சிவாஜி குடும்பத்தில் இத்தனை பிரச்சனைகளா? தனிக்குடித்தனம் போனாரா விக்ரம் பிரபு?.. பிரபலம் பகீர்!
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்று ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஜகஜால கில்லாடி பட தயாரிப்புக்காக சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் பெற்ற கடன் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை திருப்பித் தரக் கோரிய வழக்கில் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து, அன்னை இல்லம் எனக்கு சொந்தமானது என்பதால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் என்று கோரி, நடிகர் பிரபு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ராம்குமார், அன்னை இல்லத்தின் மீது எனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என்றும், அன்னை இல்லத்தை எனது சகோதரர் பிரபுவுக்கு, எனது தந்தை சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்துள்ளார். என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். இதையடுத்து வாதங்கள் முடிவடையாததால் விசாரணையை 15ம் தேதிக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளிவைத்தார்.

ஊதாரித்தனமான செலவு: இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சிவாஜியின் குடும்ப விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு பிரபுவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர் நலம் விரும்பிகள் என அனைவரும் சிவாஜி இருந்திருந்தால் இப்படி நடக்க விட்டிருக்க மாட்டார். இதனால் இந்த விஷயத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போங்க என்று பிரபுவிற்கு அறிவுரை கூறியதால், பிரபுவும் சரி அண்ணனுக்காக மனம் இறங்கி வந்து விட்டார். அதே நேரம் ராம்குமாரின் இரண்டு மகன்கள் சினிமாவில் நடிகராக வேண்டும் என சில முயற்சிகள் எடுத்தார்கள். அவர்கள் நடித்த படம் எதுவும் பெரிதாக ஓடவில்லை. சிவாஜியின் பேரன் என்கின்ற போது அதற்கான கம்பீரம் இருக்க வேண்டும். ஆனால், இவர்களுக்கு அந்த முகம் செட்டாகாததால் அவர்கள் நடித்த படங்கள் ஓடவில்லை. ஆனால் சிவாஜியின் பேரன், பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் அவர் நடித்த சில படங்கள் நன்றாக ஓடின.

விக்ரம் பிரபு: ஆனால், ராம்குமாரின் மகன்களோ சினிமாவில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக, வேலை எதுவும் செய்யாமல், பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்து கொண்டு சும்மா சுற்றிக்கொண்டு திரிகிறார்கள். தற்போது, சூப்பர் ஸ்டார் நடிகர்களாக இருப்பவர்களுக்கே கதை இல்லாமல் வருடத்திற்கு ஒரு படத்தை வைத்துக்கொண்டு திண்டாடிக் கொண்டு இருக்கும் நேரத்தில், ராம்குமாரின் மகனுக்கு எப்படி பட வாய்ப்புகள் கிடைக்கும் இதை அவர்கள் யோசிக்கவில்லை. இருந்தாலும், தனது அண்ணனுக்காக பிரபு உதவ நினைத்தாலும், அவரின் மகன் விக்ரம் பிரபு இதற்கு மூட்டுகட்டை போடுகிறார். எத்தனை நாளைக்கு தான் இவர்களுக்கு இப்படியே பணம் கொடுத்து காப்பாற்றுவீர்கள், இவர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்து கொண்டு திரிகிறார்கள். இதனால் இனிமேல் பணம் கொடுக்கக் கூடாது என்று விக்ரம் பல முறை பிரவுவிடம் சண்டை போட்டுள்ளார்.
ஆனால், பிரபு என்னுடைய அண்ணனை நான் நிச்சயமாக கைவிட்டு விட முடியாது என்று கூறி வருகிறார். மேலும், நான் சொத்தில் இருந்து பணத்தை எடுத்து கொடுக்கவில்லை. நான் நடித்து சம்பாதித்த பணத்தில் இருந்து தான் அவருக்கு பணம் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இதனால், ஏற்பட்ட மன கசப்பு காரணமாக, விக்ரம் பிரபு அப்பாவிடம் சண்டை போட்டுக்கொண்டு அன்னை இல்லத்தில் இருந்து வெளியேறி அடையாறில் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார் என்று பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











