»   »  அலையோடு கார்த்திகா

அலையோடு கார்த்திகா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
'சாத்துக்குடி' நாயகி... ஸாரி தூத்துக்குடி நாயகி கார்த்திகாவுக்கு ஏறுமுகம் போல. நாளைய பொழுதும் உன்னோடு படத்தின் வெற்றியால் களிப்பில் மிதந்து வரும் கார்த்திகா அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

தூத்துக்குடி படம் மூலம் சினிமாவுக்கு வந்த கார்த்திகாவுக்கு அந்தப் படம் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. படமும் பேசப்பட்டது, கார்திகாவும் பேசப்பட்டார். அவரது தெத்துப் பல் சிரிப்பும், சிம்பிள் அழகும், பக்கத்து வீட்டுப் பெண் இமேஜும் கார்த்திகாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல பிளாட்பாரத்தைப் போட்டுக் கொடுத்தது.

ஆனால் அடுத்து வந்த பிறப்பு படத்தில் கார்த்திகாவுக்கு பெயர் கிடைக்கவில்லை. காரணம், படத்தில் கிளாமராக நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தரப்பு வற்புறுத்தியதாகவும், அதற்கு கார்த்திகா மறுத்ததாகவும், இதனால் அவரது கேரக்டரை குதறி எடுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் லேட்டஸ்டாக வந்துள்ள நாளைய பொழுதும் உன்னோடு படம் கார்த்திகாவுக்கு மீண்டும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. இப்படி இடைவெளி விட்டு விட்டு நடிக்கிறீர்களே, ஏன் இப்படி என்று கார்த்திகாவிடம் கேட்டபோது, நாளைய பொழுது உன்னோடு படம் எனக்கு நல்ல பெற்றுத் தந்துள்ளது.

தூத்துக்குடி படத்திலும் பேசப்பட்டேன். எனக்கு நல்ல நடிகை என்ற பெயர் வாங்கத்தான் ஆசை, கிளாமர் காட்டி கோடிகளைச் சேர்க்க எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. இனிமேலும் கிளாமர் இல்லாமல்தான் நடிப்பேன். நல்ல கதைக்காக காத்திருப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றார்.

இப்போது புதிதாக கார்த்திகா, 'அலையோடு விளையாடு' என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதிலும் அவருக்கு அமர்க்களமான, அடக்கான அதேசமயம் அசத்தலான ரோல்தானாம். புகுந்து விளையாட புறப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தில் கார்த்திகாவோடு இணைந்து நடிப்பவர் புதுமுகம் விஜயன். இவரது சொந்த ஊர் கரூராம். சபேஷ் முரளிதான் இசையமைக்கின்றனர். அடுத்த மாதம் படப்பிடிப்பைத் தொடங்கி விறுவிறுவென முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம்.

படத்தை இயக்கப் போவது கே.ராகவன். இவர் ஷக்தி சிதம்பரம், மணிவணன்ணன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர். அவர்களது பாணியிலிருந்து விலகி இந்தப் படத்தை வித்தியாசமாக கொடுக்கவுள்ளாராம் ராகவன்.

Read more about: kaarthika

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil