twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வித்தியாச ஜோதிர்மயி! தலைநகரத்தில் தளதளத்த ஜோதிர்மயி இப்போது பெரியார் படத்தில் நாகம்மையாக பாந்தமாக நடித்துக்கொண்டிருக்கிறார். கேரளாவிலிருந்து முத்து முத்தாக இளசுகள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் முத்தல் முகத்துடன்வந்து இறங்கியவர் ஜோதிர்மயி. இருந்தாலும் தலைநகரத்தில் அவர் கலக்கவே தமிழ் சினிமா ரசிகர்கள்ஜோதிரையும் வரவேற்று ஆதரவு கொடுத்தனர்.இந்த கலக்கலால் புதிய படங்கள் சில கிடைத்ததால் உற்சாகமாகிவிட்ட ஜோதிர்மயிக்கு வந்தது பெரியார் படவாய்ப்பு.மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் படுபிசியாக இருக்கும் ஜோதிர்மயி நாகம்மை வேடத்தைஅனுபவித்து நடித்து வருவதாக புல்லரிப்புடன் கூறுகிறார்.நான் தலைநகரத்தில் நடித்த போது எனக்கு தமிழ் பேசவே வராது. மலையாளத்தில் தான் வசனங்களை எழுதிவைத்துப் பேசினேன். வடிவேலு சாருடன் நடித்த போது என்னால் சிரிப்பை அடக்கவே முடியாது. ஏகப்பட்டடேக்கள் எடுக்க வேண்டி வந்தது. அதேபோல நான் பேசிய தமிழைக் கேட்டு வடிவேலு சிரிப்பார். ஆனால்கிண்டலடிக்காமல் எப்படி பேச வேண்டும் என சொல்லிக் கொடுப்பார்.பெரியார் படம் பீரியர் படம் என்பதால், அதில் நடிக்க ஒப்பந்தமாகும் போதே அந்த காலத்து தமிழ் பேசவேண்டும் என்று சொல்லி விட்டார்கள். இதனால் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுக் கொண்டு சரியாக பேசி நடித்துவருகிறேன்.நாகம்மை காலத்தில் பெண்கள் எப்படி சேலை கட்டுவாரர்கள், எப்படிப் பேசுவார்கள் என்பதையெல்லாம்இயக்குனர் ஞானராஜ சேகரன் சொல்லி காட்டுகிறார். அதை அப்படியே உள் வாஙக்கி நடிக்கிறேன்.நாகம்மையாரை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. சாதாரண கிராமத்துப் பெண்மணியான அவர்போராட்ட உணர்வுள்ளவராக மாறியதை நினைக்கும்போது பெருமையாக இருந்தது என்கிறார் ஜோதிர்மயி.இப்போது மலையாளத்தில் 4 படங்களில் நடித்து வரும் ஜோதிரிமயிக்கு தமிழிலும் இரண்டு படங்கள்கிடைத்துள்ளனவாம். அதில் ஒன்று விஜயகாந்த்துடன் சபரி படமும் ஒன்று.பெரியாரில் அடக்க ஒடுக்கமாய் அந்த கேரக்டராகவே வாழும் ஜோதிர்மயிக்கு சபரியிலும் வெயிட்டான ரோல்தானாம்.ஆனாலும் கிளாமர் தேவையாக இருந்தால் நடிக்கலாம், தப்பில்லை என்று பட்டென்று உடைத்துப் பேசுகிறார்ஜோதிர்மயி.

    By Staff
    |

    தலைநகரத்தில் தளதளத்த ஜோதிர்மயி இப்போது பெரியார் படத்தில் நாகம்மையாக பாந்தமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

    கேரளாவிலிருந்து முத்து முத்தாக இளசுகள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் முத்தல் முகத்துடன்வந்து இறங்கியவர் ஜோதிர்மயி. இருந்தாலும் தலைநகரத்தில் அவர் கலக்கவே தமிழ் சினிமா ரசிகர்கள்ஜோதிரையும் வரவேற்று ஆதரவு கொடுத்தனர்.

    இந்த கலக்கலால் புதிய படங்கள் சில கிடைத்ததால் உற்சாகமாகிவிட்ட ஜோதிர்மயிக்கு வந்தது பெரியார் படவாய்ப்பு.

    மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் படுபிசியாக இருக்கும் ஜோதிர்மயி நாகம்மை வேடத்தைஅனுபவித்து நடித்து வருவதாக புல்லரிப்புடன் கூறுகிறார்.

    நான் தலைநகரத்தில் நடித்த போது எனக்கு தமிழ் பேசவே வராது. மலையாளத்தில் தான் வசனங்களை எழுதிவைத்துப் பேசினேன். வடிவேலு சாருடன் நடித்த போது என்னால் சிரிப்பை அடக்கவே முடியாது. ஏகப்பட்டடேக்கள் எடுக்க வேண்டி வந்தது. அதேபோல நான் பேசிய தமிழைக் கேட்டு வடிவேலு சிரிப்பார். ஆனால்கிண்டலடிக்காமல் எப்படி பேச வேண்டும் என சொல்லிக் கொடுப்பார்.

    பெரியார் படம் பீரியர் படம் என்பதால், அதில் நடிக்க ஒப்பந்தமாகும் போதே அந்த காலத்து தமிழ் பேசவேண்டும் என்று சொல்லி விட்டார்கள். இதனால் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுக் கொண்டு சரியாக பேசி நடித்துவருகிறேன்.

    நாகம்மை காலத்தில் பெண்கள் எப்படி சேலை கட்டுவாரர்கள், எப்படிப் பேசுவார்கள் என்பதையெல்லாம்இயக்குனர் ஞானராஜ சேகரன் சொல்லி காட்டுகிறார். அதை அப்படியே உள் வாஙக்கி நடிக்கிறேன்.

    நாகம்மையாரை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. சாதாரண கிராமத்துப் பெண்மணியான அவர்போராட்ட உணர்வுள்ளவராக மாறியதை நினைக்கும்போது பெருமையாக இருந்தது என்கிறார் ஜோதிர்மயி.

    இப்போது மலையாளத்தில் 4 படங்களில் நடித்து வரும் ஜோதிரிமயிக்கு தமிழிலும் இரண்டு படங்கள்கிடைத்துள்ளனவாம். அதில் ஒன்று விஜயகாந்த்துடன் சபரி படமும் ஒன்று.

    பெரியாரில் அடக்க ஒடுக்கமாய் அந்த கேரக்டராகவே வாழும் ஜோதிர்மயிக்கு சபரியிலும் வெயிட்டான ரோல்தானாம்.

    ஆனாலும் கிளாமர் தேவையாக இருந்தால் நடிக்கலாம், தப்பில்லை என்று பட்டென்று உடைத்துப் பேசுகிறார்ஜோதிர்மயி.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X