நயன்தாராலாம் அந்த விஷயத்துல சான்ஸே இல்லை.. சினிமாவில் காட்டப்படும் விதம்.. கல்கி பேட்டி!

சென்னை: இந்த லாக்டவுனில் திருநங்கைகள் படும்பாடு குறித்து பொள்ளாச்சி கல்கி அளித்துள்ள பேட்டி, ஒன் இந்தியா தமிழ் யூடியூப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாக்களில் திருநங்கைகளை முன்பு கொச்சைப் படுத்தி எடுத்த நிலையில், இப்போ ரொம்பவே மாறி இருக்காங்க முதல், நடிகை நயன்தாரா திருநங்கைகள் மேல் செலுத்தும் அன்பு வரை பல விஷயங்களில் இந்த வி கனெக்ட் சாட்டில் அழகாக பேசியுள்ளார் கல்கி.

Kalki talks about Nayanthara and other issues faced by trans people!

உலக நாடுகளில் திருநங்கைகளுக்கு வழங்கப்படுவதை போல் மருத்துவ காப்பீடுகள் இந்தியாவிலும் அதிக அளவில் வழங்கப்பட வேண்டும் என்றும், தங்களை யாரும் கடவுளாக பார்க்க வேண்டாம், சாதாரண மனிதர்களாக பார்த்தாலே போதும் என வெகு இயல்பாக பேசியுள்ளார்.

நர்த்தகி படத்தில் நடித்துள்ள கல்கி, சினிமாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், சுஹாசினி மேடம் உள்ளிட்டவர்கள் தனது நலனில் மிகவும் அக்கறை செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

சர்கார், தர்பார் உள்ளிட்ட படங்களில் திருநங்கைகளை நல்ல விதத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கையாண்டது குறித்தும் இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

போதுமான கல்வி அறிவு இல்லாததன் காரணமாகவே திருநங்கைகள் பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில்களுக்கு செல்வதையும் செய்து வருகின்றனர் என்றும், பள்ளிகளிலேயே அவர்கள் படிப்பதற்கான இயல்பான சூழல் உருவானால், ஏகப்பட்ட திருநங்கைகள் சாதனையாளர்களாக இந்த சமூகத்தில் எழுச்சி பெறுவர் என்றும் கூறினார்.

நயன்தாராவை தான் இதுவரை சந்தித்தது இல்லை என்றாலும், திருநங்கைகள் மீது அவர் காட்டும் அன்பு குறித்து தனது சகோதரிகள் பலர் தெரிவித்துள்ளதாகவும், அவர்களை கண்டால், கட்டியணைத்து அன்புடன் பேசும் குணம் கொண்டவர் என்றும் பாராட்டியுள்ளார்.

அதே போலத்தான் நடிகர் விஜய் செதுபதியும் திருநங்கைகள் மீது, அக்கறை கொண்ட நடிகராக திகழ்கிறர். அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் எங்களுக்கு உடன் பாடு இல்லை என்றாலும், அதற்கான கோபத்தை இயக்குநரிடம் தான் காட்டுவோமே தவிர அந்த நடிகரிடம் காட்டத் தேவையில்லை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பொள்ளாச்சி கல்கியின் முழு வீடியோவை காண லிங்கை க்ளிக் செய்யுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X