அஜித் ஹீராவை பிரித்த தயாரிப்பாளர்.. உருகி உருகி காதலித்த சரத்குமார்.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: இதயம் திரைப்படத்தில் பொட்டு வைத்த ஒரு வட்டநிலா என்ற பாடலின் மூலம் நம் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஹீரா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து வந்த ஹீரா, அஜித்தை உயிருக்கு உயிராக காதலித்த நிலையில், அந்த காதல் கைகூடாததால் சினிமாவை விட்டே ஒதுங்கி சென்றுவிட்டார் என பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், நடிகை ஹீராவின் தந்தை ராணுவ அதிகாரியாக இருந்ததால், அவர் சிறுவயதில் இருந்தே ஊர் ஊராக சுற்றிக்கொண்டு தான் இருந்தார். சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த நடிகை ஹீரா, சென்னை மகளிர் மாநில கிறிஸ்துவ கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றார். அதன் பிறகு அவருக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால், மாடலிங் செய்தார். அப்போது, தான் ஹிந்தியில் பிரபல தயாரிப்பாளரான சுபாஷ் கய் என்பவர் ஹீராவிடம் சினிமாவில் நடிப்பீங்களா என்று கேட்டுள்ளார். ஆனால், ஹீரா அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதன் பிறகு தான் 1991 ஆம் ஆண்டு கதிர் ஹீராவிடம் இதயம் படத்தின் கதையை சொன்னார். அவர், மட்டுமல்லாமல் தயாரிப்பாளரும் ஹீராவிடம் கதையை சொல்ல, கதை ஹீராவிற்கு பிடித்துப் போனதை தொடர்ந்து. ஹீரா இதயம் படத்தில் நடித்தார்.

நடிகை ஹீரா: அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 49 திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ஹீரா நடித்த, இதயம், நீ பாதி நான் பாதி, திருடா திருடா, சதீலீலாவதி, காதல் கோட்டை, அவ்வை சண்முகி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படங்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் தான் நடிகர் சரத்குமார், ஹீராவுடன் சேர்ந்து நம்ம அண்ணாச்சி, தசரதன், முன்னறிவிப்பு, பேண்ட் மாஸ்டர் போன்ற நான்கு திரைப்படங்களில் நடித்தார். அந்த காலகட்டத்தில் தான் சரத்குமார் ஹீராவை விழுந்து விழுந்து காதலித்துக்கொண்டு இருந்தார். ஹீரா எப்போதும் சிரித்து சிரித்து ஜாலியாக பேசக்கூடியவர் என்பதால், ஹீரா தன்னை காதலிப்பதாக சரத்குமார் நினைத்து இருக்கலாம்.

3 முறை வந்தார்: பேண்ட் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, நான் வண்ணத்திரை புத்தகத்திற்காக ஹீராவை பேட்டி எடுக்க சென்று இருந்தேன். அப்போது, மேக்கப் ரூமில் ஹீரா பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தபோது சரத்குமாரின் காட்சிகள் கீழே படமாக்கப்பட்டு வந்தன. பேட்டி எடுத்துக்கொண்டிருந்த போதே, இரண்டு, மூன்று முறை சரத்குமார் வந்து, என்ன தலைவா கேள்விகள் எல்லாம் பெரிய கேள்வியாக இருக்கே, இன்னுமா பேட்டி முடிவில்லை என்று கேட்டார். அந்த நேரத்தில் ஹீராவிடம் எதாவது பேசலாம் என்று சரத்குமார் நினைத்து இருக்கலாம். அந்த படத்தைத் தொடர்ந்து, ஹீரா சில நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார். எதற்காக நெருக்கமான காட்சிகளில், கவர்ச்சியாக நடிக்கிறீர்கள் என்று கேட்க ஹீராவிற்கும் சரத்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, சரத்குமாரும் ஹீராவும் சேர்ந்து நடிக்கவே இல்லை.

அஜித்தை காதலித்தார்: பின் ஹீரா தொடரும் என்ற பக்கத்தில் அஜித்குமாருடன் சேர்ந்து நடிக்கும் போது இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகியது. என்னதான் அஜித்குமார் பத்தாவது தான் படித்திருந்தாலும், ஆங்கிலத்தில் நன்றாக பேசக்கூடியவர். இதனால் ஹீராவும் அஜித்தும் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதன் பிறகு இருவரும் சேர்ந்து, காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்த போது, இருவரும் காதலிக்க தொடங்கி, சினிமா நிகழ்ச்சி, பொது இடத்தில், இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு வந்தார்கள். இவர்களின் காதல் விவகாரம், சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி, அஜித்குமாரின் பெற்றோரின் காதுகளுக்கு சென்றது. அவர்கள் இந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.

மிரட்டிய தயாரிப்பாளர்: காதல்கோட்டை படத்திற்கு பிறகு தான் பட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் இந்த நேரத்தில் காதல், திருமணம் எல்லாம் தேவையில்லை என்று அஜித்தின் பெற்றோர் முட்டுக்கட்டை போட்டு விட்டனர். அதன் பிறகும், இருவரும் காதலித்து வந்ததால், பயந்து போன அஜித்தின் பெற்றோர், பெரிய தயாரிப்பாளர் ஒருவரிடம் சென்று இந்த காதல் விவகாரத்தை எடுத்துச் சொல்லி, நீங்க சொன்னால் என் மகன் கேட்டுக்கொள்வான் என்று சொல்ல, அந்த பெரிய தயாரிப்பாளர் அஜித்தை அழைத்து அட்வைஸ் கொடுத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல், ஹீராவை அழைத்து, அஜித்தின் வாழ்க்கையில் மீண்டும் வரவேக்கூடாது என்று மிரட்டி அனுப்பினார். அதன் பிறகு தான் இருவரும் பிரிந்தார்கள்.
காதல் தோல்வி: அஜித்தை பிரிந்த பிறகு ஹீரா ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அது பெரியதாக எடுபடவில்லை. மேலும், சினிமாவிலேயே தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தால், தொடர்ந்து அஜித்தை பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்து கொண்டே இருக்கும் என நினைத்து சினிமாவை விட்டு மொத்தமாகவே விலகினார். பின் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. தற்போது ஹீரா அமெரிக்காவில் இருக்கிறார்.நான் விரும்பிய பெண் என்னை விரும்பியதில்லை, என்னை விரும்பிய பெண் என்னை அடைந்ததில்லை என்று கண்ணதாசன் சொல்வார். அதேபோல் சரத்குமார் விரும்பிய ஹீரா சரத்துக்கு கிடைக்கவில்லை, ஹீரா விரும்பிய அஜித், ஹீராவுக்கு கிடைக்கவில்லை.

காதலை மறக்கமுடியவில்லை: இந்த காலத்தில் ஒருவனுக்காக ஏங்குவது, ஒருத்திக்காக காத்திருப்பது எல்லாம் இல்லை. ஆனால், சினிமாவில் ஒரு சில பேர் காதலுக்காக வாழ்ந்து இருக்கிறார்கள். கே பி சுந்தராம்பாள், கிட்டப்பாவை என்பவர் நாடகத்தில் நடித்த போது காதலித்தார். கிட்டப்பா இரண்டு வருடத்தில் இறந்து விட, கே பி சுந்தராம்பாள் கடைசி வரை விதவையாகவே வாழ்ந்தார். சினிமாவில், ஆண்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று சபதம் போட்டு கடைசி வரை அப்படியே வாழ்ந்தார். ஔவையார் படத்தில் நடித்த போதுக்கூட ஆண்கள் யாரும் என்னை தொடக்கூடாது என்று சொல்லி, அந்த படத்தில் ஔவையாராக நடித்தார். இந்த படத்தில் நடித்த போதே அவருக்கு ஒரு லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அதேபோலத்தான் திரைப்படம் நடிகை சச்சுவும் ஒருவரை மானசீகமாக காதலித்தார். அந்த நடிகர், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், அந்த காதலையும் மறக்க முடியாமல் தற்போது வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சபிதா ஜோசப் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











