சரண் படத்தில் கமல்!

By Staff

தசாவதாரம் படத்தை முடித்து விட்டு சரண் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன்.

திறமையாளர்களுடன் இணைவதில் கமலுக்கு நிகர் கமல்தான். யாருடன் எப்போது சேர வேண்டும் என்பதை சரியாக கணக்கிட்டு, செமத்தியானகூட்டணி வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் கமல்.

அப்படித்தான் பெரிய இடைவெளிக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து தசாவதாரத்தை உருவாக்கி வருகிறார். இப்போது சரணுடன்மீண்டும் இணையவுள்ளார் கமல்.

இருவரும் இணைந்த முதல் படம் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். இந்தியைப் போலவே தமிழிலும் பட்டையைக் கிளப்பிய படம் இது. கமல்ஹாசன்,பிரகாஷ் ராஜ் ஆகியோரின் அட்டகாசமான நடிப்பு (சினேகாவும்தான்!) ரசிகர்களை வசீகரித்தது

இந்த நிலையில் மீண்டும் சரணுடன், கமல் இணைவதால் இந்தப் படம் குறித்தும் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது. கோலிவுட்டில் படு பிசியானமனிதராகி விட்டார் சரண். வெறும் இயக்குநராக மட்டும் இல்லாமல், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளதால், குந்தக் கூட நேரமில்லாமல்படு ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கிறார் சரண்.

கமலுடன் மீண்டும் இணைவது குறித்து சரண் கூறுகையில், தசாவதாரம் படத்தை முடித்த பிறகு கமல்சாரை நான் இயக்கவுள்ளேன். இதுதொடர்பானகதை இறுதி வடிவம் பெற்றுக் கொண்டிருக்கிறது. கமல் சாரிடம் ஆலோசித்து விட்டால் கதை ரெடியாகி விடும்.

நான் தற்போது தயாரித்துள்ள முனி படு சிறப்பாக வந்துள்ளது. இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் ராகவேந்திராஅருமையாக இயக்கியுள்ளார். முனி நன்றாக வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

மெகா பட்ஜெட் படங்களைக் கூட திறமையாக இயக்கும் திறமை லாரன்ஸிடம் உள்ளது. மார்ச் 9ம் தேதி படம் திரைக்கு வருகிறது என்றார் சரண்.

முனியில் நாயகியாக நடித்திருப்பவர் வேதிகா. பின்னி எடுத்துள்ளாராம் நடிப்பில். கிளாமரிலும் கில்மாவாக நடித்திருக்கிறாராம். ஆட்டத்தில்அவரை துவம்சம் செய்து துள்ள வைத்துள்ளார் லாரன்ஸ். அவர் தவிர ராஜ்கிரணுக்கும் சூப்பர் கேரக்டராம். வழக்கமாக அடிதடி, ஆட்டு எலும்புக்கடி என்று வந்து போன ராஜ்கிரணாக இல்லாமல், ஆட்டத்திலும் அட்டகாசம் செய்துள்ளாராம் ராஜ்கிரண்.

படத்திற்கு பரத்வாஜ்தான் இசை. ஆனால் பாடல்களில் லாரன்ஸுக்குத் திருப்தி ஏற்படவில்லையாம். இதனால் பரத்வாஜுக்கும், லாரன்ஸுக்கும்இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாம். இதனால் பின்னணி இசை அமைக்க மாட்டேன் என்று பரத்வாஜ் கூறி விட, எஸ்.பி.வெங்கடேஷைக் கூட்டி வந்து பின்னணி இசைக்குப் பயன்படுத்தியுள்ளார்களாம்.

தொடர்ந்து புது இயக்குநர்களை அறிமுகப்படுத்த சரண் ஆர்வமாக உள்ளாராம். எனது ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் மூலமாக பல இளம்திறமையாளர்களை அடையாளம் காட்ட ஆசைப்படுகிறேன். நான் இயக்குநராக வந்தபோது யாருமே என்னை ஏற்க தயாராக இல்லை. அந்தக்காயம் எனக்கு இன்னும் மறக்கவில்லை. இதனால்தான் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில், தூக்கி விடுவதில் நான் ஆர்வமாக, தீவிரமாகஇருக்கிறேன் என்கிறார் சரண்.

வெல்செட் சரண்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X