கிளைமேக்ஸில் நிச்சயம் கண் கலங்கிடுவீங்க.. க/பெ. ரணசிங்கம் ஒளிப்பதிவாளர் உருக்கமான பேட்டி!
சென்னை: இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ள படம் க/பெ. ரணசிங்கம்.
Recommended Video
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2 தமிழ் படங்கள் ஒடிடி தளங்களில் வெளியானது.
அதில், அனுஷ்காவின் சைலன்ஸ் படத்தை ஓவர் டேக் செய்து விட்டு க/பெ. ரணசிங்கம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை அள்ளி உள்ளது.

ஒளிப்பதிவாளர் பேட்டி
இந்நிலையில், க/பெ. ரணசிங்கம் படத்தின் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதி விஜய்யின் தமிழன், சுறா, காவலன் மற்றும் இயற்கை, புறம்போக்கு எனும் பொதுவுடைமை, கந்தசாமி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி பிரபல ஒளிப்பதிவாளர் இவர்.

சோகம் நிறைந்திருக்கும்
வறண்ட ராமநாதபுரம் தான் கதைக்களம். அங்கே உள்ள சூழலையும் கதையின் அழுத்தத்தையும் கூற பிரவுன் டோனில் சோகம் நிறைந்த வறட்சியான ஒரு ஒளிப்பதிவு யுக்தியைத் தான் இந்த படம் நெடுகிலும் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் கையாண்டுள்ளார். தேவையில்லாத சினிமாத் தனங்களை இந்த படத்தில் காட்சிப்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார்.

விஜய்சேதுபதி ஹீரோ இல்லை
மேலும், க/பெ. ரணசிங்கம் படத்தில் விஜய்சேதுபதி ஹீரோ இல்லை, ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினும் இல்லை. அனைவருமே அந்த கதையின் மாந்தர்களாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் இருவரையும் தாண்டி ஏகப்பட்ட கதபாத்திரங்களுக்கு அதிகளவிலான காட்சிகள் உள்ளன. படத்தை பார்த்தால் தெரியும் என்றார்.

ஆர்யா தான் பகத்சிங்
இதற்கு முன் விஜய்சேதுபதி, ஆர்யா, ஷாம் நடிப்பில் வெளியான புறம்போக்கு எனும் பொதுவுடைமை படத்தில் பணியாற்றும் போது, கிளைமேக்ஸ் காட்சிகளில் வொர்க் பண்ணிவிட்டு, 4 நாட்கள் அந்த நினைவில் இருந்து அகல முடியாமல் தவித்தேன். இப்படித் தானே பகத் சிங்கையும் தூக்கில் போட்டு இருப்பார்கள் என நினைத்து அழுதேன் என்றார்.

கண்ணீர் வரவழைக்கும்
அதே போல க/பெ. ரணசிங்கம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை எடுத்து முடித்த பின்னரும், மனம் ரணமாகி விட்டது. நிச்சயம் அந்த கிளைமேக்ஸ் காட்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு கண்ணீர் வரும் என்றும் இந்த பேட்டியில் உணர்ச்சிவசப்பட்டு பேசி உள்ளார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். ஒடிடியில் மக்கள் இந்த படத்தை பணம் கட்டி பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











