37 வயதில் கர்ப்பம்.. வாழ்க்கையை மாற்றிய மகன்.. உருகிய கலா மாஸ்டர்!
சென்னை: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் எனப் பல டாப் ஹீரோக்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றி பல விருதுகளை வென்றவர் கலா மாஸ்டர். திரையில் நடனப் புயலாக வலம் வரும் இவர், நிஜ வாழ்க்கையிலும் ஒரு சிங்கப்பெண் தான். இவர் தனது கர்ப்பகாலத்தில், மருத்துவர்களின் எச்சரிக்கையையும் தாண்டி கடுமையாக உழைத்ததை டிவி நிகழ்ச்சி ஒன்றில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
அதில், நான் 37 வயதில்தான் கர்ப்பமானேன். அப்போதுதான் சின்னத்திரையில் செம ஹிட்டான 'ஜோடி நம்பர் ஒன்' நடன நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றி வந்தேன். வயது முதிர்வு காரணமாக, இது மிகவும் லேட்டான பிரக்னன்சி அதனால், மிகவும் பாதுகாப்பாக, ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால், நான் எதற்கும் பயப்படாமல், எப்போதும் போல சுறுசுறுப்பாகவே இருந்தேன். கர்ப்பமாக இருந்தபோதும் ஓடுவது, ஆடுவது வழக்கம் போல உழைத்துக் கொண்டே இருந்தேன். என் அம்மா, நான் வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக என் காலில் கட்டுப் போட்டு உட்கார வைத்தார். ஆனால், நான் கட்டை அவிழ்த்துக்கொண்டு, விஜய்யின் படப்பிடிப்பிற்கு ஓடிவிட்டேன்.

அவன் என் தெய்வம்: எனக்கு எப்போதுமே தைரியம் அதிகம், எது நடப்பதோ நடக்கட்டும், எதற்கும் பயப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். வாழ்க்கையை நம்மால் மீண்டும் 'ரிவைண்ட்' செய்ய முடியாது. நாளைக்கு என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும். ஆனால், அய்யோ.. இந்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டோமே என நினைத்து பின்னாளில் வருத்தப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால், எதையும் விட்டுவிடக் கூடாது என்று காலையில் சென்னையில் ஒரு ஷூட்டிங், மதியம் விஜிபியில் ஷூட்டிங் என காலை, மாலை என நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பேன். அந்த நிலையிலும் டிரைவரைக் கூட வைத்துக் கொள்ளாமல், நானே காரை ஓட்டிக்கொண்டு படப்பிடிப்புகளுக்குச் செல்வேன். அவ்வளவு ஓட்டத்திற்கு நடுவேதான் என்னுடைய மகன் பிறந்தான். அவன் என் தெய்வம். அவன் இந்த உலகத்திற்கு வந்த பிறகுதான், என்னுடைய வாழ்க்கையும், என்னுடைய குடும்பத்தின் வாழ்க்கையும் ஒட்டுமொத்தமாக அப்படியே மாறிவிட்டது என நெகிழ்ச்சியுடன் கலா மாஸ்டர் தனது மகன் குறித்து பேசி உள்ளார்


Click it and Unblock the Notifications