twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொய்யாங்கோ, கொய்யாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ, கியா மியா, சலேமியா ஹூயாமியா யாஹா என பல நல்ல தமிழ் வார்த்தைகளை தமிழ் கூறும்நல்லுலகுக்கு அறிமுகப்படுத்திய திரையுலக கவிஞர்கள் வரிசையில் இப்போது கவிப்பேரரசு வைரத்துவும் இணைகிறார்.சரண் இயக்கத்தில் காம்னா, ரவி நடிப்பில் உருவாகும் இதயத் திருடன் படத்தில்தான் இந்த கொய்யாங்கோ கொய்யாங்கோ என்றுஆரம்பிக்கும் பாடல் வருகிறது. இப்பாடலுக்கு அட்டகாசமான குத்தாட்டம் ஆடியிருப்பவர் கேரளத்து கொய்யாக்காஜோதிர்மயி.அதென்னாங்க கொய்யங்கோ என்று ஜோதிர்மயியைப் பிடித்துக் கேட்டால் புளகாங்கிதமடைந்து பேசினார். உண்மையில் இதுரொம்ப நல்ல பாடல். கொய்யாங்கோ என்ற வார்த்தையை ரிதமாகப் போட்டுள்ளார்கள். அதற்கு என்ன அர்த்தம் (அப்படி ஒன்றுஇருக்கா?) என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் பாடலை முழுமையாகப் பார்த்தால் பல நல்ல அறிவுரைகள் நிரம்பி வழிவதை அறியலாம் என்றார்.பாடல் ஆரம்பிப்பது கொய்யாங்கோ என்று இருந்தாலும் ஜோதிர்மயி சொல்வதைப் போல இன்றைய இளையதலைமுறையினருக்குத் தேவையான அட்வைஸ்களை கவிஞர் வைரமுத்து இதில் செப்பியிருக்கிறாராம்.இளசுகளைத் திருத்த வேண்டுமானால், அறிவுரை கூற வேண்டுமானால் அவர்கள் வழியில் போய்த்தான் அதை செய்ய முடியும்.நேரடியாக சொன்னால் கேட்க மாட்டார்கள். இதை உணர்ந்துதான் குத்துப்பாட்டு வடிவில் இளைஞர்களுக்குத் தேவையானஅறிவுரைகளைக் கூறியுள்ளார் வைரமுத்து என்கிறார்கள். (வைரமுத்துவை விட்டுத் தர மாட்டீங்களே)அது சரி, ஹீரோயினா வந்து இப்படி திடீர்னு குத்தில் குதித்து விட்டீர்களே என்று ஜோதிர்மயியிடம் ஆதங்கப்பட்டால், ஸ்டாப்,ஸ்டாப்.. என்னை ஏன் இந்தப் பாட்டுக்கு இயக்குனர் சரண் தேர்வு செய்தார் என்பது எனக்கே இன்னும் புரியாத புதிர்தான். இந்தப் பாட்டைக் கூறி, நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார். எனக்குக் கூட ஆச்சரியமாகத்தான் இருந்தது.இருந்தாலும் சரண் நல்ல இயக்குனர் என்பதால் அவர் சொல்வதில் அர்த்தம் இருக்கும் என நம்பி ஓ.கே. சொல்லி விட்டேன்.உண்மையிலேயே இந்தப் பாட்டு அற்புதமாக வந்திருக்கிறது என்றவர்,எனது டான்ஸும், சும்மா சொல்லக் கூடாது, எனக்கே ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது என்று தன்னைத் தானே தேத்தி விட்டுக்கொள்கிறார் ஜோதிர்மயி.சரி, ஹீரோயினாக நடித்து வருகிறீர்கள், அப்புறம் குத்துப்பாட்டில் இறங்கினால் இமேஜ்? அதாவது நான் ஹீரோயினாக நடிக்கவருவதற்கு முன்பு ஒத்துக் கொண்ட பாடல் இது. எனவே இமேஜ் பத்தி நான் கவலைப்படவில்லை.இப்போது சுந்தர்.சி.யுடன் நடித்து வரும் தலைநகரம் படம் எனக்கு நல்ல ஹீரோயின், நல்ல நடிகை என்ற இமேஜை ஏற்படுத்திக்கொடுக்கும். மலையாளப் படங்களில் ரொம்ப சீரியஸான கேரக்டர்களிலேயே நிடித்த பொண்ணு நீங்க, இப்போது காமெடி, குத்து என கலக்கஆரம்பித்து விட்டீர்களே?உண்மை என்ன தெரியுமா, நான் ரொம்ப ஜாலியான பொண்ணு. ஆனால் எனது இயற்கைக்கு மாறான வாய்ப்புகளேமலையாளத்தில் அமைந்தது. ஆனாலும் மீசை மாதவன் படத்தில் வந்த சிங்கமாசம் என்ற பாட்டு (ரொம்ப குஜாலா இருக்கும்சாரே!) எனக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இப்போ, கொய்யாங்கோ பாட்டும் என்னை தூக்கி நிறுத்தும்.நல்லா தமிழ் பேசுறேளே, எப்டி?ஞான் பாலக்காடாக்கும் சாரே, தமிழ்நாடு பார்டராச்சே, பேசாமல் இருக்க முடியுமோ? ஞான் மட்டுமல்ல, எண்ட வீட்டிலும்எல்லாப் பேரும் நன்னாயிட்டு தமிழ் பேசுவா என்று பாலக்காட்டு மாதவன்.. ஸாரி, மாதவி மாதிரி சொல்லிவிட்டுப் போனார்ஜோதிர்மயி.அவர் போன பின்பும் பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டே தான் இருந்தது.. அவ்வளவு பேசுகிறார்...

    By Staff
    |

    கொக்கரக்கோ கும்மாங்கோ, கியா மியா, சலேமியா ஹூயாமியா யாஹா என பல நல்ல தமிழ் வார்த்தைகளை தமிழ் கூறும்நல்லுலகுக்கு அறிமுகப்படுத்திய திரையுலக கவிஞர்கள் வரிசையில் இப்போது கவிப்பேரரசு வைரத்துவும் இணைகிறார்.

    சரண் இயக்கத்தில் காம்னா, ரவி நடிப்பில் உருவாகும் இதயத் திருடன் படத்தில்தான் இந்த கொய்யாங்கோ கொய்யாங்கோ என்றுஆரம்பிக்கும் பாடல் வருகிறது. இப்பாடலுக்கு அட்டகாசமான குத்தாட்டம் ஆடியிருப்பவர் கேரளத்து கொய்யாக்காஜோதிர்மயி.

    அதென்னாங்க கொய்யங்கோ என்று ஜோதிர்மயியைப் பிடித்துக் கேட்டால் புளகாங்கிதமடைந்து பேசினார். உண்மையில் இதுரொம்ப நல்ல பாடல். கொய்யாங்கோ என்ற வார்த்தையை ரிதமாகப் போட்டுள்ளார்கள். அதற்கு என்ன அர்த்தம் (அப்படி ஒன்றுஇருக்கா?) என்று எனக்கும் தெரியவில்லை.


    ஆனால் பாடலை முழுமையாகப் பார்த்தால் பல நல்ல அறிவுரைகள் நிரம்பி வழிவதை அறியலாம் என்றார்.

    பாடல் ஆரம்பிப்பது கொய்யாங்கோ என்று இருந்தாலும் ஜோதிர்மயி சொல்வதைப் போல இன்றைய இளையதலைமுறையினருக்குத் தேவையான அட்வைஸ்களை கவிஞர் வைரமுத்து இதில் செப்பியிருக்கிறாராம்.

    இளசுகளைத் திருத்த வேண்டுமானால், அறிவுரை கூற வேண்டுமானால் அவர்கள் வழியில் போய்த்தான் அதை செய்ய முடியும்.நேரடியாக சொன்னால் கேட்க மாட்டார்கள். இதை உணர்ந்துதான் குத்துப்பாட்டு வடிவில் இளைஞர்களுக்குத் தேவையானஅறிவுரைகளைக் கூறியுள்ளார் வைரமுத்து என்கிறார்கள். (வைரமுத்துவை விட்டுத் தர மாட்டீங்களே)

    அது சரி, ஹீரோயினா வந்து இப்படி திடீர்னு குத்தில் குதித்து விட்டீர்களே என்று ஜோதிர்மயியிடம் ஆதங்கப்பட்டால், ஸ்டாப்,ஸ்டாப்.. என்னை ஏன் இந்தப் பாட்டுக்கு இயக்குனர் சரண் தேர்வு செய்தார் என்பது எனக்கே இன்னும் புரியாத புதிர்தான்.


    இந்தப் பாட்டைக் கூறி, நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார். எனக்குக் கூட ஆச்சரியமாகத்தான் இருந்தது.இருந்தாலும் சரண் நல்ல இயக்குனர் என்பதால் அவர் சொல்வதில் அர்த்தம் இருக்கும் என நம்பி ஓ.கே. சொல்லி விட்டேன்.உண்மையிலேயே இந்தப் பாட்டு அற்புதமாக வந்திருக்கிறது என்றவர்,

    எனது டான்ஸும், சும்மா சொல்லக் கூடாது, எனக்கே ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது என்று தன்னைத் தானே தேத்தி விட்டுக்கொள்கிறார் ஜோதிர்மயி.

    சரி, ஹீரோயினாக நடித்து வருகிறீர்கள், அப்புறம் குத்துப்பாட்டில் இறங்கினால் இமேஜ்? அதாவது நான் ஹீரோயினாக நடிக்கவருவதற்கு முன்பு ஒத்துக் கொண்ட பாடல் இது. எனவே இமேஜ் பத்தி நான் கவலைப்படவில்லை.

    இப்போது சுந்தர்.சி.யுடன் நடித்து வரும் தலைநகரம் படம் எனக்கு நல்ல ஹீரோயின், நல்ல நடிகை என்ற இமேஜை ஏற்படுத்திக்கொடுக்கும்.


    மலையாளப் படங்களில் ரொம்ப சீரியஸான கேரக்டர்களிலேயே நிடித்த பொண்ணு நீங்க, இப்போது காமெடி, குத்து என கலக்கஆரம்பித்து விட்டீர்களே?

    உண்மை என்ன தெரியுமா, நான் ரொம்ப ஜாலியான பொண்ணு. ஆனால் எனது இயற்கைக்கு மாறான வாய்ப்புகளேமலையாளத்தில் அமைந்தது. ஆனாலும் மீசை மாதவன் படத்தில் வந்த சிங்கமாசம் என்ற பாட்டு (ரொம்ப குஜாலா இருக்கும்சாரே!) எனக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இப்போ, கொய்யாங்கோ பாட்டும் என்னை தூக்கி நிறுத்தும்.

    நல்லா தமிழ் பேசுறேளே, எப்டி?

    ஞான் பாலக்காடாக்கும் சாரே, தமிழ்நாடு பார்டராச்சே, பேசாமல் இருக்க முடியுமோ? ஞான் மட்டுமல்ல, எண்ட வீட்டிலும்எல்லாப் பேரும் நன்னாயிட்டு தமிழ் பேசுவா என்று பாலக்காட்டு மாதவன்.. ஸாரி, மாதவி மாதிரி சொல்லிவிட்டுப் போனார்ஜோதிர்மயி.

    அவர் போன பின்பும் பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டே தான் இருந்தது.. அவ்வளவு பேசுகிறார்...

      Read more about: vairamuthus goiyango
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X