அக்ஷரா பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள்... அவளுக்கு எனது அறிவுரை தேவையில்லை: கமல்
சென்னை: நடிகர் கமல் -சரிகா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என தனது பன்முகத் திறமைகளை சினிமாவில் நிரூபித்து வருகிறார்.
இந்நிலையில், கமலின் இளைய மகளான அக்ஷரா இயக்குநர் பால்கி இயக்கத்தில் இந்திப்படம் ஷமிதாப்பில் அறிமுகமாகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் அமிதாப்பச்சனும் நடிக்கிறார்.
தனது இளைய மகள் குறித்து கமல் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பான இடம்...
அக்ஷரா பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள். அவளுக்கு எனது ஆலோசனை தேவை இல்லை.

அவளது பாதை...
பழங்கால நடிகர்களிடம் இருந்து ஆலோசனை எதனையும் அவள் பெற மாட்டாள் என நான் கருதுகிறேன். அவளது பாதை குறித்து அவளுக்கு தெரியும் என நான் நினைக்கிறேன்.

சந்தேகமே வரவில்லை...
அவளுக்கு எப்பொழுது சந்தேகம் வருமோ அப்பொழுது என்னிடம் கேட்பாள். ஆனால் இதுவரை என்னிடம் அவள் கேட்டதில்லை.

அதிக நம்பிக்கை...
அதற்கு அவள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறாள் என்றே அர்த்தம். அவள் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள் என நான் நினைக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றிடமில்லை...
பாலிவுட்டில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் தவிர்த்து பிறரால் சிறப்பாக தங்களது தனித்தன்மையை நிரூபிக்க முடியவில்லையே என்ற கேள்விக்கு, ‘எப்பொழுதும் வெற்றிடம் என ஒன்று இருப்பதில்லை... அது வாய்ப்பை பொறுத்தது.

வேறுபாடில்லை...
தென்னிந்திய நடிகர்கள் அல்லது பீகாரை சேர்ந்த நடிகர் அல்லது வேறு எந்த பகுதியை சேர்ந்த நடிகர் என நான் கருதுவதில்லை. அந்த நடிகர் தனது பணியில் திறம்பட செயலாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன்' என கமல் பதிலளித்துள்ளார்.

தனுஷ் நல்ல நடிகர்...
மேலும், தனது இளைய மகளின் முதல் நாயகனான நடிகர் தனுஷ் குறித்த கேள்விக்கு, ‘அவர் நல்ல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பதாகவும் கமல் பாராட்டியுள்ளார்.

விஸ்வரூபம் 2....
தற்போது கமல் தனது இரண்டு பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார். அதில் ஒன்று அவரது எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் திரில்லர் படம் விஸ்வரூபம் 2. இப்பட பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன.

உத்தம வில்லன்...
மற்றொரு படம் உத்தம வில்லன். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகி வரும் நகைச்சுவை கலந்த படம். இது வருகிற தீபாவளியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











