காடன் திரைப்படம் ஒரு நிஜக் கதை.. யானைகளுக்காக போராடிய ரியல் ஹீரோவின் வாழ்க்கை.. பிரபுசாலமன் பேட்டி!

சென்னை: இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால், ஷ்ரியா பில்கோன்கர், ஜோயா ஹுசைன் மற்றும் 18 யானைகள் இணைந்து நடித்த காடன் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.

காடன் திரைப்படத்தின் வெளியீட்டு பிசியில் இருக்கும் இயக்குநர் பிரபு சாலமன் நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.

கும்கி படத்தை தொடர்ந்து மீண்டும் யானைகளை மையமாக வைத்து ஏன் படம் எடுத்தீங்க என்கிற கேள்விக்கு, கும்கி ஒரு காதல் திரைப்படம், அதில் யானை ஒன்று இடம்பெற்றது. ஆனால், காடன் முழுக்க முழுக்க யானைகள் பற்றிய படம் தான்.

நிஜக் கதை

நிஜக் கதை

காசிரங்கா எனும் இடத்தில் காட்டிற்கு நடுவே டவுன்ஷிப் கட்டப்படுவதற்காக கார்ப்பரேட் நிறுவனத்தால் எழுப்பப்பட்ட மிகப்பெரிய சுவரால் ஏகப்பட்ட யானைகள் தவித்து வந்ததை அறிந்த ஒரு சாதாரண சமூக ஆர்வலர் 2007 முதல் 2017 வரை சுமார் 10 ஆண்டுகளாக போராடி அந்த சுவரை உடைக்க சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற நிஜக் கதை தான் காடன்.

பல இடங்களில் படப்பிடிப்பு

பல இடங்களில் படப்பிடிப்பு

அதற்காகத் தான் இத்தனை போராட்டங்கள், இத்தனை இடங்களில் படப்பிடிப்பு என நாங்களும் போராடி அந்த ஆழமான கதைக்கு உயிர் கொடுக்க முய்ற்சித்துள்ளோம் என இயக்குநர் பிரபு சாலமன் பேசியுள்ளது கூஸ் பம்ப்ஸை கொடுக்கிறது.

இமானுக்கு தேசிய விருது

இமானுக்கு தேசிய விருது

இசையமைப்பாளர் இமான் மற்றும் ரசுல் பூக்குட்டிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறித்து பேசிய அவர், கும்கி படத்திற்கே இமானுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக தற்போது கிடைத்துள்ளது என்றார்.

ராணாவுக்கு கிடைக்கும்

மேலும், காடன் படத்திற்காக ரசுல் பூக்குட்டிக்கு அடுத்த ஆண்டு தேசிய விருது கிடைக்கும் என நினைக்கிறேன் என்றார். அதே போல, இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து, 18 யானைகளுடன் கடும் உழைப்பை போட்டு நடித்த நடிகர் ராணாவுக்கும் கிடைக்கும் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்க்கலாம் எனக் கூறியுள்ள அவரது பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க.. காடன் திரைப்படத்தை தியேட்டர்களில் கண்டு ரசியுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X