விஜய்யால் உருவான அபாயம்.. இதில் இருந்து நாட்டை மீட்டு ரொம்ப கஷ்டம்.. பத்திரிக்கையாளர் ஆதங்கம்

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி, சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியில் போட்டியிட்டு இருக்கும் நிலையில், விஜய்யால் உருவாகி இருக்கும் CULT கலாச்சாரம் ஜனநாயக அரசியலுக்கு மிகப்பெரிய ஆபத்து என பத்திரிக்கையாளர் திருஞானம் பேசி உள்ளார்.

யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர், மே 4ஆம் தேதிக்கு பிறகு விஜயின் பின்னால் இருக்கும் கூட்டத்தை நெறிப்படுத்துவது என்பது புதிய அரசின் மிக முக்கியமான சவாலாக இருக்கும். ஏனென்றால், நான் சில வீடியோக்களை பார்த்தேன். அதில், ஒரு இளம் தந்தை என்னுடைய மகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இப்போதுதான் அவளை நான் பள்ளியில் விட்டுவிட்டு வருகிறேன் அவர் 100% விஜய் தான் அடுத்த முதலமைச்சர் ஆவார் என நம்புகிறாள். இது பொய் என்று தெரிந்தால் என் மகள் என்ன ஆவால் என தெரியவில்லை என கவலையோடு பேசி இருக்கிறார். அதேபோல மற்றொரு இளைஞன், தளபதி விஜய் முதலமைச்சராக வேண்டும் என கதறி அழுகிறான். இதுபோல பலவிதமான பைத்தியங்கள் இருக்கிறார்கள்.

Vijay TVK Party

CULT கலாச்சாரம்: தமிழகம் இதுவரை பார்க்காத ஒரு 'CULT' கலாச்சாரத்தை விஜய் உருவாக்கி விட்டார். இதில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு எடுப்பது மிகவும் கஷ்டம். ஒரு அறிவார்ந்த தலைமுறையாக, ஒரு சிந்திக்கும் தலைமுறையாக மாற்றுவது என்பது கடினம். இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகளையும் நான் குறை சொல்வேன். 15 ஆண்டுகளாக மாணவர்கள் மத்தியில் அவர்கள் வேலையே செய்யவில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் அறிவார்ந்த உரையாடல்கள், விவாதங்கள் விவாதங்கள், இலக்கிய மன்றங்களை அவர்கள் நடத்தவே இல்லை. அதனால் தான் அந்த இடத்தில் இந்த 'CULT' கலாச்சார போய் அமர்ந்து கொண்டது. இது தமிழ்நாட்டுக்கே ஒரு சாபக்கேடு.

நிச்சயமாக சொல்கிறேன் எந்த ஆட்சி வந்தாலும் முதல் கடமை பள்ளி இளைஞர்களை நெறிப்படுத்துவது தான். அதற்கான வேலைகள் தொடங்கப்பட வேண்டும். சமூக ஊடகங்கள் உருவாக்கி இருக்கும் இந்த மாயையில் இருந்து மாணவர்களை மீட்டெடுத்து இளைஞர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என பத்திரிக்கையாளர் திருஞானம் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Read more about: vijay tvk party விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X