»   »  அதிமுக வாரிசு போட்டி... ரூபாய் நோட்டு ஒழிப்பு... அரசியல் பிரவேசம்! - பாக்யராஜ் பரபரப்பு பேட்டி

அதிமுக வாரிசு போட்டி... ரூபாய் நோட்டு ஒழிப்பு... அரசியல் பிரவேசம்! - பாக்யராஜ் பரபரப்பு பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

எம்ஜிஆர் பயன்படுத்திய பேனா முதல் பிரசார வேன் வரை எதையாவது பயன்படுத்தி அவரது வாரிசு என்ற அடையாளத்தைப் பெறத் துடிக்கிறார்கள் இன்றைக்கு. ஆனால் எம்ஜிஆரே தன் வாயால் தனது வாரிசு என்று சொன்னது 'புரட்சித் திலகம்' என அழைக்கப்பட்ட பாக்யராஜை மட்டும் தான்...

எம்ஜிஆருக்கு அமெரிக்காவில் சிகிச்சை நடந்துகொண்டிருந்த போது அவரது உடல்நிலை பற்றி 1984 தேர்தலின் போது பொய் பிரசாரம் செய்து வந்தனர். எம்ஜிஆர் உடல் ஐஸ் பெட்டியில் உள்ளதாக போஸ்டர்கள் அடித்து ஒட்டி வந்தனர் எதிர்க் கட்சியினர்.

K Bagyaraj's exclusive interview to Oneindia - Part 2

அப்போது தானே சொந்த செலவில் நேரடியாக அமெரிக்கா சென்று எம்ஜிஆரை சந்தித்து வந்து, அரசியல் சதியை உடைத்தவர் பாக்யராஜ். அப்போதுதான் 1984 சட்ட மன்றத் தேர்தலில் பாக்யராஜை பிரச்சாரம் செய்யப் பணித்தார் எம்ஜிஆர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த அத்தனை நாட்களும் எம்ஜிஆருக்கு ஒரு பாக்யராஜ் கிடைத்தாற்போல் அம்மாவுக்கு ஒருவர் இல்லையே என்றுதான் ஏங்கினார்கள் அதிமுக தொண்டர்கள்.

ஆட்டத்தில் இல்லையென்றாலும் கூட அன்றாட அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கிக்கொண்டு தான் இருக்கிறார் எம்ஜிஆரின் கலை வாரிசு... இன்றைய அரசியல் நிலை பற்றி அவர் விரிவாக ஒன் இந்தியாவிடம் பேசினார்.

மேலும் ஒன்இந்தியாவில் தொடர்ந்து அவரது எழுத்துகள் இடம்பெறுவதையும் உறுதி செய்துள்ளார்.

நேற்று வெளியான பேட்டியின் இரண்டாம் பாகம்...


சந்திப்பு: எஸ் ஷங்கர் & க ராஜீவ் காந்தி

English summary
The second part of K Bagyaraj's exclusive interview to Oneindia.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil