கமல் நடிகர் மட்டுமல்ல... சிறந்த 'டீம் லீடர்': கௌதமி பாராட்டு

By Mayura Akilan

சென்னை: நடிகர் கமல் சினிமாவின் அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை சிறப்பாகச் செய்யக் கூடியவர். அவர் சிறந்த குழுத் தலைவர் எனப் பாராட்டியுள்ளார் நடிகை கௌதமி.

மலையாளத்தில் வெற்றி நடை போட்ட த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் தயாராகி வருகிறது. மலையாளப் படத்தை இயக்கிய ஜீது ஜோசப்பே இப்படத்தையும் இயக்குகிறார். மோகன்லால் - மீனா ஜோடிக்குப் பதில் தமிழில் கமல் - கௌதமி இணைந்து நடித்து வருகின்றானர்.

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குறிப்பாக கமலுடன் மீண்டும் இப்படத்தில் நடித்துள்ளார் கௌதமி.

இந்நிலையில், தனது பாபநாசம் பட அனுபவம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கௌதமி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

சிறந்த குழுத் தலைவர்...

சிறந்த குழுத் தலைவர்...

கமல் ஒரு நடிகர் மட்டுமல்ல, சினிமாவில் எல்லா துறைகளிலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்யக்கூடியவர். அவர் ஒரு சிறந்த குழு தலைவர்.

சகலகலா வல்லவன்...

சகலகலா வல்லவன்...

நடிப்பாகட்டும், இயக்குவதாகட்டும், எந்த துறையிலும் அவர் ஒரே மாதிரியான ஈடுபாட்டுடன் செயல்படக்கூடியவர்.

நல்ல சந்தர்ப்பம்...

நல்ல சந்தர்ப்பம்...

அவருடன் இணைந்து நடித்தது எனது திறமையை வெளிப்படுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது.

புதுவித நடிப்பு...

புதுவித நடிப்பு...

நான் இதுவரை திரிஷ்யம் படத்தை பார்த்ததே இல்லை. அதனால் தான், இந்த படத்தில் என்னால் புதுவிதமான நடிப்பை தர முடிகிறது.

தொடர்ந்து நடிப்பேன்...

தொடர்ந்து நடிப்பேன்...

ரீமேக் படத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. இப்படத்தோடு நடிப்பதை விட்டுவிடாமல் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X