twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ருதி, அக்ஷராவை நினைத்துப் பெருமைப்படுகிறேன் - கமல் ஹாஸன்

    By Shankar
    |

    ஸ்ருதி ஹாசன், அக்ஷரா வளர்ச்சியை நினைத்துப் பெருமைப் படுகிறேன் என்று கமல் ஹாஸன் கூறினார்.

    கமலின் மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா இருவருமே இப்போது முன்னணி நாயகிகள் ஆகிவிட்டனர். அவர்கள் போக்கிலேயே அவர்களை விட்டுவிட்டார் கமல்.

    உத்தம வில்லன் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி:

    பாலச்சந்தருடன்

    பாலச்சந்தருடன்

    உத்தம வில்லன் படம் நினைத்த மாதிரி சிறப்பாக வந்துள்ளது. இதில் இயக்குநர் பாலசந்தர் நடித்து இருக்கிறார். அவரிடம் நான் வேலைப் பார்த்தவன் என்பதால், அவருடன் நடிக்கும்போது வித்தியாசமாக எதையும் உணரவில்லை.

    ஆனாலும் உத்தமவில்லன் படத்தில் அவர் நடித்து இருப்பது முக்கியமானதாக கருதுகிறேன். நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டு இருந்த ஒரு விஷயம் முடிந்த மாதிரி இருக்கிறது.

    விமர்சனங்களை வரவேற்கிறேன்.

    விமர்சனங்களை வரவேற்கிறேன்.

    விமர்சகர்கள்தான் சிறந்த நடிகர்களை உருவாக்கும் சிற்பிகள். நல்ல விஷயங்களை பாராட்டுகிறார்கள். அது போல் தவறுகளை சுட்டி காட்டுகிறார்கள். படங்கள் வெற்றி பெறும் போது மகிழ்ச்சி அடைவது போல் விமர்சனங்களை பார்த்தும் சந்தோஷப்படுகிறேன்.

    திறமை மிகுந்த இளைஞர்கள்

    திறமை மிகுந்த இளைஞர்கள்

    திரையுலகில் இன்றைய இளைஞர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். பலரின் பெயர்கள் கூட தெரியவில்லை. ஆனால் பெரிதாகச் சாதிக்கிறார்கள். பொறாமை கூட வருகிறது.

    ஆஸ்கர் விருது

    ஆஸ்கர் விருது

    இவர்கள் அமெரிக்காவில் இல்லை. என்னைப் பொருத்தவரை ஆஸ்கார் விருது பெரிய விஷயமாக தெரியவில்லை. அதற்காக பயணப்படும் நோக்கமும் இல்லை.

    நமது படங்களை உலக அளவில் கொண்டுபோக வேண்டும் என்பதுதான் முக்கியம் நமது வாழ்க்கை மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    என்னை பொறுத்த வரை ரசிகர்கள் தான் முக்கியமானவர். பணம், புகழ் வரும் போகும். ஆனால் ரசிகர்களை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வது தான் சிறப்பானது.

    அக்ஷராவிடம் கெஞ்சினேன்

    அக்ஷராவிடம் கெஞ்சினேன்

    என் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராவை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அக்ஷராவை அவ்வை சண்முகி படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தேன். ஆனால் அக்ஷராவுக்கு விருப்பம் இல்லை கெஞ்சினேன். மூன்று நாள் தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தார். இப்போது அக்ஷராவை ஷமிதாப் படத்தில் பால்கி நடிக்க வைத்து விட்டார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    பசியோடு இருக்கட்டும்

    பசியோடு இருக்கட்டும்

    ஸ்ருதி வளர்ந்த பிறகும் லட்சியத்தை அடைய வில்லை என்கிறார். இப்படி பசியோடு இருப்பது தான் நல்லது. அது இன்னும் வளர்ச்சியை ஏற்படுத்தும். திரைப்பட விழாக்களில் நான் பங்கேற்பதில்லை. இப்போது அது அரசியல் ஆகிவிட்டது," என்றார்.

    English summary
    Kamal Hassan said that he is feeling proud about his daughters Shruthi Hassan and Akshara.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X