தெறி ரீ ரிலீஸ் சம்பவம் பண்ணும்.. மகேந்திரனுக்கு பதில் அந்த பிரபலமா?.. கலைப்புலி எஸ். தாணு பளிச்!

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான தெறி திரைப்படம் சுமார் 10 ஆண்டுகள் கழித்து இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெறி படம் குறித்தும் அந்த படத்தில் மகேந்திரனுக்கு பதில் இன்னொரு பிரபல இயக்குநரை நடிக்க வைக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்தும் தயாரிப்பாளர் எஸ். தாணு பேசியுள்ளார்.

துப்பாக்கி படத்தை விட தெறி படத்தின் கலெக்‌ஷன் பயங்கரமாக இருந்தது என்றும் ஓபன் செய்துள்ளார். விஜய், மகேந்திரன், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, கிளைமேக்ஸில் விஜய்யின் ரியல் மகள் திவ்யா சாஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Kalaipuli S Thanu opens up Theri Re release will smash Box Office and reveals some secret too
Photo Credit:

இந்த வாரம் ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி, சரத்குமாரின் ஆழி, ஆரி அர்ஜுனின் 4th Floor உள்ளிட்ட படங்களுடன் தெறி ரீ ரிலீஸ் படமும் போட்டியாக வெளியாகி உள்ள நிலையில், பாக்ஸ் ஆபீஸில் சச்சின் படத்தை போலவே தெறியும் சம்பவம் செய்யும் என கலைப்புலி எஸ். தாணு கூறியுள்ளார்.

மகேந்திரனுக்கு முன்பாக: தெறி படத்தில் பிரபல இயக்குநரை நடிக்க வைக்கவே முதலில் நினைத்தோம் என தாணு பேசியதும் தொகுப்பாளர் 10 வருஷம் ஆகிடுச்சு யார் அந்த இயக்குநர்னு சொல்லலாம்ல என போட்டு வாங்க பாரதிராஜாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். வில்லன் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கணுமா? என அவர் யோசிக்க ஏற்கனவே அட்லி உறுதியாக மகேந்திரன் சார் தான் வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்த நிலையில் அவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்தேன் என தாணு கூறியுள்ளார்.

Kalaipuli S Thanu opens up Theri Re release will smash Box Office and reveals some secret too
Photo Credit:

தெறி சம்பவம் செய்யும்: துப்பாக்கி படத்தை விட தெறி படம் அதிகம் வசூல் செய்துள்ளது. கடந்த மாதம் தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்ய நினைத்த போது பல தயாரிப்பாளர்கள் நேரடியாக வீட்டுக்கே வந்து மாலை, சால்வை எல்லாம் போட்டு கேட்டுக் கொண்டனர். அதனால், தெறி ரீ ரிலீஸ் தள்ளிப்போனது. பல தியேட்டர் ஓனர்கள் தெறி படத்தை ரீ ரிலீஸ் பண்ணுங்க என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் தான் இந்த வாரம் தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்கிறேன் கண்டிப்பாக சச்சின் படத்தை போலவே பாக்ஸ் ஆபீஸில் இந்த படமும் சம்பவம் செய்யும் என்றார்.

விஜய்யிடம் பேசுவது கிடையாது: தெறி ரீ ரிலீஸ் தொடர்பாக விஜய்யிடம் அனுமதி ஏதாவது வாங்க வேண்டுமா என்கிற கேள்விக்கு, அவர் ஒரு பெரிய லட்சியத்தை நோக்கி அரசியலுக்கு சென்றுவிட்டார். அவரை சந்தித்து சினிமா பற்றியெல்லாம் பேசமுடியாது என்றும் தெறி ரீ ரிலீஸுக்கும் விஜய்க்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார் கலைப்புலி எஸ். தாணு.

அரசன் அசுரத்தனமா ரெடியாகுது: வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவை வைத்து வாடிவாசல் பண்ண பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் தாணு சிம்புவை வைத்து அரசன் படத்தை தயாரித்து வருகிறார். அந்த படத்தின் மீது ஏகப்பட்ட வதந்திகள் வெளியானாலும் அதெல்லாம் உண்மை கிடையாது என்றும் படம் அசுரத்தனமாக ரெடியாகி வருவதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X