அவர் இல்லாம நான் இல்ல.. சினிமாவை விட்டு விலக காரணம் இதுதான்..ஜோதி மீனா பேட்டி!

சென்னை: தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாகப் புகழ்பெற்ற மறைந்த நடிகை ஜோதி லட்சுமியின் மகள் தான் ஜோதி மீனா. அம்மாவைப் போலவே சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த இவர், தனது திருமண வாழ்க்கை குறித்தும், சினிமாவை விட்டு விலகியதற்கான காரணம் குறித்தும் மனம் திறந்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நடிகை ஜோதி மீனா, சரத்குமார் நடித்த ரகசிய போலிஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். உள்ளத்தை அள்ளித்தா, அழகான நாட்கள், கோபாலா கோபாலா போன்ற படங்களிலில் நடித்தார். மேலும், அவர், அஜித், விஜய், பிரபு, சரத்குமார் ஆகியோரின் படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு ஆட்டமும் போட்டு கவர்ச்சி நடிகை என பெயர் எடுத்தார். திருமணத்திற்குப் பிறகு குடும்பத்துடன் செட்டிலான நடிகை ஜோதி மீனா, 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

jyothi lakshmis daughter jyothi meena interview

நடிகை ஜோதி மீனா: அவர் அளித்துள்ள பேட்டியில், அம்மா நடிகை, அப்பா கேமராமேன் ரெண்டு பேரும் எப்போதும் பிஸியாகவே இருப்பார்கள். இதனால், சின்ன வயசில் பெரும்பாலும் தனிமையிலேயே இருந்தேன். பத்தாவது முடிச்சதும் அம்மாவைப் போல டான்ஸ் மீது ஆர்வம் வந்தது. அவங்களை மாதிரி நானும் டான்ஸில் புகழ்பெற ஆசைப்பட்டேன். அதனால், கதாநாயகி வாய்ப்பு வந்த போதும் மறுத்துட்டேன். 17 வயதில், ரகசிய போலீஸ் படத்தில் நடித்தேன். ஒரு கட்டத்தில், கிளாமர் பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடுற மாதிரி என் ரூட் மாறிவிட்டது.

அவர் இல்லாமல் நான் இல்ல: அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போது தான், என் காதலரை கல்யாணம் செய்துகிட்டேன். எங்கள் திருமணத்திற்கு முதலில் ரெண்டு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தாலும், பிறகு சம்மதம் கிடைச்சது. ஆனால், அம்மாவிற்கு மகள் நடிக்கவில்லையே என்கிற ஏக்கம் இருந்தது. ஆனால், மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். என் கணவர் ரொம்ப அன்பானவர், நாங்கள் அடிக்கடி சண்டை போட்டுப்போம். ஆனால் அவர் இல்லாமல் என்னால இருக்க முடியாது.

காரணம் இதுதான்: மேலும், திருமணம் ஆனதும் சினிமாவை விட்டு விலகி விட்டேன் காரணம், என் கணவரையும் குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஏன் என்றால், என் அம்மா சினிமாவில் இருந்ததால், நான் பல நாட்கள் தனிமையில் இருந்து இருக்கிறேன். அதே நிலை என் மகனுக்கு வரக்கூடாது என்று நினைத்தேன். பள்ளிக்கு அழைத்து செல்வது, டியூஷனுக்கு அழைத்து செல்வது என எப்போதும் அவன் கூடவே இருப்பேன். இப்போது, அவன் டாக்டராகி விட்டான். கணவர், மகன் இருவரும் காலையில் போனால் இரவு தான் வருவார்கள். இதனால் மறுபடியும் நடிக்க முடிவெடுத்தேன். இதனால், சினிமாவோ, சீரியலோ மக்கள் மனசுல நிற்கும் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன் என்று நடிகை ஜோதி மீனா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X