சில விஷயங்களை சேர்க்க சொன்ன ஜோதிகா.. சூர்யா படத்தில் நடந்த மேஜிக்.. வெங்கி அட்லூரி பளிச்!

சென்னை: கருப்பு திரைப்படத்துக்குப் பிறகு சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்துக்காக ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்களும் காத்திருக்கின்றனர். அடுத்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது.

ஜன நாயகன் படத்தைத் தொடர்ந்து மமிதா பைஜு நடித்துள்ள படம் என்பதால் அவரது ரசிகர்களும் படத்தை ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களைய் இயக்கிய டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Jyothika s suggestions makes Viswanath and Sons More Beautiful - Venky Atluri

இந்த படத்துக்காக சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா சொன்ன சில விஷயங்கள் படத்துக்கு பெரிய பலமாக மாறியுள்ளது என்றும் வெங்கி அட்லூரி பேசியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கணவருக்காக ஜோதிகா செய்த தியாகம்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட பலருடன் நடித்த நடிகை ஜோதிகா சூர்யாவுடன் காதலில் விழுந்த நிலையில், அவரை திருமணம் செய்துக் கொண்டார். கணவருக்காகவும் தனது குழந்தைகளுக்காகவும் நடிப்பதை விட்டே விலகினார். ஆனால், அவரது தியாகத்தை மதிக்கும் விதமாக குழந்தைகள் பெரியவர்கள் ஆன உடனே மீண்டும் ஜோதிகாவை சூரய நடிக்க அனுமதித்தார். உடல் எடையை எல்லாம் ஒர்க்கவுட் செய்து குறைத்து தற்போது இந்தி படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் வேறலெவலில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜோதிகா.

ஜோதிகா சொன்ன விஷயங்கள்: கருப்பு திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ள நிலையில், அடுத்த பிளாக்பஸ்டரை ஆகஸ்ட் 14ம் தேதி சூர்யா கொடுக்கப் போவது உறுதி என தெளிவாகி விட்டது. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டிஸ்கஷனில் கலந்துக் கொண்ட நடிகை ஜோதிகா சொன்ன சில பரிந்துரைகள் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகவும் அதையெல்லாம் படத்தில் வைத்த பிறகு படமே ஒரு மேஜிக்காக மாறியது என்றும் அவர் சொன்ன பரிந்துரைகள் குறித்து படம் வெளியான பின்னர் விரிவாக சொல்வதாக இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மோதும் நயன்தாரா: சூர்யாவுடன் கஜினி, ஆதவன், மாஸ் என பல படங்களில் நடித்துள்ள நடிகை நயன்தாரா அடுத்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி கவின் உடன் நடித்துள்ள ஹாய் படத்தின் மூலம் சூர்யாவுடன் பாக்ஸ் ஆபீஸில் மோத காத்திருக்கிறார். விஜய் படமான ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆன நிலையில், எந்தவொரு படமும் வெளியாகாத நிலையில், சூர்யாவுடன் மல்லுக்கட்ட கவின் மற்றும் மகுடம் படத்துடன் விஷால் மோதப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X