K. ராஜன் வீட்டில் இது இரண்டாவது தற்கொ*லை.. அவரது கடைசி நிமிடங்கள்.. சோகத்தை பகிர்ந்த பிரபலம்

சென்னை: மொத்த தமிழ் திரையுலமுமே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சம்பவம் மூத்த தயாரிப்பாளர் கே. ராஜனின் தற்கொ*லை தான். சென்னை அடையாற்றில் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டவரால் மொத்த திரையுலகமும், அவரது குடுமப்த்தினர், நண்பர்கள் என பலரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர். இப்படி இருக்கையில், கே. ராஜனின் இந்த முடிவு குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் அளித்த பேட்டியில், " கே. ராஜன் தனது காரில் வந்து கொண்டு இருந்துள்ளார். அடையாறுக்கு அருகில் கார் சென்றதும், காரை ஓட்டுநரிடம் சொல்லி நிறுத்தச் சொல்லி உள்ளார். மேலும் ஒரு வாக்கிங் சென்று வருவதாக கூறி உள்ளார். சுமார், அரைமணி நேரம் வரை நடந்தவர், மீண்டும் காரிடம் வந்து, கார் கதவைத் திறந்துள்ளார். அதற்குள் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, காருக்குள் ஏறாமல், மீண்டும் அடையாற்றின் பாலத்திடம் சென்று, பாலத்தின் மீது ஏறி ஆற்றுக்குள் குதித்துள்ளார்.

K Rajan Family Tragedy Shocks Kollywood Producer Balaji Prabhu Shares Emotional Details

கடைசி நொடி: இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ஓட்டுநர் ஒரு நொடி சுதாரிப்பதற்குள் கே. ராஜன் ஆற்றில் குதித்து விட்டார். அதன் பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கூறி அவரது உடலை மீட்டுள்ளனர். கே.ராஜனுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். தனது மகன்களில் ஒருவர் பத்திரிகை நடத்துகிறார். பிரபு என்ற மகன்தான் எல்.கே.ஜி என்ற படத்தை இயக்கினார். படம் பெறும் வெற்றி பெற்ற பின்னர்தான் அப்பாவும் மகனும் பேசிக் கொண்டார்கள்.

K Rajan Family Tragedy Shocks Kollywood Producer Balaji Prabhu Shares Emotional Details

குடும்பத்தில்: இவரது மகள் விஜி மீது இவருக்கு அளவுகடந்த பாசம். அவரது மகளின் கணவரும் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் தற்கொ*லை செய்து கொண்டார். இப்படி இருக்கையில் இவரும் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் தான் அறை எடுத்து சில ஆண்டுகளாக தங்கி வந்தார். கடந்த வாரத்தில் தான் பிரபல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. மிகவும் தைரியமானவர் இப்படி தனது உயிரை மாய்த்துக் கொண்டது பலருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

தற்கொலை தீர்வல்ல: வாழ்க்கையின் தற்காலிகப் பிரச்சினைகளுக்கு தற்கொலை ஒருபோதும் தீர்வல்ல. அது நம்மை நேசிப்பவர்களுக்கு ஆறாத வடுக்களையே தரும். மனபாரம் அதிகமாகும்போது, தகுந்த நபர்களிடம் பேசிப் பகிர்வதே புத்திசாலித்தனம். துணிவோடு எதிர்கொண்டால் எந்த சவாலையும் வெல்லலாம். நம் உயிர் விலமதிப்பற்றது, வாழ்ந்து காட்டுவோம்!

இலவச மனநல உதவி எண்கள்:

சினேகா (Sneha Helpline): 044-24640050

மத்திய அரசு உதவி எண் (KIRAN): 1800-599-0019

மாநில அரசு உதவி எண்: 104

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X