பிரபல நடிகர் செய்த துரோகம்.. கடன் தொல்லையால் நொந்து போன சேரன்.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: நான்கு தேசிய விருதுகளை வென்று இயக்குநர் சேரன் அண்மையில் அளித்த பேட்டியில், நான் படம் இயக்க வேண்டும் என மக்கள் விருப்பப்பட்டாலும் தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை. நிறைய நல்ல திரைப்படங்களை இயக்கிவிட்டேன். இப்போது ஏன் தயாரிப்பாளர்கள் என்னை புறக்கணிக்கிறார்கள் எனத் தெரியவில்லை என வேதனையோடு பேசி இருந்தார். சோஷியல் மீடியாவில் இவர் பேசியது இணையத்தில் பேசு பொருளான நிலையில், இதுகுறித்து பத்திரிக்கையாளர் சுபைர் பேசி உள்ளார்.

அதில், தமிழ் சினிமா கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர்களில் சேரனும் ஒருவர். ஆனால், காலம் அவரை கொண்டாட மறந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்த சேரன், அப்போதே திருமணம் செய்து கொண்டார். பலவிதமான போராட்டங்களுக்குப் பிறகு பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தை இயக்கினார். பல விதமாக முயற்சிகளுக்கு பிறகு பாரதி கண்ணம்மா என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் சென்டிமென்டான காட்சியாக படம் வெளியான போது, கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தார். அவருக்கு எப்போதுமே ஏதாவது ஒரு படம் பிடித்து விட்டது என்றால், அந்த படம் குறித்து ஒரு கடிதம் எழுதுவார். சேரனின் பாரதி கண்ணம்மா படம் பார்த்த கலைஞர், சாதி வெறிக்கு ஒரு சம்பட்டி அடி.. பாரதி கண்ணம்மா தமிழ் சினிமாவில் ஒரு பொக்கிஷம் என படத்தை வெகுவாக பாராட்டினார். படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு சேரன் அவர்கள் மிகவும் கவனிக்கப்படக்கூடிய இயக்குனராக மாறினார். பொற்காலம், பாண்டவர் பூமி, வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோ கிராஃப், தவமாய் தவம் இருந்து என பல வெற்றிப்படத்தை இயக்கினார்.

cheran subair interview
Photo Credit:

முதல் தோல்வி: பீல் குட் திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்த சேரன், தனது ட்ரெண்டை மாற்றி அரசியல் ரீதியாக தேசிய கீதம் என்ற ஒரு படத்தை இயக்கினார். இந்த படத்தில் கதை என்னவென்றால், முதலமைச்சரை கடத்தி வைத்து, சாதாரண மக்கள் படும் கஷ்டத்தை சொல்லுவதுதான். இந்த படம் வெளியாவதற்கு பலவிதமான சிக்கல்கள் வந்தன இந்த நேரத்தில் தான் சேரன் அவர்கள் வெளியில் தலைகாட்டாமல் இருந்தார். அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி அந்த திரைப்படம் வெளியானது. ஆனால், பெரிதாக அந்த படம் எடுபடவில்லை அது தோல்வியைத் தழுவியது.

துரோகம் செய்த நடிகர்: அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்த சேரன் ஆட்டோ கிராஃப் படத்திற்காக பல நடிகர்களிடம் கதையை கூறினார். பின் அவரே அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து. சில திரைப்படங்களை தயாரித்து அவரே நடித்திருந்தார். இவர் தயாரித்த படங்கள் தோல்வி படங்கள் தோல்வி அடைந்தன. அதேபோல, இவர் நடித்த திரைப்படங்களும் தோல்வியை தழுவியதால், பணம் தேவைக்காகவும் கடனுக்காகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது, தொடர்ந்து வேறு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, கன்னட ஹீரோ கிச்சா சுதீஸ் என பல ஹீரோக்களிடம் கதை சொல்லி இருந்தார். கடைசியில் அவரை வருட கணக்கில் காக்க வைத்துவிட்டு முன் அந்த படத்தை எடுக்க முடியாமல் போய்விட்டது. இதைத்தான் சேரன் அந்தபேட்டியில் மன வேதனையுடன் சொல்லி இருந்தார் என பத்திரிக்கையாளர் சுபைர் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X