twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Excl: ஜோதிகா தங்கச்சி மாதிரி.. விஜய் சேதுபதி ஆக்டர்.. சிவகார்த்திகேயன் ஸ்டார்.. ஆனந்த்ராஜ் கலகல!

    |

    சென்னை: நடிகை ஜோதிகா தன்னுடைய சகோதரி போல் என்று நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    'Jyothika என்னோட தங்கச்சி' | Anandraj Interview Part 1 | Oneindia Tamil

    தமிழ் சினிமாவில் 1980களில் இருந்து நடித்து வருகிறார் நடிகர் ஆனந்த்ராஜ். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார் ஆனந்த்ராஜ். சென்னை பிலிம் இன்ஸ்டியூட்டில் நடிப்பு பயிற்சியை முடித்த ஆனந்த்ராஜ் 1988ஆம் ஆண்டு வெளியான ஒருவர் வாழும் ஆலயம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

    வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நான் உங்களை மிஸ் பண்றேன்.. அம்மா குறித்து நடிகை வனிதா உருக்கம்! வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நான் உங்களை மிஸ் பண்றேன்.. அம்மா குறித்து நடிகை வனிதா உருக்கம்!

    ஆனந்த்ராஜ் நேர்காணல்

    ஆனந்த்ராஜ் நேர்காணல்

    சிறந்த வில்லன் நடிகராக வலம் வரும் ஆனந்த்ராஜ், வில்லன் நடிகராக மட்டுமின்றி நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒன் இந்தியா தமிழ் தளத்துக்கு நேர்காணல் அளித்துள்ளார் நடிகர் ஆனந்த்ராஜ். இதில் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் ஆனந்த்ராஜ்.

    மக்கள் கவனமாக இருக்கவேண்டும்

    மக்கள் கவனமாக இருக்கவேண்டும்

    இந்த கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும், அரசாங்கம் சொல்லும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். சோஷியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ண வேண்டும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்திய ஆனந்த்ராஜ் எமது செய்தியாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    போலீஸ்காரர் ஆவதுதான்

    போலீஸ்காரர் ஆவதுதான்

    நடிக்க வராவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் ஆனந்த் ராஜ், நடிப்புத்துறைக்கு வராமல் இருந்திருந்தார், என்னுடைய முதல் சாய்ஸ் போலீஸ்காரர் ஆவதுதான். அதற்கான ஃபிட்னஸ் என்னிடம் இருந்தது. 2வது சாய்ஸ் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே புதுச்சேரியில் என்பதால் அங்குள்ள ஃபிரெஞ்சு ஆர்மியில் சேர்ந்திருப்பேன் அதுவும் இல்லாவிட்டால் ஃபாரஸ்ட் ரேஞ்சர் ஆகியிருப்பேன். அனிமல்ஸோடு இருப்பது எனக்கு பிடிக்கும்.

    பறவைகளின் சத்தம் கேட்க பிடிக்கும்

    பறவைகளின் சத்தம் கேட்க பிடிக்கும்

    அடிமைச்சங்கிலி படத்தை நண்பர் செல்வமணி இயக்கினார். அந்த படம் முழுக்க காடுகளில்தான் எடுக்கப்பட்டது, தமிழ் நாடு காடு, ஆந்திரா காடு, கர்நாடகா காடு, கேரளா காடு என அந்த வாசமே ரொம்ப பிடித்தது. என் வீட்டிலும் நிறைய மரங்கள் வைத்துள்ளேன். காலையில் அவற்றில் அமர்ந்து கத்தும் பறவைகளின் சத்தம் கேட்க பிடிக்கும்.

    ஹீரோவாக நடிக்க அல்ல

    ஹீரோவாக நடிக்க அல்ல

    பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்து விட்டு வில்லன் கதாபாத்திரங்களை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆனந்த்ராஜ், பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்தது நடிப்பதற்காகதான், ஹீரோவாக நடிக்க அல்ல. ரகுவரன், நாசர் இவர்கள் எல்லாம் எனக்கு சீனியர்கள்.
    ரகுவரன் முதல் படம் ஹீரோவாக நடித்தார். பின்னர் வில்லன் ரோல் பண்ண ஆரம்பித்துவிட்டார். தெலுங்கில் ராஜசேகர், சிரஞ்சீவி, ரஜினி சார் எல்லாருமே பிலிம் சாம்பரில் இருந்து வந்தவர்கள்தான், நடிப்புக்கான பயிற்சிதானே தவிர கதாநாயகன் ஆக அல்ல.

    முழுசா சிறப்பா பண்ணனும்

    முழுசா சிறப்பா பண்ணனும்

    கதாநாயகன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதெல்லாம் வேறு.. என்னை பொறுத்தவரை நடிப்புதான்.. எதற்கு எதை நடிக்க வேண்டும் என்பதுதான். கதாநாயகனாக நடித்தால், பாட்டுப்பாடனும், டான்ஸ் ஆட வேண்டும் லவ் பண்ண வேண்டும் லவ் லெட்டர் கொடுக்க வேண்டும் ஹீரோயின் பின்னாடி போகணும்.. என்ன கேரக்டர் பண்றோமோ அதை முழுசா சிறப்பா பண்ணனும்.. அதை பண்றோம்.

    காம்பிடிஷன் ஜாஸ்தி ஆயிடுச்சு

    காம்பிடிஷன் ஜாஸ்தி ஆயிடுச்சு

    வில்லன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர ரோல்களில் நடிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆனந்த்ராஜ், காம்பிடிஷன் ஜாஸ்தி ஆயிடுச்சு.. ட்ராஃபிக் ஜாம் ஆயிடுச்சு.. நான் வில்லனாக நடிக்கும்போது கதாநாயர்களாக இருந்த பலர் இப்போ வில்லனா மாறிட்டாங்க. உதாரணத்துக்கு தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு இப்போ வில்லனாக நடிக்க தொடங்கிவிட்டார்.

    ஏதாவது பண்ணனுமேன்னு

    ஏதாவது பண்ணனுமேன்னு

    இங்கே எடுத்துக்கொண்டால் ராம்கி சார், கார்த்திக் சார், சத்தியராஜ் சாரே வில்லனாகவோ குணச்சித்திர நடிகராகவோ நடிக்கிறார்கள். நல்ல மார்க்கெட் உள்ள நடிகரே வில்லனாகவும் ஹீரோவாகவும் டூயூவல் ரோல் பண்றாங்க. அது ஒரு நல்ல விஷயம் தான். இப்படி ட்ராஃபிக் ஜாமானதால், நம்ம என்ன பண்றதுன்னு தெரியாம, ஏதாவது பண்ணனுமேன்னு பழைய ரங்காராவ் சார் மாதிரி, பாலய்யா சார் மாதிரி எம்ஆர் ராதா சார் மாதிரி நிறைய பேர் உதாரணத்துக்கு இருக்காங்க.

    கன்னத்த பிடிச்சு கிள்ற அளவுக்கு

    கன்னத்த பிடிச்சு கிள்ற அளவுக்கு

    அப்படி பண்ண போய் அது எல்லாருக்கும் பிடிச்சு போய் காருக்குள்ள கைய விட்டு கன்னத்த பிடிச்சு கிள்ற அளவுக்கு ஆயிடுச்சு... என்று கலகலப்பாக கூறினார் ஆனந்த்ராஜ். நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடித்த கதாப்பாத்திரம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் சிம்மராசி படத்திற்காக பயங்கரமாக வொர்க்கவுட் செய்தேன்.. அடுத்து சூர்யவம்சம் படத்தில் நடிக்கும் போது நாட்கள் குறைவாக இருந்தது ஆனால் படம் பெரும் ஹிட்.. சில படங்களில் நம்ம உழைப்புக்கான வெற்றி இல்லாமல் போகும்.

    விஜய்சேதுபதி ஆக்டர்

    விஜய்சேதுபதி ஆக்டர்

    வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை இந்த ரோல்களில் எது ரொம்பவே கடினமானது என்ற கேள்விக்கு பதிலளித்த ஆனந்த்ராஜ், எல்லாமே கடினமானதுதான் என்றார். தொடர்ந்து பேசிய அவர் , சிவகார்த்திகேயன் ஸ்டார் விஜய்சேதுபதி ஆக்டர். அவர் எல்லா கதாப்பாத்திரங்களையும் செய்கிறார். கமல் சார் ஆக்டர். ரஜினி சாரையும் ஆக்டர் என்று சொல்லலாம் ஆனால் அவருக்கு என ஒரு ஸ்டார் பிம்பம் உள்ளது என்றார்.

    ஜோதிகா எனக்கு தங்கச்சி மாதிரி

    ஜோதிகா எனக்கு தங்கச்சி மாதிரி

    ஜோதிகாவுடன் காமெடி கேரக்டரில் நடித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆனந்த்ராஜ், அந்த வாய்ப்பை கொடுத்ததற்காக என் தம்பி சூர்யாவுக்கும் என் சகோதரி ஜோதிகாவுக்கும் நன்றி சொல்லணும், மேல் டாமினேஷன் இல்லாத படம், ஜோதிகா எனக்கு தங்கச்சி மாதிரி இதை நானே அவரிடம் பலமுறை கூறியிருக்கிறேன். நல்ல விஷயத்தை கொடுத்தால் நல்ல அவுட்புட் கிடைக்கும். அப்படிதான் இந்த படம்.

    அதெல்லாம் கொடுப்பனை

    அதெல்லாம் கொடுப்பனை

    யாருடன் நடித்த போது இவர் நமக்கே டஃப் கொடுக்கிறாரே என்று தோன்றியது என்ற கேள்விக்கு பதிலளித்த ஆன்ந்த்ராஜ், என்னை வம்பில் மாட்டிவிட பார்க்கிறீர்களா என கிண்டலாக கேட்டார். தொடர்ந்து பேசிய அவர் மனோரமா, ஸ்ரீவித்யா, நாகேஷ், ஜெய்சங்கர். ரவிச்சந்திரன் இவர்களுடன் நடித்திருக்கேன். அதெல்லாம் கொடுப்பனை.. அவர்கள் நடிக்க ஆரம்பித்தால் கேரக்டராகவே மாறிவிடுவார்கள் அவர்களுடன் நடிக்கிறோம் என்றாலே நடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் வந்துவிடும். நடிக்க தொடங்கி விடுவோம்

    மகிழ்ச்சியாய் இருக்கிறது

    மகிழ்ச்சியாய் இருக்கிறது

    ரகுவரனுக்கு பிறகு சிறந்த வில்லன் என்றால் ஆனந்த்ராஜ் தான் என்று கேட்கும் போது எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த ஆனந்த்ராஜ், சிறந்த வில்லன் என்ற கேட்கும் போதெல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணியிருக்கிறோம் என்று நினைத்து கொள்வேன். நம்முடைய வேலையை நாம் நன்றாக செய்தாக வேண்டும். இவ்வாறு ஆனந்த்ராஜ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

    English summary
    Actor Anandraj says Jyothika is like his sister. Actor Anandraj sharing his experience with One India Tamil.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X