கண்ணதாசன் பிறந்தநாளிலேயே தனது பிறந்தநாளையும் கொண்டாடிய மெல்லிசை மன்னன்.. கல்தூண் ராமசந்திரன் பேட்டி!

சென்னை: கவிக்கு அரசரான கண்ணதாசன் மற்றும் மெல்லிசைக்கு மன்னரான எம்.எஸ். விஸ்வநாதன் இருவரும் ஒரே நாளில் பிறந்தநாளை கொண்டாடியது தொடங்கி, பல சுவாரஸ்ய கதைகளையும், பாடல்கள் பற்றியும் கல்தூண் ராமசந்திரன் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

நேற்று, ஜூன் 24ம் தேதி கண்ணதாசனின் 93வது பிறந்தநாள் மற்றும் எம்.எஸ்.வியின் 92வது பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது.

Kalthoon Ramachandran talks about Kannadasan and MSV birthday special!

எம்.எஸ். விஸ்வநாதன் தனது பிறந்தநாள் தேதி தெரியாத நிலையில், கண்ணதாசனின் பிறந்தநாளிலேயே தனது பிறந்தநாளையும் கொண்டாட துவங்கினார் எம்.எஸ். விஸ்வநாதன்.

கண்ணதாசன் குறித்தும் எம்.எஸ்.வி பற்றியும் மிக ஆழமாகவும் அழகாகவும் பேசிய கல்தூண் ராம்சந்திரன், கண்ணன் மீது கண்ணதாசன் கொண்ட பக்தியில் விளைந்த "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" பாடலை பாடியும், அது பற்றி விளக்கியும் அசத்தினார்.

மேலும், அச்சம் என்பது மடமையடா, வீடு வரை உறவு உள்ளிட்ட பல பாடல்களை கண்ணதாசன் வரிகளில் எழுதப்பட்டு, எம்.எஸ்.வி இசையில் உருவான பல பாடல்கள் பற்றியும் பேசிய பேட்டியை காண வீடியோவை க்ளிக் செய்து, காலத்தால் அழியாத இசையை கொடுத்தவர்களின் இசையில் நனையுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X