தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு "அந்த" தொல்லை இருக்கு.. கலாபக் காதலன் நாயகியின் சூசக பதில்
கலாபக்காதலன் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி ஏற்பட்டதற்கான காரணம் பற்றி நடிகை அக்ஷயா சூசகமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கலாபக்காதலன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அக்ஷயா அதன் பிறகு படங்களில் நடிக்காததற்கு பாலியல் ரீதியான தொல்லைகள் தான் காரணம் என்பதை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஆர்யா, ரேணுகா மேனன் ஜோடியாக நடித்து கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த படம் கலாபக்காதலன். இந்த படத்தில் அக்கா கணவரை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அக்ஷயா.
எதிர்மறையான கதாபாத்திரம் என்றாலும் நன்றாக நடித்து பாராட்டுக்களை பெற்றவர் அவர். அவரது வேடம் நாயகியை விட அதிக அளவில் பேசப்பட்டது. அக்ஷயாவுக்கு பெரும் எதிர்காலம் காத்திருப்பதாகவும் எதிர்பார்க்கப்பட்டது.

யாளி படத்தில் அக்ஷயா
ஆனால் கலாபக்காதலன் படத்திற்கு பிறகு அக்ஷயா வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரது கணவர் தயாரித்துள்ள யாளி என்ற படத்தை தானே இயக்கி, ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

பாலியல் தொல்லைகள்
யாளி படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட நடிகை அக்ஷயா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஸ்ரீரெட்டி உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் பற்றி வெளிப்படையாக புகார் தெரிவித்து வருவதைப் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர்.

நடிகைகளுக்கு பாலியல் பிரச்சினைகள்
அதற்கு பதில் அளித்த அக்ஷயா, கலாபக் காதலன் படத்திற்கு பிறகு தான் ஏன் படங்களில் நடிக்கவில்லை என்பது பற்றி சூசகமாக தெரிவித்தார். அவர் கூறும்போது, "மற்ற அனைத்து துறைகளைப் போல சினிமாத்துறையிலும் பெண்களுக்கு பிரச்சினைகள் இருக்கிறது.

அக்ஷயாவைத் தேடி வராத வாய்ப்புகள்
கலாபக்காதலன் படத்தில் நன்றாக நடித்திருந்தும் அதன் பிறகு ஏன் படங்களில் நடிக்கவில்லை என நிறைய பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்ல முடியாது. இப்படி சொன்ன நீங்கள் புரிந்துள்ளகொள்ளவீர்கள் என நினைக்கிறேன்.

நடிக்காமல் இருந்ததற்குக் காரணம்
நான் ஒரு சிங்கர், டான்சர், ஒரு படத்தில் நடித்து நல்ல பெயர் வாங்கி இருக்கிறேன். அப்படி இருந்தும் ஏன் அதன் பிறகு நடிக்கவில்லை எனக் கேட்டனர். மற்றவர்களை பற்றி சொல்ல எனக்கு உரிமை இல்லை. நான் எப்படி என்று சொல்லி விட்டேன்" என்று அவர் பூடகமாக பேசினார்.
அவர் சொல்வதைப் பார்த்தால்.. தமிழ் சினிமாவிலும் அந்தத் தொல்லையை நடிகைகள் சந்தித்துதான் வருகின்றனர் போலும் என்றே எண்ணத் தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











