எங்க மாமா பாடி வரவும் லேட் ஆச்சு.. க/பெ. ரணசிங்கம், மாஸ்டர், வர்மா நடிகர் மேத்யூ வர்கீஸ் பேட்டி!
சென்னை: க/பெ. ரணசிங்கம் படத்தில் இந்திய தூதராக நடித்துள்ள மேத்யூ வர்கீஸின் பேட்டி இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ளன.
Recommended Video
அச்சம் என்பது மடமையடா, 2.0, மாஸ்டர், க/பெ. ரண்சிங்கம், வர்மா உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார்.
அப்படியே ஒரு கார்ப்ரேட் முதலாளி போல இருக்கும் மேத்யூ வர்கீஸின் பேட்டி நமது தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி உள்ளது.

எங்க மாமா பாடி வரவும் லேட் ஆச்சு
சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியான க/பெ. ரணசிங்கம் படம் தான் டாக் ஆஃப் தி டவுனாக பேசப்பட்டு வருகிறது. அந்த படத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய தூதராக நடிகர் மேத்யூ வர்கீஸ் நடித்து அசத்தி இருப்பார். இயக்குநர் பெ. விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ. ரணசிங்கம் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம் என்று கூறிய அவர், எங்க மாமா பாடி வரவும் ரொம்ப லேட் ஆச்சு, இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்குது என்றார்.
மாஸ்டர் படத்தில்
2.0 படத்தில் டாக்டராக நடித்த மேத்யூ வர்கீஸ், தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ள ரகசியத்தை வெளிப்படுத்தி உள்ளார். சீக்கிரமே அந்த படத்தின் ரிலீசுக்காகவும் காத்திருப்பதாக தெரிவித்த அவர், தனது மருத்துவ பிசினஸ் குறித்தும் முதல் பார்ட் பேட்டியில் பேசியுள்ளார்.
பாலாவிடம் திட்டு வாங்கினேன்
ஒரே வாரத்தில் க/பெ. ரணசிங்கம், வர்மா என நீங்க நடிச்ச ரெண்டு படமும் ரிலீசாகி உள்ளது. பாலா உடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்கள் என்றதுமே.. எல்லாரும் பாலா சார்ன்னு சொன்னாலே தனி பயம் வரும், அவர் படத்துல நடிக்க கொடுத்து வச்சிருக்கனுங்க, ஒரு ஷாட்ல நானும் அவர்கிட்ட திட்டு வாங்கிட்டேன் என ஹேப்பியா சொல்றாரு மனுஷன்.

ரஜினியை சந்தித்த அனுபவம்
மேலும், 2.0 படத்தின் போது ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றாலும், என்னுடைய ஷூட்டிங்கிற்காக 6வது மாடிக்கு லிப்டில் போகும் போது, 6வது மாடியில், இயக்குநர் ஷங்கரும், ரஜினி சாரும், லிப்டில் ஏறுனாங்க, அந்த ஒரு நிமிஷம் அவரை பார்த்ததை இப்பவும் தன்னால் மறக்க முடியவில்லை என்றார். மேத்யூ வர்கீஸின் இரு பேட்டிகளையும் கண்டு ரசிக்க வீடியோவை க்ளிக் செய்யுங்க


Click it and Unblock the Notifications











