சூட்டிங்கை கவனிக்காமல் வெங்கட் பிரபு செய்த காரியம்… சீக்ரெட்டை போட்டுடைத்த கல்யாணி பிரியதர்ஷன்

சென்னை : மாநாடு படத்தின் மூலம் தமிழில் சிம்புவிற்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.

இந்தப் படம் குறித்து பில்மிபீட்டிற்கு அவர் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது சூட்டிங்கின்போது இயக்குநர் வெங்கட் பிரபு செய்த காரியம் குறித்த ரகசியத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மாநாடு படம்

மாநாடு படம்

நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகி கடந்த 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் மாநாடு. நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த நிலையில், படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றி படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் படம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன் பேட்டி

கல்யாணி பிரியதர்ஷன் பேட்டி

தமிழ் பிலிமிபீட்டிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் படம் குறித்த பல்வேறு நிகழ்வுகளையும் மகிழ்ச்சித் தருணங்களையும் பகிர்ந்து கொண்டார். வெங்கட்பிரபுவின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து கூறிய அவர், ஒருநாள் படப்பிடிப்பின்போது மானிட்டரின் அருகில் அமர்ந்துக் கொண்டு வெங்கட்பிரபு கிரிக்கெட்டை பார்த்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் பிரபுவின் செயல்

வெங்கட் பிரபுவின் செயல்

அவர் சீரியசாக மானிட்டரை பார்த்து சரி செய்துக் கொண்டிருந்ததாக தான் நினைத்திருந்த நிலையில், அவரது இந்த செயல் தனக்கு ஆச்சர்யத்தை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாநாடு 2 படம் குறித்து தான் எதுவும் சொல்ல முடியாது என்றும் அதை வெங்கட்பிரபு சார் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மாநாடு 2ம் பாகம்?

மாநாடு 2ம் பாகம்?

ஆனால் மாநாடு படத்தை போல மீண்டும் ஒரு சிறப்பான திரைக்கதையை அமைத்து அதை உருவாக்குவது மிகவும் கடினம் என்றும் அவர் கூறியுள்ளார். சிம்புவின் செயல்களில் மாறுபாடு இருந்தாலும் அவரது பழைய நகைச்சுவை உணர்வு மாறவில்லை என்றும், தற்போதும் அவர் வந்தவுடன் முதலில் பிரேம்ஜியை கலாய்ப்பதில்தான் அவரது கவனம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மரைக்காயர் படத்தில் கேமியோ ரோல்

மரைக்காயர் படத்தில் தான் ஒரு கேமியோ ரோல் மட்டுமே செய்துள்ளதாகவும் ஆனால், அந்தப் படத்துடன் தான் 5 வருடங்கள் தொடர்ந்து பயணம் செய்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அடுத்ததாக கல்யாணி மற்றும் ப்ரணவ் மோகன்லால் நடிப்பில் ஹ்ருதயம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X