படி நடந்து கொண்டது இல்லை. இந்த கயல் சீரியலில் நடித்துத்தான் என் வாழ்க்கையே போச்சு. வீட்டு வாடகை கட்ட வேண்டும், குழந்தையை பார்க்க வேண்டும், 3 மாதமாக நான் என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கிறேன்.
இதுகுறித்து நான் மதுரவாயல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறேன். நான் விவாகரத்து செய்துவிட்டு போவதற்கு ஒரு நிமிஷம் ஆகாது, ஆனால், எனக்கு என் புருஷன் தான் வேண்டும், என் குழந்தைக்கு அப்பாவாக அவர் இருந்தால் போது, இப்படியே போச்சு என்றால், நான் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேற வழியே இல்லை என்று நடிகர் அய்யப்பனின் மனைவி கதறி அழுதபடி பேசியது அனைத்து மீடியாக்களிலும் பேசு பொருளாது. அப்படி கயல் சீரியலில் என்னத்தான் நடக்கிறது என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து Youtube சேனல் ஒன்றுக்கு பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டிஅளித்துள்ளார்.

தமிழா தமிழா பாண்டியன்: அதில், கயல் சீரியல் வெளியான பிறகு நடிகர் ஐய்யப்பன் தமிழ்நாடு முழுக்க அறியப்படும் நபராக மாறிவிட்டார். ஏராளமான புகழ், பணம், தோழிகள், தோழர்கள், மதுவிருந்து, ஈசிஆரில் இரவு விருந்து, பகல் விருந்து இப்படி திரைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மறைமுகமான ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதில், முழுக்க முழுக்க இருப்பது மதுவிருந்து தான். மது விருந்தையும் தாண்டி ராஜபோதை என்று சொல்லக்கூடிய பல போதை வஸ்துகள் அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. மது அருந்தி இருந்தால் கண்டுபிடித்துவிட முடியும் ஆனால், இதுபோன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்தினால், அது யாருக்கும் தெரியாது. ஆனால், இரண்டு நாட்களுக்கு அந்த போதை இருக்கும்.
இரவு விருந்து: இதைத்தான் பாடகி சுசித்ரா, அளித்த பேட்டியில் பல நடிகர்களின் இரவு விருந்தில் போதைப் பொருட்கள் தங்கத் தட்டில் வைத்து கொடுப்பார்கள். அதை நான் பலமுறை பார்த்து இருக்கிறேன் என்று கூறியிருந்தார். அதற்கு யாரும் இதுவரையில் எந்தவிதமான எதிர்ப்பையும்கூறவில்லை. முன்பெல்லாம் வடமாநிலங்கள் தான் இது போன்ற போதைப்பொருள் கலாச்சாரம் பரவி இருந்தது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் இரவு விருந்து போன்றவற்றில் மது மட்டுமில்லாமல் போதை பொருள் தலை தூக்கி இருக்கிறது. இதற்கு அய்யப்பன் மட்டும் விதிவிலக்கா என்ன?
விவாகரத்திற்கு காரணம்: இப்போது திரைப்படத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகளின் பொழுதுபோக்கே என்னவென்றால் மது விருந்துதான். ஒரு படம் கமிட் ஆகிவிட்டால் நண்பர்களை அழைத்து பார்ட்டி கொடுப்பதுதான். இதற்காக அனைத்து நடிகர்களும் ஈசிஆரில் கூடி விடுவார்கள். அங்கு அனைத்து நாட்டு உயர்வகை மதுபானங்களும் கிடைக்கும். இதனால், விடிய விடிய பார்ட்டி நடக்கும் விடிந்த பிறகு தான் தட்டு தடுமாறி அவரவர் வீட்டுக்கு செல்வார்கள். இதனால் தான், நடிகர்கள் குடும்ப உறவுகளை இழந்து விடுகிறார்கள். பல நடிகர்களின் விவாகரத்திற்கு இதுதான் முக்கிய காரணமாகவே இருக்கிறது.

புறக்கணிக்க வேண்டும்: இது தான் கயல் சீரியல் நடிகர் அய்யப்பனின் வாழ்க்கையில் நடந்துள்ளது. பெத்த மகளையே ஏன் பிறந்தாய், உன்னால் தான் எனக்கு இவ்வளவு பிரச்சனை என்று கேட்கும் அளவிற்கு நடிகர் அய்யப்பனின் புக்தியை அந்த மது போதை மழுங்கடித்திருக்கிறது. தினமும் குடித்து குடித்து அதற்கு அடிமை ஆகிவிட்டால் என்ன செய்கிறோம் என்றே தெரியாது, உடம்பில் போதை வஸ்துவின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். பல நடிகர் போதையைத்தான் பெரிதும் விரும்புகின்றனர். இதற்கு அடிமையானவர்களுக்கு அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் எல்லாம் தெரியமாட்டார்கள். நடிகர் அய்யபனை நல்ல மனநல மருத்துவர் ஒருவரிடம் ஒரு மாத காலம் சிகிச்சைக்கு அனுப்பி சிகிச்சை கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர், நல்ல மன நிலைக்கு வருவார். மேலும், அய்யப்பன் நடித்து வரும் கயல் சீரியலை தமிழக மக்கள் புறக்கணிப்பது மட்டும்தான் அவருக்கு கொடுக்கக்கூடிய ஒரு அனுபவ பாடம்.
இது தான் தண்டனை: சொந்த வாழ்க்கை வேறு, பொது வாழ்க்கை வேறு என்று சொல்லிவிட முடியாது, அறிவுரை சொல்லக்கூடிய ஒருவன் சொந்த வாழ்க்கையில சரியா இருக்கணும், ஒருவன் குடிகாரனாக இருந்துவிட்டு அடுத்தவர்களை குடிக்கக்கூடாது என்று சொல்ல வேண்டுமா? ஒரு டாக்டர் சரியானவராக இருந்தால் தான் மற்றவர்களுக்கு அவர் அறிவுரை கூற முடியும். இதனால், அய்யப்பனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றால், சின்னத்திரை ரசிகர்கள் அய்யப்பா நீ உன் குடும்பத்தை சரியாக பார்த்துக் கொள்ளும் வரை, உன்னுடைய சீரியலை நாங்கள் புறக்கணிப்போம் என்று சொல்ல வேண்டும். மேலும் கயல் சீரியலில் நடிக்கும் அய்யப்பனின் நண்பர்கள் மற்றும் அவரின் நலம் விரும்பிகள் அய்யப்பனை போதை பழக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வளவு மோசமாக இருந்து விட்டு தொலைக்காட்சியில் எப்படி நடிக்கிறார் என்பதை பார்த்து மக்கள் தான் இதுபோன்ற சீரியலையும், நடிகர்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழாத் தமிழா பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











