twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கனா காணும் காலங்கள் புலி ஞாபகம் இருக்கா.. வெறும் பத்து லட்சத்துல படம் இயக்கி இருக்காரு!

    |

    சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் 'புலி' எனும் காமெடி ரோலில் நடித்த நடிகர் ராகவேந்திரன் ரவி, இப்போ இயக்குநர் ஆகி உள்ளார்.

    வெறும் பத்து லட்சத்தில் 'மிஸ்டர் ஒயிட்' எனும் படத்தை இயக்கி உள்ள அவர், பல உதவி இயக்குநர்களுக்கும், இளம் இயக்குநர்களுக்கும் பட்ஜெட்டை குறைத்து, சிக்கனமாக எப்படி தரமான ஒரு படத்தை இயக்கலாம் என்ற டிப்ஸ்களை தனது வாழ்க்கை அனுபவத்தில் இருந்தே எடுத்துக் கூறி இருக்கும் பேட்டி நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி உள்ளது.

    Kanaa Kaanum Kalangal fame Raghavendran Ravi directs a low budget movie!

    குறும்படங்களை இயக்கி பயிற்சி பெற்ற சென்னையை சேர்ந்த ராகவேந்திரன் ரவி இயக்கியுள்ள படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

    குறைந்த செலவில் 25க்கும் மேற்பட்ட நடிகர்களை வைத்து அவுட் டோர் ஷூட்டிங்கெல்லாம் செய்து தான் எப்படி படம் இயக்கினேன் என்ற அனுபவத்தை இந்த இளம் இயக்குநர் அழகாக பகிர்ந்துள்ளார்.

    பிகினியில் புதுவித யோகா.. ஈஷா குப்தாவின் அட்டகாசமான போஸ்!பிகினியில் புதுவித யோகா.. ஈஷா குப்தாவின் அட்டகாசமான போஸ்!

    பொதுவாக படம் இயக்க வேண்டும் என்றால், குறைந்தது ஒரு கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என்ற பேச்சு கோலிவுட்டில் பேசப்படுவது வழக்கம்.

    பல இயக்குநர்கள், 50 லட்சம் ரூபாய், 40 லட்சம் ரூபாய் வரை எல்லாம் படத்தை இயக்கி ஹிட் ஆக்கி சாதனை படைத்துள்ளனர்.

    அந்த வரிசையில், தற்போது வெறும் பத்து லட்சத்தில் இவர் இயக்கி உள்ள படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். இவரது முழு பேட்டியை காண வீடியோவை பாருங்கள்!

      English summary
      Kanaa Kaanum Kalangal fame Puli kutti aka Raghavendran Ravi directs a low budget movie with minimum cost of 10 lakhs, latest V Connect chat, he reveals about his work and other details.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X