கமல் வயது பற்றி கவலையில்லை... அவருடன் நடிப்பதுதான் முக்கியம்!

By Shankar

sonakshi Sinha
கமலுக்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம் என்று சிலர் கூறுவது பற்றி நான் கவலைப்படவில்லை. அவருடன் நடிப்பதுதான் முக்கியம் என்று நடிகை சோனாக்ஷி சின்ஹா கூறியுள்ளார்.

கமல் நடிக்கும் புதிய படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இதில் கமல் ஜோடியாக பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தபாங் படத்தில் நடித்துப் புகழ்பெற்றவர் சோனாக்ஷி.

கமலுடன் நடிக்க வந்துள்ள வாய்ப்பு குறித்து சோனாக்ஷி கூறுகையில், "சண்டிகாரில் இந்திப் படத்தில் இருந்தபோது எனது தாயார் அழைத்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக சொன்னார். இயக்குனர் செல்வராகவன் என்னை சந்தித்து கதை சொன்னார். கதை அற்புதமாக இருந்தது. நான் ஈர்க்கப்பட்டேன்.

உடனே ஒப்புக் கொண்டேன். பிறகுதான் இந்தப் படத்தின் ஹீரோ யார் என்று சொன்னார்கள். கமல் ஜோடியாக நடிப்பது சாதாரண விஷயமா என்ன... கமலஹாசனை இதுவரை நான் சந்தித்தது இல்லை. விரைவில் சந்திப்பேன்.

கமலுக்கு நான் ஜோடியாக நடிப்பது குறித்து இப்போதே சில விமர்சனங்கள் வந்துள்ளன. அவரது வயது குறித்தெல்லாம் என்னிடமே பேசுகிறார்கள். எனக்கு அவர் வயது குறித்து கவலையில்லை. அவருடன் நடிப்பதே முக்கியம். எனக்கு கிடைத்த அங்கீகாரம் என்று நினைக்கிறேன்.

படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்குகிறது. நடிப்பில் கமலும் செல்வராகவனும் எனக்கு போதிய ஆலோசனை தருவார்கள் என்பதால் தைரியமாக உள்ளேன். தொடர்ந்து வேறு தமிழ்ப் படங்களில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X