twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னோட இன்ஸ்பிரேஷன் பாக்யராஜ் சார் தான் …களத்தில் சந்திப்போம் இயக்குனர் பேட்டி!

    |

    சென்னை: என்.ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி நடிப்பில் கடந்த வாரம் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படம் வெற்றிநடை போட்டு வருகிறது.

    என்.ராஜசேகர் இதற்குமுன் 2016ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான மாப்பிள சிங்கம் படத்தை இயக்கியிருந்தார். இது ராஜசேகருக்கு இரண்டாவது படமாகும்.

    இவர் முதல் முறையாக ஃபில்மி பீட் தமிழ் - க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பிரத்யேகமாக சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

    ரசிகர்கள் விமர்சனம்

    ரசிகர்கள் விமர்சனம்

    இயக்குனர் எழிலிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் ராஜசேகர். தனக்கு வருவதை படமாக எடுத்தேன், இருந்தாலும் ரசிகர்கள் பலர் எழிலின் படங்களில் வரும் காமெடி சீன்கள் போல் இந்த படத்திலும் காமெடி சீன்கள் இடம்பெற்றிருந்தன என கூறியதாக பேட்டியளித்துள்ளார்.

    ரசிகர்கள் ஆதரவு

    ரசிகர்கள் ஆதரவு

    படக்குழுவினர் இணைந்து பார்த்து படத்தை ரசித்தோம். அது போல திரையரங்குகளில் ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, கொரோனாவால் படம் ஒரு வருடம் தள்ளி போக மாஸ்டர் படத்தை தொடர்ந்து திரையரங்குகளில் கூட்டம் வர தொடங்கியது. எதிர்பார்த்தது போல ரசிகர்கள் ஆதரவு கொடுத்ததாக கூறியுள்ளார் ராஜசேகர்.

    நல்ல வசனங்கள்

    நல்ல வசனங்கள்

    தங்களுடைய படங்களில் இடம்பெறும் நல்ல வசனங்களை குறித்த கேள்விக்கு, இந்த விஷயத்தில் இயக்குனர் பாக்யராஜ் சார் தான் தனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் எனவும், அதே போல இயக்குனர் மகேந்திரனின் வசனங்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். களத்தில் சந்திப்போம் படத்தின் வசன எழுத்தாளர் அசோக்கை வெகுவாக பாராட்டி பேசினார்.

    ஜீவானின் விருப்பம்

    ஜீவானின் விருப்பம்

    தான் முதலில் தயாரிப்பாளர் R. B. சௌத்திரியிடம் வேறு கதை கூறியதாகவும், டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் இதை சௌத்திரி தேர்வு செய்தார் எனவும், இன்னொரு ஹீரோ கதாபாத்திரத்தை அருள்நிதி நடித்தால் நன்றாக இருக்கும் என ஜீவாவே அருள்நிதியை தேர்வு செய்ததாகவும் கூறியுள்ளார்.

    Read more about: kalathil santhippom rajasekhar
    English summary
    Kalathil Santhipom Director Rajasekhar interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X