கதையை மாற்றியதால்நடிக்க மறுத்த கமலினி

By Staff

கரு. பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் படத்தின் கதையை சொல்லாமல் கொள்ளாமல் மாற்றியதால் தான் அப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக நடிகை கமலினி முகர்ஜி கூறியுள்ளார்.

வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் கமலினி முகர்ஜி. இந்தப் படத்தைத் தொடர்ந்து கரு. பழனியப்பன் இயக்க, சேரன் ஹீரோவாக நடிக்க பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடிக்க புக் ஆனார்.

முதல் ஷெட்யூலில் நடித்து முடித்த நிலையில் திடீரென கமலினியைத் தூக்கி விட்டு சினேகாவை ஹீரோயினாக்கி விட்டனர். கமலினியின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால்தான் அவரை படத்திலிருந்து தூக்கியதாக கரு.பழனியப்பன் சமீபத்தில் செய்தியாளர்களை அழைத்துக் கூறினார்.

ஆனால் அதை கமலினி மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,

எனது கால்ஷீட் இல்லாததால்தான் என்னை மாற்றியதாக கரு.பழனியப்பன் கூறியுள்ளார். ஏன் அவர் அப்படிக் கூறினார் என்று தெரியவில்லை.

படத்துக்குப் போதுமான கால்ஷீட்டை நான் கொடுத்திருந்தேன். இந்த நிலையில்தான் இயக்குநரும், ஹீரோவும் படத்தின் கதையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது எனக்குத் தெரிய வந்தது. இதையடுத்தே நான் விலகிக் கொள்ள முடிவு செய்தேன்.

அவர்கள் முடிவு செய்த புதிய கதைக்கு நான் பொருந்த மாட்டேன். புதிய கதையில் ஹீரோயினுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டார்கள்.

நான் நடித்த ரோலில் இப்போது சினேகா நடிப்பது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. அது அவரது விருப்பம். அதில் நான் தலையிட முடியாது.

இப்போது நான் தெலுங்கில் பிசியாக உள்ளேன். பவன் கல்யாணுடனும், திருவிக்ரம் படத்திலும் நான் நடித்து வருகிறேன். சத்யநாராயணா இயக்கத்திலும் நடித்து வருகிறேன். பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் கதை இது.

தமிழ் படத்தில் நடிப்பது தொடர்பாகவும் சில பேச்சுக்கள் நடந்து வருகின்றன. இன்னும் முடிவாகவில்லை என்றார் கமலினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X