twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அடிபட்ட காலில் டேப் ஒட்டி ஷூட்டிங்குக்கு ரெடியானார் தல..' - கல்யாண் மாஸ்டர் பேட்டி #Exclusive

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பலமொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கொரியோகிராஃபராக பணியாற்றிய கல்யாண் மாஸ்டர் முதன் முதலில் கொரியோகிராஃபராக பணியாற்றியது அஜித் நடித்த 'உயிரோடு உயிராக' படத்தில் தான்.

    அப்போது முதல் இருபதாண்டுகளுக்கும் மேலாக அஜித்தின் நண்பராக இருந்து வருகிறார். தொடர்ந்து 'தீனா', 'வில்லன்' என சமீபத்திய 'வேதாளம்' படம் வரை அஜித் படங்களின் ஃபேவரிட் கொரியோகிராஃபர் இவர்தான்.

    கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்த 'ஆலுமா டோலுமா' முரட்டு ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே. அஜித் பிறந்தநாளையொட்டி கல்யாண் மாஸ்டரை தொடர்பு கொண்டோம். "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார். எல்லா மகிழ்ச்சியும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்க வாழ்த்துறேன்." என்றபடி பேசத் தொடங்கினார்.

    அஜித் உடனான உங்கள் நட்பு?

    அஜித் உடனான உங்கள் நட்பு?

    "எங்களோடது தினமும் பேசிக்கிட்டு, தினமும் சந்திச்சிக்கிற மாதிரியான நட்பு கிடையாது. ஆனா, எப்போ மீட் பண்ணினாலும் உடனே ஒரு நெருக்கம் வந்துடும். எங்க, அம்மா அப்பா என எல்லோரையும் அஜித் சார் ஃபேமிலிக்கு நல்லா தெரியும். எங்க அம்மா இறந்தபோது என் கார்ல தான் அம்மாவோட உடல் வரணும்னு சொன்னார். நண்பர்ங்கிறதை தாண்டி எங்கள் குடும்ப உறுப்பினராகவே இருக்கிறார். நாங்க எப்போ மீட் பண்ணாலும் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்குற மாதிரியான புரிதல் கொண்ட நண்பர்கள்."

    கடைசியா எப்போ அஜித்தை மீட் பண்ணீங்க?

    கடைசியா எப்போ அஜித்தை மீட் பண்ணீங்க?

    " 'வேதாளம்' படத்துல நான் நடனம் அமைச்ச 'ஆலுமா டோலுமா' செம ஹிட் ஆச்சு. அதுக்கு அப்புறம் அவர் 'விவேகம்' படம் பண்ணிட்ருக்கும்போது ஃபாரீன்ல மீட் பண்ணோம். அந்தப் படத்தில் நான் வொர்க் பண்ணலை. அவர் யாரையும் எப்போவுமே டிஸ்டர்ப் பண்ணமாட்டார். நைட் நேரங்கள்ல யாருக்கும் போன் கூட பண்ண மாட்டார். அவங்களோட பெர்சனல் டைமை நாம எடுத்துக்கக் கூடாதுனு சொல்வார்."

    அஜித் கூட வொர்க் பண்ண அனுபவம்?

    அஜித் கூட வொர்க் பண்ண அனுபவம்?

    "என்னோட முதல் படமே அஜித் சார் கூட தான். அதுக்கு அப்புறம் எனக்கு பெரிய பிரேக் கிடைச்சது 'தீனா' படத்துல தான். டான்ஸ் பொறுத்தவரைக்கும் அவர் எனக்கு ரொம்ப கம்ஃபர்டபிள் ஆனவர். நான் ஹீரோக்களோட கொரியோகிராஃபர். ஒவ்வொருத்தருக்கும் என்ன வரும்னு தெரிஞ்சு அவங்க பாடி லாங்வேஜுக்கு ஏற்றதைத்தான் பண்ணுவேன். ஒண்ணு பண்ணலாம்னு சொல்லிட்டு முடியுமானு யோசிச்சா, அவர் கண்டிப்பா பண்ணலாம்னு சொல்லிட்டு ரெடி ஆகிடுவார். 'வேதாளம்' பண்ணும்போது ஒரு டேக் ஓகே ஆச்சு. இன்னும் பெட்டரா பண்றேன்னு சொன்னார். அப்போ ஏற்கெனவே ஆபரேஷன் பண்ணியிருந்த கால்லயே அடிபட்ருச்சு. அப்படி இருந்தும் கூட கால்ல டேப் சுத்திக்கிட்டு இன்னிக்கே வேலையை முடிச்சிடலாம்னு சொல்லிட்டார்.

    ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் எப்படி?

    ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் எப்படி?

    "ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்தீங்கனா அஜித்-ங்கிற பெரிய பிம்பமே இருக்காது. ஒரு நார்மல் ஆர்டிஸ்ட் எப்படி பழகுவாங்களோ அப்படித்தான் இருப்பார். காலையில அவரே வந்து எல்லோருக்கும் குட் மார்னிங் சொல்வார். எல்லோர்கிட்டேயும் கேர் எடுத்துப் பேசுவார். விசாரிப்பார். 'மங்காத்தா' படம் பண்ணும்போது செட்ல எல்லோர்கிட்டயும் சாப்படீங்களானு கேட்டு, சமைச்சு தந்து எல்லோரையும் அசர வெச்சுட்டார். அவர் நடவடிக்கைகளைப் பார்த்தா ரொம்ப சாதாரண மனிதர். அதனால் தான் அவர் அமேஸிங்."

    அவரோட சின்சியாரிட்டி பற்றி?

    அவரோட சின்சியாரிட்டி பற்றி?

    "வேலையில் அவ்வளவு சின்சியரான மனிதர். வேலையைப் பொறுத்தவரை எனக்கு மட்டும் இல்ல.. எல்லோருக்குமே ரொம்ப கம்ஃபர்டபிள் ஆனவர். பெரிய ஹீரோங்கிற ஒரு விஷயமே அவருக்குள்ள இருக்காது. ஒரு நாள்ல 20 மணி நேரம் கூட வொர்க் பண்ணுவார். அவ்ளோ பெரிய ஸ்டேஜ்ல இருக்கிற ஆள், எவ்ளோ நேரம் ஸ்பாட்ல இருக்கச் சொன்னாலும் ஓகே சொல்லிடுவார். கேரவனுக்குபோகாம செட்லயே உட்கார்ந்துடுவார். அந்த விஷயத்துல டீம் கூட ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங்கா இருப்பார்."

    அஜித்-கிட்ட நீங்க வியந்து பார்க்கிற விஷயம்?

    அஜித்-கிட்ட நீங்க வியந்து பார்க்கிற விஷயம்?

    "எப்படி ஒரு மனுஷன் எந்த உயரத்துக்குப் போனாலும் இப்படி இருக்க முடியுதுன்னுதான் ஆச்சரியமா இருக்கும். 'வேதாளம்' ஷூட்டிங் அப்போ ஒரு விஷயம் சொன்னார். 'பெரிய ஆளா ஆக எனக்கு பயமாருக்கு. நாம எங்க இருந்து வந்தோம்ங்கிறது நமக்குத் தெரியும். எப்படி இருக்கோம்ங்கிறது தெரியும். எவ்வளவு பெரிய ஆளா ஆனாலும் ரொம்பப் பணிவா இருக்கணும்ங்கிறதைத் தான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்'னு சொன்னார். அப்படித்தான் அவர் எப்போவும் இருக்கார்."

    அவரை ஈஸியா அணுகமுடியாதுனு சொல்றது உண்மையா?

    அவரை ஈஸியா அணுகமுடியாதுனு சொல்றது உண்மையா?

    "ஸ்டார்ன்னா பெரிய ரேஞ்சுல பார்ப்போம். அந்த உணர்வு அவருக்கு இருக்காது. பலருக்கு ஈஸியா அணுகமுடியாதவரா, தொடர்பு கொள்ளமுடியாதவரா அவர் இருக்கலாம். ஆனா, அவரோட சுபாவம் அது. அவர் வாழ்க்கையை அவருக்குப் பிடிச்சமாதிரி ரொம்ப அழகா வாழ்ந்துக்கிட்டு இருக்கார்."

    அவர் சமைச்ச பிரியாணி எத்தனை முறை சாப்பிட்டிருப்பீங்க?

    அவர் சமைச்ச பிரியாணி எத்தனை முறை சாப்பிட்டிருப்பீங்க?

    "பிரியாணி மட்டும் இல்ல, மீன்லேயும் நிறைய வெரைட்டி பண்ணிக் கொடுத்திருக்கார். நான் நிறைய முறை அவர் கையால் சாப்பிட்டிருக்கேன். அவரைச் சந்திக்கப்போற பலருக்கும் அவர்தான் சமைச்சு பரிமாறுவார்."

    அஜித் கூட நிறைய படம் பண்ணிருக்கீங்களே.. அடுத்த படமும் பண்ணுவீங்களா?

    அஜித் கூட நிறைய படம் பண்ணிருக்கீங்களே.. அடுத்த படமும் பண்ணுவீங்களா?

    "அஜித் சாருக்கு மட்டும் கிடையாது. விக்ரம், ஜெயம் ரவி எல்லோருக்கும் நிறைய படங்கள் பண்ணிருக்கேன். அஜித் சாருக்கு நான் பண்ணினா சரியா வரும்னு நினைச்சு கமிட் பண்ணுவாங்க. வேற எதுவும் காரணம் கிடையாது. சிவா இயக்கும் அஜித் சாரோட அடுத்த படம் கண்டிப்பா நான் பண்ணுவேன்னு நம்புறேன்."

    English summary
    Kalyan Master is the favorite choreographer for 'Thala' Ajith. With Ajith's birthday, we contacted his friend Kalyan Master who has worked in a lot of movies with him. Here is an interview with Kalyan master..
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X