twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜோதிகா நடிக்க மாட்டார்: சூர்யா ஜோதிகா இனிமேல் நடிக்க மாட்டார் என்று அவரது கணவர் நடிகர் சூர்யா கூறியுள்ளார். இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் ஜோதிகாவும் சூர்யாவும் நிருபர்களை சந்தித்தனர். தி.நகரில் நட்சத்திரஹோட்டலில் நடந்த இந்த பிரஸ்மீட்டுக்கு சூர்யாவின் தந்தை சிவக்குமாரும் வந்திருந்தார்.முதலில் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், உங்களை (நிருபர்கள்) ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்ற ஒரேகேள்விதான் உங்கள் மனதில் நிலவுகிறது என்பதை நான் அறிவேன். எனது மகள் திருமணத்திற்கே உங்களை அழைத்தேன். அந்த கல்யாணத்திற்கே 10,000பேர் வந்திருந்தனர். அப்படி இருக்கும் போது மகன் திருமணத்திற்கு, அதுவும்நடிகரான சூர்யாவின் கல்யாணத்திற்கு உங்களை கூப்பிட மாட்டேனா?என்ன நடந்தது என்றால், சூர்யா திருமணத்திற்கு ஆந்திராவில் இருந்தும்,நாகர்கோவில், தஞ்சை போன்ற ஊர்களிலிருந்தும் குடும்பம் குடும்பமாக வருவதாகஅறிந்தோம். கிட்டத்தட்ட 50,000 பேருக்கு மேல் வருவார்கள் என போலீஸ்உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தனை பேர் வந்தால் நாங்கள் எப்படிசமாளிக்க முடியும்?2 மாதங்களுக்கு முன்பு ஒரு ரசிகர் என்னுடன் பேச முடியவில்லையே என்றகோபத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டார். தீவிரவாதிகள்பதுங்கியிருப்பதாக செய்தி கிளப்பினார். இது அனைவருக்கும் தெரியும். அதே ரசிகர்மீண்டும் போன் செய்து கல்யாணம் நடக்கக் கூடாது. நடந்தால் என்ன செய்வேன்என்று எனக்கே தெரியாது என மீண்டும் மீண்டும் மிரட்டினார். அவரது தொல்லையால் தொலைபேசி இணைப்பையே துண்டித்து விட்டோம்.இதுகுறித்து போலீஸிலும் புகார் கொடுத்தோம்.அதன் பிறகு 10 மிரட்டல் கடிதங்கள் வந்தன. பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன.திருமணம் வேறு நியூயார்க் நகர இரட்டை கோபுர தகர்ப்பு நினைவு தினமானசெப்டம்பர் 11ம் தேதி நடப்பதால் பாதுகாப்பு கருதி திருமண வரவேற்பையே ரத்துசெய்தோம்.திருமண மண்டபத்தில் 500 பேர் தான் அமர முடியும். இதில் பத்திரிக்கையாளர்கள்,புகைப்படக்காரர்களை அனுமதித்தால் உறவினர்கள் எங்கே அமர முடியும்? அந்தஒரே காரணத்திற்காகத் தான் உங்களை அழைக்கவில்லை. அதற்காக தயவு செய்துமன்னித்து விடுங்கள் என்றார் சிவக்குமார்.இதையடுத்துப் பேசிய சூர்யா,எங்கள் திருமணத்தை இதைவிட சிறப்பாக பத்திரிகைகள் மூலம் தெரிவித்திருக்க முடியாது. அந்த அளவுக்குஎல்லா பத்திரிகைகளிலும் கல்யாண ஆல்பம் போல படங்கள் வெளியிட்டிருந்தனர். இதற்கு எவ்வளவு நன்றிசொன்னாலும் போதாது. என் திருமணத்துக்கு எல்லாரையும் அழைக்க முடியவில்லை. ஸாரி, அதற்கு சிலகாரணங்கள் இருந்தன.திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய முதல்வர் கலைஞர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார்ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த எல்லோருக்கும் நன்றி.கேள்வி: ஜோதிகா மீண்டும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா? நீங்கள் அனுமதிப்பீர்களா?பதில்: நான் அனுமதிப்பது என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால், ஜோதிகா நடிக்க மாட்டார். இப்போதைக்குஅவருக்கு நடிக்கும் எண்ணம் இல்லை.கேள்வி: எதிர்காலத்தில் நடிப்பாரா?பதில்: இப்போது நடிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கைக்கு வந்துள்ளார். குடும்பவாழ்க்கை என்று சொல்லும் போது எதிர்காலத்திலும் நடிக்க வாய்ப்பு இல்லை தானே. இனி குடும்பம்,குழந்தைகள் என்று வாழ்க்கை போகும்.கேள்வி: திருமணம் நடக்க ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது?பதில்: நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இரு குடும்பத்தினரும் மனப்பூர்வமாக சம்மதிக்க வேண்டும்என்று காத்திருந்தோம். அதன்படி அவர்கள் ஆசியுடன் தான் திருமணம் நடந்துள்ளது. இன்டர்நெட், எஸ்எம்எஸ்,கடிதங்கள் மூலம் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து விட்டனர்.கேள்வி: மீண்டும் நடிக்காதது ஜோதிகாவுக்கு வருத்தமா?பதில்: நான் ஜோதிகாவிடம் கேட்டு விட்டேன். வருத்தம் இல்லையாம் என்றார் சிரித்தபடியேஅருகே சிரித்தபடி அமர்ந்திருந்த ஜோதிகாவை பின்னர் கேள்விகளால் துளைத்தனர்.சினிமாவில் நடிக்காதது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டபோது, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குடும்பத்துக்காக மீண்டும் நடிக்க மாட்டேன். அதில் எனக்குசந்தோஷம். பத்திரிக்கைகள் மிக்ச சிறப்பாக எங்கள் திருமண செய்தி, படங்களை வெளியிட்டன. அதற்காக நன்றிஎன்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.ஹனிமூனுக்கு ஐரோப்பா போகப் போகிறார்களாம் சூர்யா-ஜோதிகா தம்பதி.தனிக்குடித்தனம் போகும் திட்டம் ஏதும் இல்லையாம். சிவக்குமாரின் வீட்டின் மாடியிலேயே ஒரு பகுதியைஎக்ஸ்டெண்ட் செய்து கொண்டு குடும்பத்தோடு சேர்ந்து இருக்கப் போகிறாராம் நல்ல பிள்ளையான சூர்யா.சூர்யா குடும்பத்தோடு வசிக்கவே தனக்கும் விருப்பம் என்று சொல்லிவிட்டாராம் ஜோதிகா.நேற்று நட்சத்திர ஹோட்டலில் நடந்த திருமணத்தைத் தொடர்ந்து சூர்யாவின் வீட்டில் ஜோதிகாவின் மும்பைவழக்கப்படி திருமண சடங்குகள் நடந்தன. அதில் ஜோதிகா-சூர்யாவின் உறவினர்கள் ஏராளமான அளவில்கலந்து கொண்டனர்.

    By Staff
    |

    ஜோதிகா இனிமேல் நடிக்க மாட்டார் என்று அவரது கணவர் நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

    இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் ஜோதிகாவும் சூர்யாவும் நிருபர்களை சந்தித்தனர். தி.நகரில் நட்சத்திரஹோட்டலில் நடந்த இந்த பிரஸ்மீட்டுக்கு சூர்யாவின் தந்தை சிவக்குமாரும் வந்திருந்தார்.

    முதலில் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார்,

    உங்களை (நிருபர்கள்) ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்ற ஒரேகேள்விதான் உங்கள் மனதில் நிலவுகிறது என்பதை நான் அறிவேன்.

    எனது மகள் திருமணத்திற்கே உங்களை அழைத்தேன். அந்த கல்யாணத்திற்கே 10,000பேர் வந்திருந்தனர். அப்படி இருக்கும் போது மகன் திருமணத்திற்கு, அதுவும்நடிகரான சூர்யாவின் கல்யாணத்திற்கு உங்களை கூப்பிட மாட்டேனா?


    என்ன நடந்தது என்றால், சூர்யா திருமணத்திற்கு ஆந்திராவில் இருந்தும்,நாகர்கோவில், தஞ்சை போன்ற ஊர்களிலிருந்தும் குடும்பம் குடும்பமாக வருவதாகஅறிந்தோம். கிட்டத்தட்ட 50,000 பேருக்கு மேல் வருவார்கள் என போலீஸ்உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தனை பேர் வந்தால் நாங்கள் எப்படிசமாளிக்க முடியும்?

    2 மாதங்களுக்கு முன்பு ஒரு ரசிகர் என்னுடன் பேச முடியவில்லையே என்றகோபத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டார். தீவிரவாதிகள்பதுங்கியிருப்பதாக செய்தி கிளப்பினார். இது அனைவருக்கும் தெரியும். அதே ரசிகர்மீண்டும் போன் செய்து கல்யாணம் நடக்கக் கூடாது. நடந்தால் என்ன செய்வேன்என்று எனக்கே தெரியாது என மீண்டும் மீண்டும் மிரட்டினார்.

    அவரது தொல்லையால் தொலைபேசி இணைப்பையே துண்டித்து விட்டோம்.இதுகுறித்து போலீஸிலும் புகார் கொடுத்தோம்.

    அதன் பிறகு 10 மிரட்டல் கடிதங்கள் வந்தன. பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன.திருமணம் வேறு நியூயார்க் நகர இரட்டை கோபுர தகர்ப்பு நினைவு தினமானசெப்டம்பர் 11ம் தேதி நடப்பதால் பாதுகாப்பு கருதி திருமண வரவேற்பையே ரத்துசெய்தோம்.


    திருமண மண்டபத்தில் 500 பேர் தான் அமர முடியும். இதில் பத்திரிக்கையாளர்கள்,புகைப்படக்காரர்களை அனுமதித்தால் உறவினர்கள் எங்கே அமர முடியும்? அந்தஒரே காரணத்திற்காகத் தான் உங்களை அழைக்கவில்லை. அதற்காக தயவு செய்துமன்னித்து விடுங்கள் என்றார் சிவக்குமார்.

    இதையடுத்துப் பேசிய சூர்யா,

    எங்கள் திருமணத்தை இதைவிட சிறப்பாக பத்திரிகைகள் மூலம் தெரிவித்திருக்க முடியாது. அந்த அளவுக்குஎல்லா பத்திரிகைகளிலும் கல்யாண ஆல்பம் போல படங்கள் வெளியிட்டிருந்தனர். இதற்கு எவ்வளவு நன்றிசொன்னாலும் போதாது. என் திருமணத்துக்கு எல்லாரையும் அழைக்க முடியவில்லை. ஸாரி, அதற்கு சிலகாரணங்கள் இருந்தன.

    திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய முதல்வர் கலைஞர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார்ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த எல்லோருக்கும் நன்றி.


    கேள்வி: ஜோதிகா மீண்டும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா? நீங்கள் அனுமதிப்பீர்களா?

    பதில்: நான் அனுமதிப்பது என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால், ஜோதிகா நடிக்க மாட்டார். இப்போதைக்குஅவருக்கு நடிக்கும் எண்ணம் இல்லை.

    கேள்வி: எதிர்காலத்தில் நடிப்பாரா?

    பதில்: இப்போது நடிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கைக்கு வந்துள்ளார். குடும்பவாழ்க்கை என்று சொல்லும் போது எதிர்காலத்திலும் நடிக்க வாய்ப்பு இல்லை தானே. இனி குடும்பம்,குழந்தைகள் என்று வாழ்க்கை போகும்.

    கேள்வி: திருமணம் நடக்க ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது?

    பதில்: நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இரு குடும்பத்தினரும் மனப்பூர்வமாக சம்மதிக்க வேண்டும்என்று காத்திருந்தோம். அதன்படி அவர்கள் ஆசியுடன் தான் திருமணம் நடந்துள்ளது. இன்டர்நெட், எஸ்எம்எஸ்,கடிதங்கள் மூலம் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து விட்டனர்.

    கேள்வி: மீண்டும் நடிக்காதது ஜோதிகாவுக்கு வருத்தமா?

    பதில்: நான் ஜோதிகாவிடம் கேட்டு விட்டேன். வருத்தம் இல்லையாம் என்றார் சிரித்தபடியே


    அருகே சிரித்தபடி அமர்ந்திருந்த ஜோதிகாவை பின்னர் கேள்விகளால் துளைத்தனர்.சினிமாவில் நடிக்காதது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டபோது, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குடும்பத்துக்காக மீண்டும் நடிக்க மாட்டேன். அதில் எனக்குசந்தோஷம். பத்திரிக்கைகள் மிக்ச சிறப்பாக எங்கள் திருமண செய்தி, படங்களை வெளியிட்டன. அதற்காக நன்றிஎன்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

    ஹனிமூனுக்கு ஐரோப்பா போகப் போகிறார்களாம் சூர்யா-ஜோதிகா தம்பதி.

    தனிக்குடித்தனம் போகும் திட்டம் ஏதும் இல்லையாம். சிவக்குமாரின் வீட்டின் மாடியிலேயே ஒரு பகுதியைஎக்ஸ்டெண்ட் செய்து கொண்டு குடும்பத்தோடு சேர்ந்து இருக்கப் போகிறாராம் நல்ல பிள்ளையான சூர்யா.சூர்யா குடும்பத்தோடு வசிக்கவே தனக்கும் விருப்பம் என்று சொல்லிவிட்டாராம் ஜோதிகா.

    நேற்று நட்சத்திர ஹோட்டலில் நடந்த திருமணத்தைத் தொடர்ந்து சூர்யாவின் வீட்டில் ஜோதிகாவின் மும்பைவழக்கப்படி திருமண சடங்குகள் நடந்தன. அதில் ஜோதிகா-சூர்யாவின் உறவினர்கள் ஏராளமான அளவில்கலந்து கொண்டனர்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X