ரஜினிகாந்த் படத்துக்காக 70 கிலோ எடை குறைத்த எம்ஜிஆர் பேரன்.. கூலி படம் குறித்து சொன்ன செம அப்டேட்!

சென்னை: மக்கள் திலகம் எம்ஜிஆரின் வளர்ப்பு மகளின் மகன் ராமசந்திரன் ஜூனியர் எம்ஜிஆர் என்றே அழைக்கப்பட்டு வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் ஜூனியர் எம்ஜிஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் அந்த படத்துக்காக 70 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது 2வது படமான கைதி படத்தின் மூலம் தான் ஒரு தரமான இயக்குநர் என்பதை நிரூபித்தார். அதன் பின்னர் விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ என பேக் டு பேக் பிளாக்பஸ்டர் படங்களையும் இண்டஸ்ட்ரி ஹிட் படங்களையும் கொடுத்து இந்தியாவே திரும்பிப் பார்க்கும் இயக்குநராக மாறியுள்ளார்.

junior mgr rajinikanth coolie

ரஜினிகாந்தின் கூலி படத்தில் இந்தியாவின் டாப் மோஸ்ட் பிரபல நடிகர்களை ஒருங்கிணைத்து வேலை வாங்கி வரும் லோகேஷ் கனகராஜ் ஜூனியர் எம்ஜிஆரையும் இந்த படத்தில் நடிக்க வைத்திருப்பது ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் ஆக மாறியுள்ளது.

ஜூனியர் எம்ஜிஆர்: எம்ஜிஆரின் வளர்ப்பு மகளான சுதாவுக்கும் விஜயகுமார் என்பவருக்கும் பிறந்த மகனுக்கு ராமச்சந்திரன் என்றே பெயர் வைத்துள்ளனர். ஜூனியர் எம்ஜிஆர் என்றே தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். 2020ம் ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் வெளியான எட்டுத்திக்கும் பற படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து சமுத்திரகனி நடித்த சங்கத் தலைவன், எம்ஜிஆர் மகன், வெள்ளை யானை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், கெளதம் கார்த்தி நடித்த 16 ஆகஸ்ட் 1947 மற்றும் யோகி பாபுவின் இரும்பன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

junior mgr rajinikanth coolie

லோகேஷ் கனகராஜ் என் குரு: கிரிக்கெட் விளையாடும் போதுதான் லோகேஷ் கனகராஜ் உடன் நட்பு ஏற்பட்டது. நாங்க எல்லாம் டர்ஃப்ல ஒண்ணா கிரிக்கெட் ஆடுவோம். இந்த படத்தில் நடிக்க வாங்கன்னு கூப்பிட்டார். ரிஹர்சல் எல்லாம் பார்த்துட்டு அவருக்கு பிடிச்சுப் போச்சு நடிக்க வச்சிட்டார். லோகேஷ் கனகராஜ் என்னோட குரு. மாஸ்டர் ஆஃப் சினிமான்னு அவரை சொல்லலாம். ஒரு சீனை அவர் எடுக்குற மாதிரி யாராலும் எடுக்க முடியாது. கூலி படத்தை வேறலெவலில் செதுக்கிட்டு வருகிறார் எனக் கூறினார்.

70 கிலோ எடை குறைப்பு: கூலி படத்துக்காக கொஞ்சம் எடையை குறைக்க முடியுமான்னு கேட்டார். நானும் ஓகேன்னு சொல்லிட்டு சுமார் 70 கிலோ வரை எடையை குறைத்துள்ளேன் என ஜூனியர் எம்ஜிஆர் ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே கூலி படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், சத்யராஜ் என பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில், ஜூனியர் எம்ஜிஆரும் இணைந்திருக்கிறார்.

ரஜினி சார் நிறைய சொல்வார்: சூப்பர் ஸ்டாருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துப் பேசிய அனுபவம் பத்தி சொல்லுங்களே என்கிற கேள்விக்கு, எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டது குறித்தும், ஸ்விம்மிங் பூல் பற்றியும் சார் நிறைய விஷயங்களை ஜாலியாக பேசுவார் அவருடன் இணைந்து நடிக்கும் பாக்கியத்தைக் கொடுத்ததற்கு எப்போதுமே லோகேஷுக்குத்தான் நன்றி சொல்வேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X