எத்தனை முறை அழைத்தாலும் ஆயிரக் கணக்கான காக்கைகள் பறந்து வருகின்றன.. காக்கா கோபாலின் அதிசய வீடியோ!
சென்னை: காகங்களை நொடிப் பொழுதில் அழைக்கும் திறமை கொண்ட காக்கா கோபாலின் பேட்டி வெளியாகி உள்ளது.
இத்தனை வருடங்கள் கழிந்த பின்னரும் அவர் அழைத்தால் அடுத்த நொடியிலே ஆயிரக் கணக்கான காக்கைகள் பறந்து வருகின்றன.
போக சொன்னால் அந்த இடத்தில் இருந்து மாயமாகி விடும் அதிசய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

காக்கா கோபால்
ஜீவா நடித்த ஆசை ஆசையாய் படத்தில் நடிகர் விவேக்கின் நண்பராக காக்கா கோபால் நடித்திருப்பார். ரன் படத்திலும் காக்கா கறி தின்னா காக்கா குரல் வராமல் உன்னி கிருஷ்ணன் குரலா வரும் என காமெடி இருக்கும். ஆனால், காக்கா கோபாலை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் நம்ம ரமேஷ் கண்ணா தான். இந்நிலையில், நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு காக்கா கோபால் அளித்துள்ள அதிசய பேட்டி வெளியாகி உள்ளது.

ஆயிரம் காக்கைகள்
காக்கா கோபால் விலங்குகளிடம் மிகுந்த ஆர்வம் கொண்டவராக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். காகங்களை அவசரமாக எப்படி அழைப்பது என்றும் அடுத்த நொடியே அவைகளை எப்படி போக சொல்வது என்கிற குரல் வித்தையை நன்கு கற்று வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் அழைத்த உடன் சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரம் காகங்கள் பறந்து வரும் அதிசய வீடியோ நிச்சயம் மெய் சிலிர்க்க வைக்கிறது.

காகங்களின் கம்யூனிகேஷன்
மனிதர்கள் மட்டுமே சிறந்தவர்கள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்.. காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க என்கிற பாடல் வரிகளிலேயே காகங்களின் கம்யூனிகேஷனை அப்போவே சொல்லி இருப்பார்கள். இந்த வீடியோவை பார்த்தால் அப்படியே அவற்றின் கம்யூனிகேஷன் நொடிப் பொழுதில் வானில் நிகழ்வதை கண்டு பிரம்மிக்க முடிகிறது.

யார் வேணா பண்ணலாம்
காக்கா கோபாலிடம் உங்களால் மட்டும் தான் காக்கைகளை வரவழைக்க முடியுமா என்று கேட்டதற்கு, யார் வேண்டுமானாலும் அவற்றை அழைக்கலாம். அய்யோ ஆபத்து என காகம் ஒன்று கத்துவது போல கத்தினால் அவை கண்டிப்பாக கூட்டமாக வரும். ஒன்றுமில்லை போகலாம் என சொன்னதும் அவை கிளம்பிவிடும் என கூலாக சொல்கிறார் காக்கா கோபால்.

முட்ட வரும் மாடு
காகங்களை மட்டுமின்றி முட்ட வரும் மாடு ஒன்றிடம் காக்கா கோபால் பேச்சுக் கொடுத்து அதனை சாந்தப்படுத்துவதும், கோபப்படுத்துவதாக பேசுவதை பார்க்கவும் மிரட்சியாகவே உள்ளது. இப்படி உள்ள மனிதரை தமிழ் சினிமா இன்னமும் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஒன்ஸ் மோர்
ஒரு முறை ஏதோ காகங்கள் வரும் நேரத்தில் கருப்பு சட்டை அணிந்து கொண்டு மனுஷன் கத்துறான் பா காகங்கள் வந்ததும் வீடியோ எடுத்து ஜிம்மிக் செய்து விட்டனர் எனக் கூறி விடக் கூடாது என்பதற்காக மீண்டும் காகங்களை அழைக்க அவரிடம் கேட்க, மீண்டும் அழைக்கிறார் பல நூறு காகங்கள் பறந்து வருகின்றன. கண்டிப்பாக இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க!


Click it and Unblock the Notifications