முதல் மனைவியின் உயிரை பறித்த பாக்யராஜின் காதல்.. குழப்பத்தை ஏற்படுத்திய நடிகர்.. பிரபலம் பகீர்!

சென்னை: கதை, திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் பாக்யராஜ். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில்,சிகப்பு ரோஜாக்கள் ஆகிய மூன்று படங்களில் பணிபுரிந்தார். அவருக்கு உதவி இயக்குநராக வாய்ப்பைக் கொடுத்த பாரதிராஜா தான், புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராசை ஹீரோவாக்கி அழகு பார்த்தார்.

சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தை இயக்கி இயக்குநராக மாறிய பாக்யராஜ், அதன் தூறல் நின்று போச்சு, சின்ன வீடு, எங்க சின்ன ராசா, அந்த 7 நாட்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, இது நம்ம ஆளு என அடுத்தடுத்து பல வெற்றிப்படத்தை கொடுத்து. தமிழ் சினிமாவில் தனக்கு என்று தனி முத்திரைப்பதித்தார். பாக்யராஜின் முதல் மனைவி பிரவீணா குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் Real on media என்ற யூடியூப் சேனலில் பேசி உள்ளார்.

Bhagyaraj praveena poornima

நடிகை பிரவீணா: அதில், பாக்யராஜின் முதல் மனைவியின் பெயர் பிரவீணா, அவர் தெலுங்கு பெண், ஆந்திராவில் இருந்து சென்னை வந்தார். அப்போது எம்ஜிஆர் சினிமாவை விட்டு, கொஞ்சம் விலகி அரசியலில் பிஸியாக இருந்தார். கடைசியா கையில் இருந்த சில படங்கள் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, பத்திரிக்கையாளர் ஒருவர், எம்ஜிஆரின் வசனகர்த்தா ரவீந்திரன் மூலம் எம்ஜிஆரை பிரவீணாவிற்கு அறிமுகம் செய்துவைத்தார். எம்ஜிஆரின் உதவியால், பிரவீணாவிற்கு தமிழில் சில வாய்ப்புகள் வந்து தமிழில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அவரது மொழி தெலுங்கு என்பதால் தமிழ் தெரியவில்லை. அந்த நேரத்தில், பாக்கியராஜுக்கும் சரியான வாய்ப்பு இல்லை, பணம் கிடையாது, தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சுத்திக்கொண்டு இருந்தார். அதன் பிறகு தான் பாரதிராஜா கூட சேர்ந்து வேலைபார்க்க ஆரம்பித்தார்.

பூர்ணிமாவை காதலித்தார்: அப்போது தான், பிரவீணாவிற்கு தமிழ் கற்று தருவதற்காக பாக்யராஜ் வந்தார். பின்னாளில், அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வந்து, இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அப்போது, பாக்யராஜுக்கு பட வாய்ப்பு இல்லை, பணமும் இல்லாததால், பிரவீணா அவருக்கு நிறைய உதவிகள் செய்து, தங்குவதற்கு இடம், உணவு, உடை என அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார். இது அப்படியே பாக்கியராஜுக்கும் பிரவீணாவிற்கும் இடையே காதலாக உருவாகி, இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் தான் பாக்யராஜ், சுவர் இல்லா சித்திரங்கள் படத்தை இயக்குகிறார். பாக்யராஜ் கொஞ்சம் வளர்ந்து வந்த பிறகு, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து எம்ஜிஆரிடம் இந்த விஷயத்தை சொல்ல, பின் எம்.ஜி.ஆர் தலைமையில் இவர்களின் திருமணம் நடக்கிறது.

Bhagyaraj praveena poornima

படுத்த படுக்கையான மனைவி: நடிகை பிரவீணா, "இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மணி" ஆகிய சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பாமா ருக்மணி படத்தில் ராதிகாவும் பிரவீணாவும் நடித்திருந்தார்கள் அந்த படத்தில் பாக்யராஜுக்கு இரண்டு ஜோடி. அந்தப் படம் ஒரு காதல் திரைப்படம் நன்றாக தியேட்டரில் ஓடியது. படத்தில் மட்டும் பாமா ருக்மணி வரவில்லை, பாக்யராஜின் வாழ்க்கையிலும் பல பாமா ருக்மணிகள் வந்து சென்று இருக்கிறார்கள். பாக்யராஜுக்கும் பிரவீணாவிற்கும் கல்யாணமான பிறகும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். இந்த நேரத்தில் தான், பிரவீணாவிற்கு மஞ்சள் காமாலை வந்து, படுத்த படுக்கையா இருந்தார். ஆனால், பாக்யராஜுக்கு அந்த நேரத்தில் டார்லிங் டார்லிங் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். மனைவி உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கும் போது, பாக்யராஜுக்கு பூர்ணிமா மேல் காதல் வருகிறது.

மோகனை காதலித்தார்: பூர்ணிமா, பாக்யராஜை திருமணம் செய்வதற்கு முன் மோகனை காதலித்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் பல படங்களில் சேர்ந்து நடித்தார்கள். அந்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படங்கள். இதனால் பூர்ணிமா மோகனை காதலித்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், மோகன், பூர்ணிமாவை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதன் பிறகு அவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை. பிறகுதான் பூர்ணிமா, ரஜினி மற்றும் மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தான் அவருக்கு பாக்யராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

பெண் சாபமா: உடல்நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் இந்த நேரத்தில் பாக்யராஜ் காதலித்து கொண்டு சுற்றியது, பிரவீணாவிற்கு மனவேதனையை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் பிரவீணா உடல்நலம் பெறாமலே இறந்துவிட்டார். அதன் பிறகு பாக்யராஜும் பூர்ணிமாவும் எம்ஜிஆர் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு தான் பாக்யராஜுக்கு சாந்தனு, சரண்யா என்ற குழந்தைகள் பிறக்கிறார்கள். பெரிய இயக்குனரின் மகனான சாந்தனுக்கு சரியான பட வாய்ப்புகளே இல்லை, வாத்தியார் மகன் மக்கு என்று சொல்வது போல, போலீஸின் மகன் திருடன் என்பது போல பெரிய இயக்குனர்களின் மகன்கள் விளங்காமல் தான் போயிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், ஏதாவது பெண் சாபமாக கூட இருக்கலாம்.

பாக்யராஜ் வேட்டியை மடிச்சிகட்டு என்ற படத்தை இயக்கினார். அந்த படம் சரியாக போகவில்லை. அதன் பிறகு இப்போதும் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் பீக்கில் இருந்த நேரத்தில் அவருக்கு பெரியதாக சம்பளம் இல்லை. அப்போது நடிக்கும் போது அவருக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்படுகிறது.அவருடைய மகள் ஒரு படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் சினிமாவில் தலை காட்டவேயில்லை. பாக்கியராஜின் மகன் சாந்தனுக்கு படம் சரியாக போகவில்லை என்று பத்திரிக்கையாளர் மூத்த சபிதா ஜோசப் அந்த பேட்டியில் பாக்யராஜ் குறித்து பேசி இருக்கிறார்.

Bhagyaraj praveena poornima

நடிகர் சாந்தனு: பாக்யராஜின் மகன் சாந்தனு, வேட்டிய மடிச்சு கட்டு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் சக்கரைக்கட்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பின், சித்து +2, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், மாஸ்டர் என அடுத்தடுத்த படத்தில் நடித்தார். இவரின் நடிப்பில் கடைசியாக ப்ளூஸ்டார் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அந்த படத்தில் ராஜேஷ் என்கிற ரோலில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின் சாந்தனுவின் எந்த படமும் வெளியாக வில்லை. இவர் தொகுப்பாளர் கிகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X