யானைகளையும் காடுகளையும் காப்போம்.. காடன் படம் குறித்து பிரபு சாலமன், ராணா பிரத்யேக பேட்டி!
Recommended Video
சென்னை: பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் காடன்.
தமிழில் 'காடன்' என்ற தலைப்பிலும், இந்தியில் 'ஹாத்தி மேர சாத்தி' என்ற டைட்டிலிலும், தெலுங்கில் 'ஆரண்யா' என்றும் மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி உள்ளது.

காடன் படத்தின் இயக்குநர் பிரபு சாலமன், நாயகன் ராணா டகுபதி நமது பிலிமி பீட் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளனர்.
உலகளவில் தந்தங்களை திருடுவதற்காக யானைகள் கொல்லப்பட்டு வருகின்றன. யானைகள் அழிந்தால், காடுகள் அழியும், காடுகள் அழிந்தால், உலகமே அழியும் என்ற பருவ நிலை மாற்றம் குறித்த மிக ஆழமான கருவை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் முயற்சியில், இயக்குநர் பிரபு சாலமன் இயங்கி வருவது குறித்து பகிர்ந்துள்ளார்.

பிரபு சாலமனை தொடர்ந்து பேசிய, பாகுபலி படத்தின் வில்லன் பல்வாள்தேவன் ராணா டகுபதி, தன்னுடைய கதாபாத்திரம் மிகவும் முரட்டுத் தனமாக இருக்கும் என்றும், நடிகர் விஷ்ணு விஷாலின் கதையில் காதல் காட்சிகள், காமெடிகள் கலந்து இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், பாகுபலி படத்திற்கு கூட தான் காடுகளில் ஷூட்டிங் செய்யவில்லை, இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 200 நாட்கள் காடுகளில் ஷூட்டிங் செய்துள்ளோம். இந்த படம் தனக்கு நல்ல படிப்பினையாக இருந்தது.

யானை உன்னியின் எனர்ஜி வேற லெவல், தாய்லாந்திலும் சில காட்சிகளை படம் பிடித்தோம், அங்குள்ள யானைகளை விட, யானை உன்னி மிகவும் சிறப்பாக ஒரு கோ ஸ்டார் போல பணியாற்றியது என காடன் படத்தில் யானையுடன் நடித்த அனுபவங்களையும் ராணா பகிர்ந்து கொண்டார்.
மேலும், காடன் படம் குறித்த பல சுவாரஸ்ய தகவலை காடன் படக்குழுவினரின் வழியாக அறிய, வீடியோவை க்ளிக் செய்து கண்டு மகிழுங்கள்!


Click it and Unblock the Notifications











