»   »  ஸ்டார்ட், கேமரா, ஜோதிர்மயி!

ஸ்டார்ட், கேமரா, ஜோதிர்மயி!

Subscribe to Oneindia Tamil

வருங்காலத்தில் சூப்பர் டைரக்டராக ஆவதுதான் தனது லட்சியம் என்று இரண்டு கைகளையும் வைத்து ஆங்கிள்காட்டியபடி கூறுகிறார் ஜோதிர்மயி.

கேரளத்திலிருந்து வந்த இளம் நடிகைகளில் கொஞ்சம் முதிர்ந்த நடிகை ஜோதிர்தான். அம்மணிக்கு ஏற்கனவேகல்யாணமாகி விட்டதாம். டைவர்ஸ் செய்து விட்டதாக ஒரு தகவலும், பிரிந்து வாழ்வதாக இன்னொரு தகவலும்கூறுகிறது.

மதிர் கன்னியாக இருந்தும் கூட ஜோதிர்மயியின் அப்ரோச் படு அசத்தலாக இருப்பதால் தொடர்ந்து படங்களில்தலையைக் காட்டிக் கொண்டுதான் உள்ளார்.

இதயத் திருடன் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த ஜோதிர் அடுத்து தலைமகனில் கலக்கலாக நடித்துதயாரிப்பாளர்கள், இயக்குநர்களை ஈர்த்தார். தொடர்ந்து குஷ்புவின் சிபாரிசால் (இவருக்கு சத்யராஜ் சிபாரிசு!)பெரியார் பட வாய்ப்பு கிடைத்தது.

அப்படியும் இப்படியுமாக கோலிவுட்டை உலா வந்து கொண்டிருக்கும் ஜோதிர் இப்போது விஜயகாந்த்துடன் சபரிபடத்தில் நடித்துள்ளார். இன்னும் 2 புதுப் படங்கள் வந்துள்ளதாம்.

மூச்சு விடக் கூட நேரமில்லாமல் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஜோதிருக்கு ஒரே லட்சியம்தானாம்.அதாவது எதிர்காலத்தில் சூப்பர் இயக்குநராக மாறி விட வேண்டும். இதற்காக அவ்வப்போது கேமரா கோணம்பார்ப்பது, கதை விவாதம், கேரக்டரைசேஷன் என எல்லாத் துறைகளிலும் தனது அறிவைத் தீட்டிக் கொண்டுவருகிறாராம்.

ஆமா, கேரள நடிகைகள் எல்லாம் பின்னிப் பெடல் எடுக்கிறார்கள் கிளாமரில், நீங்க மட்டும் இன்னும் ஃபுல்மீல்ஸுக்கு மாறாமல் உள்ளீர்களே என்றால்,

குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட எனக்கு விருப்பம் இல்லை. பாடல் காட்சிகளில் லேசு பாசாக கிளாமராகநடிக்கலாம். மற்றபடி ஓவர் எக்ஸ்போஸ் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை, அப்படி வாய்ப்பு வேண்டாமேஎன்று செல்லமாக சிணுங்குகிறார் ஜோதிர்.

மலையாளப் படங்களில் இவர் அதிகம் நடித்திருப்பது கிராமத்து கேரக்டர்களில்தானாம் (அங்கு கிராமத்துகேரக்டர்களுக்கு பெரும்பாலும் முண்டுதான் டிரஸ்ஸே!). அதேபோல குடும்பப் பாங்கான ரோல்களில் நடிக்கவேபிடிக்கிறதாம்.

ஆனால் தமிழில் துட்டைத் தூக்கி கொடுத்தால் காஸ்ட்யூம் குறைக்க ஜோதிர் ஆட்சேபிப்பதில்லையாம்!

Read more about: jyothirmayis dream
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil