Actor Kannan: 41 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கத் தயாராகும் நடிகர்.. காதல் ஓவியம் கண்ணன் அதிரடி!

சென்னை: காதல் ஓவியம் படம் மூலம் தமிழில் இன்ட்ரோ கொடுத்தவர் நடிகர் கண்ணன். பாரதிராஜா இயக்கத்தில் இந்தப் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்தப் படத்தில் கண்ணனின் நடிப்பு அதிகமான பாராட்டுக்களுக்கு உள்ளானது. ஆனாலும் படத்தின் தோல்வியை அடுத்து இந்தப் படத்தோடு சினிமாவில் இருந்து அவர் ஒதுங்கிக் கொண்டார்.

Kadhal Oviyam movie hero Kannan revealed his acting experience in that movie

அமெரிக்காவில் வசித்துவரும் கண்ணன், சமீபத்தில் சென்னை வந்துள்ள நிலையில், யூடியூப் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

41 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கத் தயாராகும் நடிகர் கண்ணன்: பாரதிராஜாவின் எவர்கிரீன் படங்களில் ஒன்றாக காதல் ஓவியம் அமைந்தது. இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியான இந்தப் படத்தில் புதுமுக நடிகர் கண்ணன் கண் தெரியாதவராக நடித்திருந்தார். கண்களை மேல்நோக்கியபடி இவர் நடித்திருந்தது உண்மையான கண் தெரியாத நபரை காட்சிப்படுத்தியது. இந்தப் படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தபோதிலும் படம் ரசிகர்களை கவரத்தவறியது.

அமெரிக்காவில் வசித்துவரும் கண்ணன் தற்போது சென்னை வந்துள்ளார். யூடியூப் ஒன்றிற்கு அவர் கொடுத்துள்ள பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. காதல் ஓவியம் படத்திற்கு முன்னதாக பெங்காலி படம் ஒன்றிற்காக தான் சென்றதாகவும் அந்தப் படத்தின் ஆடிஷனில் தான் செலக்ட் ஆகாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில்தான், காதல் ஓவியம் படத்தில் நடிக்கும் சான்ஸ் தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் அந்த காலகட்டத்தில் அழகாக இருந்தபோதிலும், கண்தெரியாதவராக அந்தப் படத்தில் நடித்ததால் பொலிவில்லாத லுக்கில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் கண்முழியை மேலே தூக்கியபடி அந்தப்படத்தில் தான் நடித்திருந்தது பார்வையாளர்களை அச்சத்திற்கு உள்ளாக்கியதாகவும் இதுவே காதல் ஓவியம் படத்தின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்ததாகவும் கண்ணன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.

41 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தன்னை வெளிப்படுத்தியுள்ள கண்ணன், வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிக்கத் தயார் என்று கூறியுள்ளார். தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். ஆனாலும் 60 வயதான நிலையிலும் ஸ்மார்ட்டாகவே காணப்படுகிறார். இந்தப் படத்தின் வாய்ப்பு தான் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது கிடைத்ததாகவும் அந்தப்பக்கமாக போன பாரதிராஜா, தன்னைப் பார்த்து இந்தப்படத்திற்கான வாய்ப்பை தனக்கு கொடுத்ததாகவும் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Kadhal Oviyam movie hero Kannan revealed his acting experience in that movie

மிகவும் எதிர்பார்ப்புடன் அதிகமான உழைப்பை கொடுத்து தான் நடித்திருந்த காதல் ஓவியம் படத்தின் தோல்வி தன்னை அதிகமாக பாதித்ததாகவும் இதனால்தான் தான் சினிமாவில் இருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாக்கியராஜ் உள்ளிட்ட இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டதாகவும் ஆனால் தனக்கு படவாய்ப்புகள் கிடைக்காததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது மீண்டும் சென்னை வந்துள்ளதாகவும் இனிமேல் இங்கேதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காதல் ஓவியம் படத்தில் நடித்தபோது ராதா முன்னணி நடிகையாக இருந்தார். முன்னணி நடிகையான அவருடன் இணைந்து நடிக்க தனக்கு தயக்கம் இருந்ததாகவும் அதனால் அவருடன் துவக்கத்தில் இடைவெளி இருந்ததாகவும் கண்ணன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். தொடர்ந்து சில நாட்கள் கழிந்தபின்பே இந்த தயக்கம் குறைந்து இயல்பாக நடிக்க முற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தில் கண்ணன் மற்றும் ராதாவின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X