கமல்ஹாசன் சார் தான் என்னுடைய ரோல் மாடல்..நடிகர் அசோக்செல்வன் நெகிழ்ச்சி!

சென்னை: கமல் சார் தான் என்னுடைய ரோல்மாடல் என்று "ஓ மை கடவுளே" திரைப்படத்தில் நடித்த நடிகர் அசோக்செல்வன் கூறியுள்ளார்.

Recommended Video

கமல் சார் தான் என் தலைவன் | Ashok Selvan Exclusive Interview #closecall | Filmibeat Tamil

சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் அசோக்செல்வன். அதன் பிறகு பீட்சா 2, தெகிடி, கூட்டத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்தார்.

இவரது சினிமா கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் தான் "ஓ மை கடவுளே".பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்வதில் மிகவும் வல்லவர் அசோக் .

 அனைவரது மனதை தொடும்

அனைவரது மனதை தொடும்

கேள்வி: "சில நேரங்களில் சில மனிதர்கள்" திரைப்படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

பதில் : இந்த திரைபடத்தில் நான் விஜய் என்கிற கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த படமானது அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு தருணத்தை நினைவுப்படுத்தும் விதமாக அமையும். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் சின்ன சின்ன விஷயங்களை மனதை தொடும் வகையில் அழகாக காட்டியிருக்கிறோம். இதில் ஒரு சந்தோஷம் என்னவென்றால், இந்த திரைப்படமானது வருடத்தின் ஆரம்பத்திலேயே வெளி வந்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

 தயாரிப்பாளர் நடிகையானார்

தயாரிப்பாளர் நடிகையானார்

கேள்வி: நடிகை ரியா குறித்து..

பதில்: நான் எப்பொழுது இயக்குனரை முழுவதும் நம்புகிறவன். என்னுடன் இந்த நடிகை நடித்தால் நல்லா இருக்கும் என்று எப்பொழுதும் நான் கூற மாட்டேன். இயக்குனர் சொல்வதை கேட்பேன். நடிகை ரியா தான் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர். ரியா இந்த கேரக்டரில் நடித்தால் நல்லா இருக்கும் என்று இயக்குனர் கூறினார். நடிகை ரியாவும் தயாரிப்பாளர் என்பதை மறந்து நடிகையாக அவரது பணியை சிறப்பாக செய்தார்.

 தேவையானதை செஞ்சேன்

தேவையானதை செஞ்சேன்

கேள்வி : கேமரா மேன் மகேந்திரன் கூறும்போது, நடிகர் அசோக் நடிகையுடன் டான்ஸ் பண்ணும்போது வேற மாதிரி இருப்பார் என்றார். இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?

பதில் : அய்யோ! அப்படி ஒன்றும் இல்லை. அந்த பாட்டுக்கு என்ன தேவையோ அப்படியே செய்து கொடுத்தேன். இயக்குனர் விஷால், கேமராமேன் மகேந்திரன் ஆகியோர் எந்த கேரக்டருக்கு என்ன தரணும் என்பதை புரிஞ்சுகிட்டவங்க. இவங்களுடன் பணிபுரிந்தது எனக்கு பெருமையாக இருந்தது.

 ஜெயகாந்தன் அவர்களின் நாவல் தலைப்பு

ஜெயகாந்தன் அவர்களின் நாவல் தலைப்பு

கேள்வி : "சிலநேரங்களில் சில மனிதர்கள்" என்ற தலைப்பில் வெளிவந்த ஜெயகாந்தன் அவர்களின் புத்தகம் படித்துள்ளீர்களா?

பதில் : இல்லை. அவங்க புத்தகங்களை அம்மா நிறைய படிப்பாங்க. அவங்க நிறைய சொல்லியிருங்காங்க. எங்களுடைய இந்த திரைபடத்திற்கு இந்த டைட்டிலை விட்டா , வேற எந்த டைட்டிலும் பொருந்தாது. அதைப்போல் திரைப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் எனது வாழ்வில் சந்தித்துள்ளேன்.

என் தலைவன் கமல் சார்

கேள்வி : நடிகர் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து...

பதில் : இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் என் தலைவன், நடிகர் கமல் சார் கலந்து கொண்டு வாழ்த்தினார். எனது துரதிஷ்டம் இந்த விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதை நினைச்சு இப்போதும் நான் வருத்தப்படறேன். ஆனால் அவரது பேச்சை இப்போதும் நான் கேட்டு சந்தோஷப்படுகிறேன் என்றார்.இது போல் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த அசோக் செல்வன் நேர்காணலை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X