கருப்பு படத்துல அந்த காட்சி சூர்யா எப்படி தான் நடிச்சாருனு தெரியல.. வீட்டுல இதுதான் ரியாக்‌ஷன்.. ஜோதிகா பளிச்

சென்னை: சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், ஆர்ஜே பாலாஜி, நடராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் கருப்பு. படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல், கதை, திரைக்கதை அமைத்து இயக்கவும் செய்திருந்தார் ஆர்ஜே பாலாஜி.

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் ரூபாய் 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டது என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டது. இப்படி இருக்கையில் கருப்பு படத்தின் வெற்றி குறித்து சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் அந்த பேட்டியில், " கருப்பு போன்ற கதை அமைவது சிரமம். காரணம் கதை சொல்லும் விதம் புதிது, கதாபாத்திரத்தை கையாளும் விதம் புதிது, படத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்யவும் காட்சிகள் இருக்கிறது. மாஸான காட்சிகளும் கிளாசான காட்சிகளும் உள்ளது. இது மட்டும் இல்லாமல், படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. கடைசி 10 நிமிடங்கள் எல்லாம் சூர்யா மிகவும் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

Jyothika Celebrates Karuppu Success Our Home Feels Like a Festival After Suriya s Massive Comeback
Photo Credit:

ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். வசூலில் படம் வெற்றி பெற்று வருகிறது. நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்கள் வீட்டில் ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கிறது. கருப்பு வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமான வெற்றி" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை ஜோதிகா இயல்பிலேயே சூர்யாவுக்கு மிகவும் முக்கியமான நேரங்களில் பக்கபலமாக இருந்துள்ளார். கங்குவா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து எதிர்மறையான விமர்சனங்கள் காட்டமான முறையில் வெளிவந்த போது, சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதேபோல் கருப்பு வெற்றி குறித்தும் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

அடிமேல் அடி: பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னரும் பல சறுக்கல்களுக்குப் பின்னரும் சூர்யாவுக்கு கிடைத்த முதல் தியேட்டரிக்கல் வெற்றி கருப்பு. அவரது கடைசி படமான ரெட்ரோ கூட தோல்வியைத் தவிர்த்தது என்று குறிப்பிடலாமே தவிர, வெற்றியை ஈட்டியது என்று குறிப்பிட முடியாது. ஆனால் அதற்கும் முந்தைய படங்கள் அடி மேல் அடி கொடுத்துக் கொண்டே இருந்தது.

Jyothika Celebrates Karuppu Success Our Home Feels Like a Festival After Suriya s Massive Comeback

மொத்த தியேட்டரும் ஒரு ஆட்டம் போட்டுவிட்டது: அப்படி இருந்தாலும் ரசிகர்களுக்கு சூர்யா மீது இருந்த நம்பிக்கையால் அவரது படங்களுக்கான ஓப்பனிங் மட்டும் குறையவே இல்லை. இப்படி பல ஆண்டுகளாக சூர்யாவுக்காக உடன் நின்ற அவரது அன்பான ரசிகர்களுக்கு கருப்பு படம் ஒரு திரை விருந்தாக மாறிவிட்டது. கருப்பு படத்தில் மொத்தமாகவே சூர்யா சுமார் 15 காட்சிகள் தான் வருவார் என்பது போல இருக்கும், ஆனால் கிளைமாக்ஸில் அவர் கருப்பனாக ஆடும் ஆட்டம் மொத்த தியேட்டரையும் ஒரு ஆட்டு ஆட்டி விட்டது எனலாம்.

எதிர்பார்க்கப்படும் வசூல்: படத்தின் வெற்றி மொத்த படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. படம் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தின் வசூல் குறைந்த பட்சம் 300 கோடிகள் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X