»   »  கிளாமரும், காம்னாவும்!

கிளாமரும், காம்னாவும்!

Subscribe to Oneindia Tamil

நடிப்பில் மட்டுமல்ல, வெறும் கிளாமரிலும் கூட இதயங்களை வருட முடியும் என்று புதுசு புதுசாக பேசுகிறார் காம்னா.

இதயத் திருடன் நாயகியான காம்னாவுக்கு, ரசிகர்களின் இதயத்தை மட்டும் திருட முடியவில்லை. முதல் படமே கவிழ்த்து விட்டு விட்டதால்,தொங்கிப் போனது காம்னாவின் முகம். இருந்தாலும் விளம்பரங்கள் மூலம் அவ்வப்போது தலையைக் காட்டி வந்த காம்னாவுக்கு இடையில்தெலுங்கு கொஞ்சம் கை கொடுத்தது. இப்போது மறுபடியும் தமிழுக்கு வந்துள்ளார், மச்சக்காரன் மூலம்.

நல்ல உடல் கட்டு, செமத்தியான கிளாமர் வெட்டு, இப்படி எல்லாம் பக்காவாக இருந்தும் ஏன் அதிக படங்களில் உங்களைப் பார்க்க முடியவில்லைகாம்னா?

இதயத் திருடன் நல்ல படம்தான். ஆனால் ரசிகர்களால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் எனக்கும் அதிக வாய்ப்புகள் வரவில்லை.அதேசமயம், முதல் படத்தை முடித்து விட்டு நான் தெலுங்குக்குப் போய் விட்டேன். அங்கு 2 படங்களில் நடித்தேன். இப்போது கூட இரண்டுபடங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்.

இந்த சமயத்தில்தான் மச்சக்காரன் வாய்ப்பு வந்தது. அதனால் மறுபடியும் தமிழுக்கே வந்து விட்டேன் என்று விளக்கினார்.

மச்சக்காரனில் நடிப்பை விட கிளாமருக்குத்தான் ஜாஸ்தி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களாம். முழு நீள கிளாமருக்கு காம்னாவும், ஓ.கே.சொல்லி விட்டாராம். ஏன் என்று கேட்டால், கிளாமர் காட்டுவது சுலபமல்ல சார். அதிலும் கூட ரசிகர்களைக் கவரும் வகையில் இருந்தால்தான்முகம் சுளிக்காமல் பார்ப்பார்கள். இல்லாவிட்டால் அய்யய்யே என்று அறுவறுப்பு வந்து விடும் என்று அதற்கும் ஒரு விளக்கத்தை தூக்கி வீசுகிறார்.

கவர்ச்சியும், நடிப்பும் ஒரு சேர இணைந்து போனால்தான் கேரக்டரை ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள். இதில் ஏதாவது ஒன்றில் சுணக்கம் இருந்தால்கூட அவ்வளவுதான், நாம காலி என்கிறார் காம்னா.

காம்னா, காமனாவா மாறாம இருந்தால் சரி!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil