»   »  சூர்யாவுடன் திருமணம்: ஜோ கன்ஃபர்ம் எனக்கும் சூர்யாவுக்கும்தான் திருமணம் நநிடைபெறும். விரைவில் எல்லோருக்கும் தெரிவித்த பிறகே திருமணம் நடக்கும் எனஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.ஆதாம் ஏவாள் காதலுக்குப் பிறகு தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட காதல் சூர்யா-ஜோதிகா காதல் தான். அவ்வளவுநாட்களாகக் காதலிக்கிறார்கள். ஆனால், இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இந்த இருவரைத் தவிர மற்ற யாருக்குமேஅத்தனை உறுதியாகத் தெரியாது. அந்த அளவுக்கு பரம ரகசியமாக, படு தீவிரமாக காதலித்து வருகின்றனர் இருவரும்.குஷ்புவின் அபார்ட்மெண்ட்டில் தங்கியிருக்கும் ஜோதிகாவை காதலிக்கும் சூர்யா அப்படியே ஜோவுடன் சேர்ந்து ஒரு பெரியபங்களாவையும் கட்டி முடித்துவிட்டதாகக் கூட சொல்கிறார்கள்.இருவருக்கும் எப்போ கல்யாணம் என்ற கேள்வி ரொம்ப காலமாக கேட்கப்பட்டு வருகிறது. இதுவரை தனது தங்கையின்திருமணத்துக்குப் பிறகே தனது திருமணம் என்று கூறி வந்தார் சூர்யா.சமீபத்தில் அவரது தங்கையின் திருமணம் படுஜோராக நடந்து முடிந்துவிட்டது.இந் நிலையில் இப்போது ஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக சூர்யாவுடனான காதல் குறித்தும், கல்யாணம் குறித்தும் வாய்திறந்துள்ளார். தெலுங்குப் பத்திரிக்கையான ஈநாடு இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,எனக்கும், சூர்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். ஆனால் உடனடியாக நிடக்க வாய்ப்பில்லை. எனக்கும், அவருக்கும்சில படங்கள் உள்ளன. இருவரும் பிசியாகவே உள்ளோம். எல்லோருக்கும் அறிவித்து விட்டுத்தான் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். யாருக்கும் தெரியாமல் எங்களது கல்யாணம்நடக்காது. சூர்யாவுடன் இப்போது ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிக்கிறேன். அவருடைய (சூர்யா) சொந்த தயாரிப்பில் இந்த படம் தயார்ஆகிறது. தெலுங்கிலும் அது வெளியாகும் என்று கூறியுள்ளார் ஜோதிகா.தன்னிடம் கேட்கப்பட்டுள்ள மற்ற கேள்விகளுக்கு ஜோதிகா தந்துள்ள பதில் விவரம்:கே. தெலுங்கு படங்களில் நீங்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றவர்களுடன் நடித்த பிறகும் அதிக வாய்ப்பு வரவில்லையே?ப. ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த கதைகளில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. அதனால் அதில்நடிக்கவில்லை. எனக்கு முதலில் கதை பிடிக்க வேண்டும். பெண்கள் ஆதரவை பெறும் கதையாக அது இருக்க வேண்டும். எனக்குகதைதான் முதலில் ஹீரோ, மற்றவை பிறகுதான்.கே. சந்திரமுகி படம் தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றிருப்பது பற்றி?ப. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திரமுகியின் வெற்றி நான் எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி பெறும்என்று எதிர்பார்க்கவில்லை.கே. அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமே நீங்கள் தான். எப்படி உங்களை தேர்ந்தெடுத்தார்கள்?ப. சந்திரமுகியில் நான் நடித்த முதல் காட்சி கட்டிலை ஒரே கையால் தூக்குவது. எதிர்பார்த்ததை விட அது நன்றாக வந்தது.இதனால் என் மீது டைரக்டருக்கு அதிக நம்பிக்கை வந்து விட்டது.கே. சந்திரமுகியில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்ன?ப. வழக்கம் போல் தான் நடித்தேன். ஏற்கனவே வந்த மலையாள, தெலுங்கு படங்களில் ஷோபனாவும், செளவுந்தர்யாவும்நடித்திருந்தார்கள். அந்த படத்தை பலமுறை பார்த்து என்னை தயார் செய்து கொண்டேன். நடனத்துக்கு தான் கொஞ்சம்கஷ்டப்பட்டு பயிற்சி செய்தேன்.கே. படத்தின் வெற்றியில் பங்கு யாருக்கு அதிகம்?ப. ரஜினி சாருக்கு பிறகு எனக்கும், வடிவேலுவுக்கும் முக்கிய வேடம். பெண் ரசிகளும் வெற்றிக்கு காரணம்.

சூர்யாவுடன் திருமணம்: ஜோ கன்ஃபர்ம் எனக்கும் சூர்யாவுக்கும்தான் திருமணம் நநிடைபெறும். விரைவில் எல்லோருக்கும் தெரிவித்த பிறகே திருமணம் நடக்கும் எனஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.ஆதாம் ஏவாள் காதலுக்குப் பிறகு தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட காதல் சூர்யா-ஜோதிகா காதல் தான். அவ்வளவுநாட்களாகக் காதலிக்கிறார்கள். ஆனால், இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இந்த இருவரைத் தவிர மற்ற யாருக்குமேஅத்தனை உறுதியாகத் தெரியாது. அந்த அளவுக்கு பரம ரகசியமாக, படு தீவிரமாக காதலித்து வருகின்றனர் இருவரும்.குஷ்புவின் அபார்ட்மெண்ட்டில் தங்கியிருக்கும் ஜோதிகாவை காதலிக்கும் சூர்யா அப்படியே ஜோவுடன் சேர்ந்து ஒரு பெரியபங்களாவையும் கட்டி முடித்துவிட்டதாகக் கூட சொல்கிறார்கள்.இருவருக்கும் எப்போ கல்யாணம் என்ற கேள்வி ரொம்ப காலமாக கேட்கப்பட்டு வருகிறது. இதுவரை தனது தங்கையின்திருமணத்துக்குப் பிறகே தனது திருமணம் என்று கூறி வந்தார் சூர்யா.சமீபத்தில் அவரது தங்கையின் திருமணம் படுஜோராக நடந்து முடிந்துவிட்டது.இந் நிலையில் இப்போது ஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக சூர்யாவுடனான காதல் குறித்தும், கல்யாணம் குறித்தும் வாய்திறந்துள்ளார். தெலுங்குப் பத்திரிக்கையான ஈநாடு இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,எனக்கும், சூர்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். ஆனால் உடனடியாக நிடக்க வாய்ப்பில்லை. எனக்கும், அவருக்கும்சில படங்கள் உள்ளன. இருவரும் பிசியாகவே உள்ளோம். எல்லோருக்கும் அறிவித்து விட்டுத்தான் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். யாருக்கும் தெரியாமல் எங்களது கல்யாணம்நடக்காது. சூர்யாவுடன் இப்போது ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிக்கிறேன். அவருடைய (சூர்யா) சொந்த தயாரிப்பில் இந்த படம் தயார்ஆகிறது. தெலுங்கிலும் அது வெளியாகும் என்று கூறியுள்ளார் ஜோதிகா.தன்னிடம் கேட்கப்பட்டுள்ள மற்ற கேள்விகளுக்கு ஜோதிகா தந்துள்ள பதில் விவரம்:கே. தெலுங்கு படங்களில் நீங்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றவர்களுடன் நடித்த பிறகும் அதிக வாய்ப்பு வரவில்லையே?ப. ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த கதைகளில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. அதனால் அதில்நடிக்கவில்லை. எனக்கு முதலில் கதை பிடிக்க வேண்டும். பெண்கள் ஆதரவை பெறும் கதையாக அது இருக்க வேண்டும். எனக்குகதைதான் முதலில் ஹீரோ, மற்றவை பிறகுதான்.கே. சந்திரமுகி படம் தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றிருப்பது பற்றி?ப. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திரமுகியின் வெற்றி நான் எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி பெறும்என்று எதிர்பார்க்கவில்லை.கே. அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமே நீங்கள் தான். எப்படி உங்களை தேர்ந்தெடுத்தார்கள்?ப. சந்திரமுகியில் நான் நடித்த முதல் காட்சி கட்டிலை ஒரே கையால் தூக்குவது. எதிர்பார்த்ததை விட அது நன்றாக வந்தது.இதனால் என் மீது டைரக்டருக்கு அதிக நம்பிக்கை வந்து விட்டது.கே. சந்திரமுகியில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்ன?ப. வழக்கம் போல் தான் நடித்தேன். ஏற்கனவே வந்த மலையாள, தெலுங்கு படங்களில் ஷோபனாவும், செளவுந்தர்யாவும்நடித்திருந்தார்கள். அந்த படத்தை பலமுறை பார்த்து என்னை தயார் செய்து கொண்டேன். நடனத்துக்கு தான் கொஞ்சம்கஷ்டப்பட்டு பயிற்சி செய்தேன்.கே. படத்தின் வெற்றியில் பங்கு யாருக்கு அதிகம்?ப. ரஜினி சாருக்கு பிறகு எனக்கும், வடிவேலுவுக்கும் முக்கிய வேடம். பெண் ரசிகளும் வெற்றிக்கு காரணம்.

Subscribe to Oneindia Tamil

எனக்கும் சூர்யாவுக்கும்தான் திருமணம் நநிடைபெறும். விரைவில் எல்லோருக்கும் தெரிவித்த பிறகே திருமணம் நடக்கும் எனஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஆதாம் ஏவாள் காதலுக்குப் பிறகு தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட காதல் சூர்யா-ஜோதிகா காதல் தான். அவ்வளவுநாட்களாகக் காதலிக்கிறார்கள். ஆனால், இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இந்த இருவரைத் தவிர மற்ற யாருக்குமேஅத்தனை உறுதியாகத் தெரியாது. அந்த அளவுக்கு பரம ரகசியமாக, படு தீவிரமாக காதலித்து வருகின்றனர் இருவரும்.

குஷ்புவின் அபார்ட்மெண்ட்டில் தங்கியிருக்கும் ஜோதிகாவை காதலிக்கும் சூர்யா அப்படியே ஜோவுடன் சேர்ந்து ஒரு பெரியபங்களாவையும் கட்டி முடித்துவிட்டதாகக் கூட சொல்கிறார்கள்.

இருவருக்கும் எப்போ கல்யாணம் என்ற கேள்வி ரொம்ப காலமாக கேட்கப்பட்டு வருகிறது. இதுவரை தனது தங்கையின்திருமணத்துக்குப் பிறகே தனது திருமணம் என்று கூறி வந்தார் சூர்யா.


சமீபத்தில் அவரது தங்கையின் திருமணம் படுஜோராக நடந்து முடிந்துவிட்டது.

இந் நிலையில் இப்போது ஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக சூர்யாவுடனான காதல் குறித்தும், கல்யாணம் குறித்தும் வாய்திறந்துள்ளார். தெலுங்குப் பத்திரிக்கையான ஈநாடு இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

எனக்கும், சூர்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். ஆனால் உடனடியாக நிடக்க வாய்ப்பில்லை. எனக்கும், அவருக்கும்சில படங்கள் உள்ளன. இருவரும் பிசியாகவே உள்ளோம்.

எல்லோருக்கும் அறிவித்து விட்டுத்தான் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். யாருக்கும் தெரியாமல் எங்களது கல்யாணம்நடக்காது.


சூர்யாவுடன் இப்போது ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிக்கிறேன். அவருடைய (சூர்யா) சொந்த தயாரிப்பில் இந்த படம் தயார்ஆகிறது. தெலுங்கிலும் அது வெளியாகும் என்று கூறியுள்ளார் ஜோதிகா.

தன்னிடம் கேட்கப்பட்டுள்ள மற்ற கேள்விகளுக்கு ஜோதிகா தந்துள்ள பதில் விவரம்:

கே. தெலுங்கு படங்களில் நீங்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றவர்களுடன் நடித்த பிறகும் அதிக வாய்ப்பு வரவில்லையே?

ப. ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த கதைகளில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. அதனால் அதில்நடிக்கவில்லை. எனக்கு முதலில் கதை பிடிக்க வேண்டும். பெண்கள் ஆதரவை பெறும் கதையாக அது இருக்க வேண்டும். எனக்குகதைதான் முதலில் ஹீரோ, மற்றவை பிறகுதான்.

கே. சந்திரமுகி படம் தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றிருப்பது பற்றி?

ப. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திரமுகியின் வெற்றி நான் எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி பெறும்என்று எதிர்பார்க்கவில்லை.


கே. அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமே நீங்கள் தான். எப்படி உங்களை தேர்ந்தெடுத்தார்கள்?

ப. சந்திரமுகியில் நான் நடித்த முதல் காட்சி கட்டிலை ஒரே கையால் தூக்குவது. எதிர்பார்த்ததை விட அது நன்றாக வந்தது.இதனால் என் மீது டைரக்டருக்கு அதிக நம்பிக்கை வந்து விட்டது.

கே. சந்திரமுகியில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்ன?

ப. வழக்கம் போல் தான் நடித்தேன். ஏற்கனவே வந்த மலையாள, தெலுங்கு படங்களில் ஷோபனாவும், செளவுந்தர்யாவும்நடித்திருந்தார்கள். அந்த படத்தை பலமுறை பார்த்து என்னை தயார் செய்து கொண்டேன். நடனத்துக்கு தான் கொஞ்சம்கஷ்டப்பட்டு பயிற்சி செய்தேன்.

கே. படத்தின் வெற்றியில் பங்கு யாருக்கு அதிகம்?

ப. ரஜினி சாருக்கு பிறகு எனக்கும், வடிவேலுவுக்கும் முக்கிய வேடம். பெண் ரசிகளும் வெற்றிக்கு காரணம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil