லவ்வோ லவ்.. தனுஷின் அக்கா மகனுக்கு ஸ்பெஷலாக சமைத்துக் கொடுத்த வனிதா விஜயகுமார் மகள்.. ஒரே பாசம்
சென்னை: தமிழ் சினிமாவில் இருக்கும் இள வயது நடிகர்களில் ஒருவர் பவீஷ். இவர் ஏற்கனவே தனுஷ் எழுதி இயக்கிய படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இந்த படம் பவீஷ்க்கு நல்ல அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் பவீஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் லவ்வோ லவ். இந்த படத்தின் புரோமோஷன் வேலைகள் நிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் மற்றும் பவீஷ் பகிர்ந்து கொண்ட தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, அவர்கள் அந்த உரையாடலில் பேசிக் கொள்ளும் போது, " படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு வனிதா விஜயகுமார் எனக்காக ஸ்பெஷலாக சமைத்து எடுத்துக் கொண்டு வருவார். அவர் சமைத்துக் கொண்டு வரும் சிக்கன் மிகவும் நன்றாக இருக்கும்" என்று கூறுகிறார். இதையடுத்து வனிதா விஜயகுமார் பேசியது தான் பலருக்கும் ஷாக் கொடுத்தது என்பதை விட, பவீஷ்க்கே ஷாக் கொடுத்தது எனலாம்.

ஜோவிகா விஜயகுமார்: அதாவது, " அந்த சிக்கன் எல்லாம் நான் சமைக்கவில்லை. நான் டயர்ட்டில் இருக்கிறேன். எனது மகளுமே டயர்ட்டில் தான் இருக்கிறார். ஆனாலும் எனது மகள் சிக்கன் விங்ஸை சுவையாக சமைத்துக் கொடுப்பார். அதை நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு எடுத்துச் செல்வேன். பவீஷ் மற்றும் ஜோவிகா என இருவரும் பேசிக் கொண்டது கிடையாது. இருவருக்கும் ஆகஸ்ட் 18ஆம் தேதி தான் பிறந்த நாள். இருவருமே அம்மா புள்ளைங்க தான். நான் வீட்டில் பவீஷ் குறித்து பேசிக் கொண்டே இருப்பேன். அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள், ஆனால் என் வழியே இருவருக்கும் ஒரு பாண்டிங் உள்ளது" என்று தெரிவித்தார்.
லவ்வோ லவ்: பவீஷ் தெரிவித்ததும், வனிதா விஜயகுமார் பகிர்ந்து கொண்டதும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. லவ்வோ லவ் படத்தை இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கி உள்ளார். படத்தில் பவீஷ், நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் படத்திற்கு ஃபாக்ஸன் இசையமைத்துள்ளார். படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications