’சிங்கத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது’ காலா ரிலீஸ் பற்றி ‘தங்கச்சிலை’ ஈஸ்வரிராவ் எக்ஸ்க்ளூசிவ்
காலா பட நாயகி ஈஸ்வரிராவ் ஒன்இந்தியாவிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ரஜினியுடன் காலா படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒன்இந்தியாவிற்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார் அதன் நாயகி ஈஸ்வரிராவ்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. இப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளார் ஈஸ்வரிராவ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிரடியாக இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகிறார்.

இந்நிலையில், காலா படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:
ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி...
ரஜினி சாருடன் நடித்தது அற்புதமான அனுபவம். ஒவ்வொரு நாளும் முதல் படத்தில் நடிக்கும் நடிகரைப் போலவே படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொள்வார். எப்போதும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் தான் நடந்து கொள்வார். அவரிடமிருந்து நிறைய விசயங்களை நான் கற்றுக் கொண்டேன். இப்படம் நிச்சயம் என் திரை வாழ்க்கையில் முக்கியமான ஒன்று
தங்கச்சிலை பாடல் வைரலாகும் என எதிர்பார்த்தீர்களா?
ஆரம்பத்தில் ரஜினி சாருடன் எனக்கு இப்படி ஒரு பாடல் இருப்பதே எனக்குத் தெரியாது. ரஜினி சார் என்னைப் புகழ்ந்து பாடுவது போன்ற பாடல் இருப்பதே படப்பிடிப்பு தளத்தில் தான் எனக்குத் தெரியும். ரொம்ப சர்ப்பிரைசாக இருந்தது. ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம். அதிலும், அவர் வாயால் என்னை தங்கச்சிலை எனப் பாடுவது என்றால் என் மகிழ்ச்சியை கேட்கவா வேண்டும்.
கபாலி குமுதவள்ளி போல் படத்தில் உங்கள் கேரக்டர் பேசப்படுமா?
கபாலியில் குமுதவள்ளி வேறு... காலாவில் கற்பூரவல்லி வேறு.. அதுபோல் இது இருக்காது. ஆனால் நிச்சயமாக இந்த கேரக்டரும் பேசப்படும். அவ்வளவு அற்புதமான கதாப்பாத்திரம் அது.
படம் நாளை ரிலீசாகப் போகிறது, தற்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு மிகவும் டென்ஷனாக தான் இருக்கிறது. கடந்த 5 நாட்களாகவே எனக்கு டென்ஷன் தான். படத்தின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என ஒரே யோசனையாக இருக்கிறது.
காலாவுக்கு வரும் எதிர்ப்புகளை பற்றி உங்கள் கருத்து என்ன?
என்னை பொறுத்த வரை சினிமா வேறு, அரசியல் வேறு. இரண்டையும் தொடர்புப்படுத்தக் கூடாது. சினிமா என்பது ஒருவர் சார்ந்தது மட்டுமல்ல. இதில் தயாரிப்பாளர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் என நிறைய பேர் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே இதை அரசியல் ஆக்கக் கூடாது. மேலும், ரஜினி சாரை எதிர்த்தால், தங்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக தான் இப்படி செய்கிறார்கள். ஆனால் சிங்கத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது.
அடுத்தடுத்து படங்களில் நடிப்பீர்களா?
நிச்சயமாக. ஆனால் வழக்கமான கேரக்டர்களில் நடிக்க மாட்டேன். முக்கியத்துவம் உள்ள கதாகாத்திரங்களில் தான் நடிப்பேன். அதுமாதிரி ஒரு வித்தியாசமான கேரக்டர் ஒன்றிக்காக, பாலா சாரின் வர்மா படத்தில் கமிட் ஆகியுள்ளேன். தொடர்ந்து நடிப்பேன். நன்றி.


Click it and Unblock the Notifications











