ராணாவுக்கும் உங்களுக்கும் கெமிஸ்ட்ரி எப்படி.. காடன் படத்தின் நாயகி ஸ்ரியா பேட்டி!
சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ளது காடன் திரைப்படம்.
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி உள்ள காடன் திரைப்படத்தில் லீடு ரோலில் நடிகர் ராணா டகுபதி நடித்துள்ளார். மேலும், விஷ்ணு விஷால், நடிகை ஸ்ரியா மற்றும் ஸோயா உசைன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் பத்திரிகையாளராக நடித்துள்ள ஸ்ரியா அளித்த பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

மிர்சாபூர்
அமேசான் பிரைமில் வெளியாகி ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ள மிர்சாபூர் வெப்சீரிஸில் நடித்துள்ளார் ஸ்ரியா பில்கோன்கர். மும்பையை சேர்ந்த இவருக்கு 31 வயதாகிறது. ஹவுஸ் அரெஸ்ட், ஏக் குல்தி ஏக், பாங்ரா பா லே என ஏகப்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

ஷாருக்கான் படத்தில்
ஷாருக்கான் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான ஃபேன் படத்தில் நேகா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், காடன் படத்தில் அருந்ததி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஏகப்பட்ட வெப்சீரிஸ்களிலும், இந்தி டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார் ஸ்ரியா.

காடன் படத்தில் எப்படி
இயக்குநர் பிரபு சாலமன் சில வீடியோக்களை என்னிடம் காட்டினார். அதை பார்த்த உடனே இயற்கை மீதும் யானைகள் மீதும் அவருக்கு இருக்கும் ஆர்வம் எனக்கு புரிந்தது. உடனே இந்த படத்தில் நடிக்க சம்மதித்து விட்டேன் என இந்த பேட்டியில் பேசியுள்ளார்.
ராணாவுக்கும் உங்களுக்கும்
ராணாவுக்கும் உங்களுக்கும் ஏதாவது கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆச்சா என்கிற கேள்விக்கு, யானைக்கும் ராணாவுக்கும் தாங்க கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆச்சு என சிரித்துக் கொண்டே பேசும் ஸ்ரியா, இது வழக்கமான ஹீரோ, ஹீரோயின் திரைப்படம் அல்ல, கதை மிகவும் வலுவாக உள்ளது. அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்த காட்டையும் காடனையும் கண்டு ரசியுங்கள் என்று கூறியுள்ள பேட்டியை காணத் தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











